cooperative fair price shops Salesman and Packer posts: தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள 1,714 விற்பனையாளர்கள் மற்றும் 176 கட்டுநர்கள் என மொத்தம் 1,890 பணியிடங்களை உடனடியாக நிரப்ப கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்
பொதுவாக, ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும். எந்தவித எழுத்து தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தத் தேர்வு நடைமுறைகளுக்குக் கூடுதல் காலதாமதம் ஆகும் நிலை உள்ளது. இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் எவ்விதத் தடையோ சிரமமோ ஏற்படக் கூடாது என்பதற்காக, பயிற்சி பெற்ற தகுதியான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு மாற்று ஏற்பாடாகத் தற்காலிகமாக ஆட்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விற்பனையாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பும், கட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, நியாயவிலைக் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இதற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அங்கம் வகிக்கும் சுய உதவிக் குழு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு, முறையான தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். மேலும், வங்கிக் கடன் நிலுவை ஏதும் இல்லாத குழுவாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் ஏதும் இல்லாததும் அவசியமாகும். அரசுப் பணியில் உள்ளவர்களோ அல்லது கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் நெருங்கிய உறவினர்களோ இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இக்குழுவால் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணி வழங்குவதற்கு முன்பாக, மின்னணு விற்பனை இயந்திரம் (ePoS) இயக்குதல், கைரேகை மற்றும் கருவிழி பதிவு, தினசரி வசூல் தொகையைச் செலுத்துதல் மற்றும் இருப்புப் பதிவேடுகளைப் பராமரித்தல் குறித்துத் துணைப் பதிவாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் மூலம் முறையான அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் தற்காலிகப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 400 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு மாதத்திற்கு விற்பனையாளருக்கு அதிகபட்சமாக 7,500 ரூபாயும், கட்டுநருக்கு 6,600 ரூபாயும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.அதேசமயம், இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை மட்டுமே இவர்கள் பணியில் தொடர முடியும். பணி வரன்முறையோ, நிரந்தரமோ அல்லது அரசுப் பணிக்கு முன்னுரிமையோ கோர முடியாது என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 10,000 ரூபாய் பிணை வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை டிச.2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.







