Showing posts with label TNPSC Exams. Show all posts
Showing posts with label TNPSC Exams. Show all posts

TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.

 TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.

IMG-20251203-WA0033_wm

3935 கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் . வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் அன்று வெளியிடப்பட்டது . கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை ( 26.09.2025 ) அன்று வெளியிடப்பட்டது . தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று ( 03.12.2025 ) வெளியிடப்பட்டுள்ளது . அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.


2025 - ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தேர்வு IV ( தொகுதி IV பணிகள் ) மூலம் கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் ( வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக ) , ஒரு நிதியாண்டிற்கு ( 2025 26 ) 5101 காலிப் நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன . 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட ( 3560 ) ஒப்பிடும்போது , 2025 - ம்ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.


TNPSC Annual Planner 2026 - Published

 Click Here to Download - TNPSC Annual Planner 2026

Note :


This planner is tentative so as to enable the candidates to prepare themselves for the examination


There may be addition or deletion to examinations mentioned in the planner.


The vacancies will be announced in the notification.


The syllabus and the scheme of examination are available on the Commission’s website www.tnpsc.gov.in, which are also subject to modification till the date of publication of notification.


Please visit the Commission's website for updates regarding notification.

Election, Anti-Defection & Rule of Law Notes PDF – தேர்தல், பதவி விலகல் தடுப்பு & சட்ட ஆட்சி விளக்கம்!

 Election, Anti-Defection & Rule of Law என்பது இந்திய அரசியல் அமைப்பின் முக்கியமான அடித்தளமான topics. TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB PC & SI, SSC, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் Polity பகுதியில் இந்த concepts மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.

இந்த PDF short notes + clear explanations + quick revision charts வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Polity-யில் mark secure பண்ணவேண்டும் என்றால், இந்த மூன்று topics must study chapters தான்.

Click here to download 

19th & 20th Century Socio-Political Movements & Rationalism in TN – Notes PDF 📘✨(தமிழகத்தின் சமூக-அரசியல் இயக்கங்கள் & பகுத்தறிவின் வளர்ச்சி!)

 19ஆம் & 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான சமூக-அரசியல் இயக்கங்கள் மற்றும் Rationalism (பகுத்தறிவு) வளர்ச்சி என்பது TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து கேட்கப்படும் மிக முக்கியமான History & Social Reform topic.

இந்த PDF simple language-ல, diagram-style notes + quick revision points வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதால் Social Reform topics மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

Click here to download 


TNPSC போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


டிஎன்​பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்​றும் 4 உள்​ளிட்ட போட்​டித் தேர்வுகளுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நவ.2-ம் தேதி முதல் நடக்​க​வுள்​ளது. 2026-ம் ஆண்​டு்க்​கான போட்​டித் தேர்வு கால அட்​ட​வணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.‌ இதற்கான பாடத்​திட்​டங்​களின்​படி தேர்​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் பயிற்சி வகுப்​பு​கள் நடத்த அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புப் பயிற்சி மையம் திட்​ட​மிட்​டுள்​ளது.


திறமைமிக்க பயிற்​றுநர்​களைக் கொண்டு வகுப்​பு​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. மேலும் மாதிரித் தேர்​வு​களு​டன் கூடிய கலந்​துரை​யாடல் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வுள்​ளது. அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து கட்​ட​ணமில்​லாமல் இந்த பயிற்சி வகுப்​பு​களை கடந்த 14 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்​கும் மேற்​பட்​டோர் மத்​திய, மாநில அரசு பணி​களில் இணைந்​துள்​ளனர்.


இப்​ப​யிற்சி வகுப்​பில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​களும், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய அனைத்​துப் பிரிவு மாணவர்​களும் கலந்து கொள்​ளலாம். சென்​னை-1 பாரி​முனை 6/9, அக்​ரஹாரம் சந்து (கச்​சாலீஸ்​வரர் ஆலயம்) அரு​கில் உள்ள அரண்​மனைக்​காரன் தெரு​வில் அமைந்​துள்ள இக்​கல்வி மையத்​தில் நவ.2. முதல் வகுப்​பு​கள் தொடங்க உள்​ளன.


வாரம்​தோறும் சனி மற்​றுமஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 9.30 மணி​முதல் மாலை 4.45 மணி வரை​யில் வகுப்​புகள் நடை​பெறும். ஆர்வமுள்ள தேர்​வர்​கள் முன்​ப​திவு செய்​வதுடன் பாஸ்​போர்ட் அளவி​லான புகைப்​படம் மற்​றும் முகவரி ஆதார நகலுடன் வரவேண்​டும். கூடு​தல் விவரங்​களுக்கு 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712 எண்​களை தொடர்​பு கொள்​ளலாம்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 4 online Certificate Verification - Candidate List Published

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 TNPSC Group 4 online Certificate Verification - Candidate List வெளியானது


Resister Number வைத்து Check  செய்து கொள்ளுங்கள்

The list of Register Number of candidates who have been provisionally admitted Onscreen Certificate Verification on the results of the Examination conducted by the Commission on 12.07.2025 F.N and Rank published on 22.10.2025 are mentioned below .


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - Model Question Paper

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG-20250918-WA0026

TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.

IMG-20250918-WA0027

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11 : 2025 , நாள் 15.07.2025 - ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் தொகுதி II மற்றும் IIA பணிகள் ) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 மு.ப . தேதியில் நடைபெற உள்ளது.

 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ( Hall தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in . ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் ( OTR DASHBOARD ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 4 Exam: நேரடி கேள்விகள் கம்மி... கட் ஆப் குறைய வாய்ப்பா?

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNPSC Group-4 Exam Cut Off marks: 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்து கொண்டதை பார்க்கலாம்.
இதுகுறித்து தேர்வர் முத்துசாமி கூறுகையில், நான் மூணு வருஷமா தேர்வு எழுதிட்டு வர்றேன். குரூப் 4 எக்ஸாம் பொறுத்தவரைக்கும் மொத்தம் 200 மார்க் கேள்விகள் கேட்கப்படும். அதுல ‌100 மார்க் தமிழ் பாடத்திலையும், கணித பாடத்தில் 25 மதிப்பெண்ணும், பொது அறிவில் 75 மதிப்பெண்ணும் கேட்கப்படும். சமீபத்திய காலங்களில்    தமிழ்நாடோட வளர்ச்சி நிர்வாக முறைகளை பற்றிய கேள்விகள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த ஆண்டு தேர்வில் கூட தமிழக அரசு சமீபத்தில வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. பொது அறிவுதாள் தான் கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்திருக்கு. இந்த முறை தமிழ்ல கேள்விகள் கொஞ்சம் கஷ்டமா கேட்டு இருக்காங்க. குரூப் 2வ விட குரூப் 4 தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததாகவும் தெரிவித்தார்.

கணக்கு பாடத்துல கேள்விகள் கஷ்டமாவும், ஈசியாவும் இருந்துச்சு.  கலவையான உணர்வு கிடைத்தது. பொது அறிவு ஓரளவுக்கு யூகிக்கிற அளவுல தான் இருந்தது. தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததால இந்த முறை கட் ஆஃப் மார்க் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு முந்தைய தேர்வுகளில் எல்லாம் நேரடியான கேள்விகள் கேட்கப்படும்.  ஆனால் தற்போது நிறைய ஸ்டேட்மெண்ட் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதாவது ஏ,பி,சி,ஆப்ஷன் அந்த மாதிரி இல்லாமல். எந்தக் கூற்று சரி போன்ற பதில்கள் கொஞ்சம் குழப்பமடையும் வகையில் கேட்கப்படுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக படித்தவர்களுக்குத் தான் இது எளிமையானதாக இருக்கும். எனவே நாம் படிக்கும் போதே நல்ல தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம்

       Education News (கல்விச் செய்திகள்)

IMG-20250715-WA0023

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும்.


அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் குரூப்-2, குரூப்-2 (ஏ) இரு தேர்வுகளுக்கும் பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.


இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 (ஏ) தேர்வில் குறைந்தபட்சம் 2,000 காலியிடங்களாவது வரும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், குரூப்-2 , குரூப்-2(ஏ) தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

TNPSC : குரூப் 4 - புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்)

newproject99copy-1713964573-1717646041

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும்கூட மதிப்பெண் பகிர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கிறது. இது தேர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.

எந்தப் பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும் என்றும், கடினமான சில பாடங்களை ஒதுக்கியும்கூடத் தேர்வர்கள் திட்டமிடலாம். எந்தெந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.


திட்டமிடல் அவசியம்: பொது அறிவியல் (5 கேள்விகள்), புவியியல் (5), இந்தியாவின் வரலாறு பண்பாடு - இந்திய தேசிய இயக்கம் (10), இந்திய ஆட்சியியல் (15), இந்தியப் பொருளாதாரம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் (20), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள் (20) என்று பொது அறிவு பாடத்திட்டத்துக்கு மதிப்பெண் பிரிக்கப்பட்டுள்ளது. திறனறிவுப் பகுதிக்கு 15 கேள்விகளும் காரணவியல் பகுதிக்கு 10 கேள்விகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


இதில் பல தேர்வர்கள் கடினமாகக் கருதும் பகுதி அறிவியல் பகுதிதான். அறிவியல் பகுதிக்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியை நீங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற பாடங்களைப் படித்தால்கூடப் போதுமானது.


.


ஆப்டிடியூட் பகுதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு பயிற்சியையும் தவிர்க்கக் கூடாது. மிகக் குறைந்த பாடத்திட்டத்தில் 25 கேள்விகள் கேட்கப்படுவதால் இந்தப் பகுதி உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.


தமிழ்த் தகுதி - மதிப்பீட்டுத் தேர்வைப் பொறுத்தவரை கட்டாயப் பாடமாக இருக்கிறது. இலக்கணத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இலக்கணம் என்றால் பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், குறில் நெடில் வேறுபாடு, இன எழுத்துகள், வினா வகை, ஒருமை பன்மை அறிதல், வேர்ச்சொல் அறிதல், பெயரெச்ச-வினையெச்ச சொற்கள், எதிர்ச்சொல் எழுதுதல் போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோலத் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்கிற பகுதியிலிருந்து 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.


வாசித்துப் புரிந்துகொள்ளுதல், கலைச்சொற்கள், எழுதும் திறன் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து 40 வினாக்கள் வருகின்றன. ஒரு பத்தியைக் கொடுத்து அதிலிருந்து கேள்விகள் கேட்கும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் இருந்து தொடங்குகிறது.


உங்களுக்குத் தேவையான விடைகள், கொடுக்கப்பட்டுள்ள பத்தியிலே இருக்கும். தேடி எழுத வேண்டியதுதான். மேலும் பல துறைகளைச் சேர்ந்த கலைச் சொற்கள் கொடுக்கப்பட்டு, அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கேட்கப்படும் பகுதி ஏற்கெனவே இருந்தது. தற்போது அந்தப் பகுதியில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


சொல் அகராதி என்கிற பகுதியில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல், ஒரு பொருள் தரும் பல சொற்கள், கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் போன்றவை. இந்தப் பகுதிகளுள் அனைத்துமே எளிமையானவை. எனவே, எளிதாக மதிப்பெண் எடுக்கலாம்.


- கட்டுரையாளர்: போட்டித்தேர்வுப் பயிற்சியாளர்; 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250702_185131

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர் விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )