மாதம் ரூ.10,560 முதல் ரூ.15,650 வரை பயிற்சியுடன் உதவித்தொகை... ரைட்ஸ் நிறுவனத்தில் உடனே விண்ணப்பிங்க

    மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் ஓராண்டு கால பயிற்சிக்கு 281 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். நவம்பர் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்கனாமிக் சர்வீஸ் (RITES) நிறுவனத்தில், ஓராண்டு கால பயிற்சிக்கு 281 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியான இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பல்வேறு பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஐ.டி.ஐ., பொறியியல் டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் காலம் மொத்தம் ஓராண்டு ஆகும்.பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு ரூ.15,650, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.13,450, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு ரூ.10,560 வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள பணியிடத் தேவைக்கு ஏற்ப பயிற்சி இடம் ஒதுக்கப்படும்.

தேர்வு முறை எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் இருக்காது. விண்ணப்பதாரர்கள் தங்களது படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும், குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண்களும் தேவை.

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் NATS இணையதளத்திலும், ஐ.டி.ஐ. முடித்தவர்கள் NAPS இணையதளத்திலும் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ரைட்ஸ் நிறுவனத்தின் தனி விண்ணப்பப் படிவத்தில் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கவும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள் நவம்பர் 25 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.rites.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment