July 2023 - Agri Info

Adding Green to your Life

July 29, 2023

உங்கள் குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படுவதை தடுப்பது எப்படி..? இதை செஞ்சு பாருங்க..!

July 29, 2023 0
உங்கள் குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படுவதை தடுப்பது எப்படி..? இதை செஞ்சு பாருங்க..!

 உங்கள் செல்ல குழந்தைகளின் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட உங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த குட்டி, குட்டி விரல்களால் உங்களை முதல் முறை வருடும் போதும் சரி, குழந்தைகள் தவழ்ந்து, நடக்கத் தொடங்கிய போதும் சரி, மழலை மொழியில் பேசும் போதும் சரி நம் மனம் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் திளைக்கும்.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் போது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் நம் பார்த்து பார்த்து செய்வோம். ஆனால் குழந்தைகளின் உடல்நலன் நம்மை அவ்வப்போது கவலை அடைய செய்யும் விஷயமாக அமைந்து விடுகிறது.

ஒரு பெற்றோராக குழந்தையை வளர்த்தெடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. மிகுந்த சவால்கள் மற்றும் அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை இதற்கு தேவைப்படுகிறது. குழந்தை வளர்ச்சி அடைய ஊட்டச்சத்து உள்ள மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பதே மாபெரும் சவாலாக உள்ளது.

எப்படியாவது ஏதோ ஒருமுறை துரித உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டு விட்டால், அதற்குப் பிறகு அதன் பின்னாடியே குழந்தைகளின் மனம் அலைபாயத் தொடங்கி விடுகிறது. அடம்பிடித்தாவது துரித உணவுகளை நம் கையாலேயே வாங்கி கொடுக்க வைத்து சாப்பிடுவதை குழந்தைகள் பழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

இவ்வாறு துரித உணவுகளை சாப்பிடுவதால் இளம் வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவதோடு பிற்காலத்தில் பல்வேறு விதமான நோய்களுக்கு அதுவே அடிப்படையாக அமைந்து விடுகிறது. ஆகவே கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளிடம் துரித உணவு பழக்கத்தை நாம் விரட்டி அடிக்க வேண்டும்.

நாமே முன்னுதாரணம் : வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு துரித உணவுகள் என்பது பறந்து வந்து கிடைத்து விடாது. எங்காவது ஏதோ ஒரு சமயத்தில் நாம் துரித உணவுகளை சாப்பிட்டிருப்போம். அப்போது குழந்தைகளுக்கும் அதனை பகிர்ந்து இருப்போம். அதுதான் பழக்கத்திற்கு அடிப்படை. ஆகவே குழந்தைகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றால் நாமும் அதை முற்றாக தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட ஊக்குவிக்க வேண்டும்.

விளைவுகளை எடுத்துச் சொல்லவும் : துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நலனுக்கு எந்த விதமான தீங்குகள் ஏற்படும் என்பதனை குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும். அதேசமயம் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் குழந்தைகளின் பங்கு : ஆரோக்கியமான வகையில் இன்றைக்கு என்ன உணவு செய்யலாம், அதற்கு என்னென்ன தேவை, அதை எப்படி செய்யலாம் என்பதை குழந்தைகளிடம் ஆலோசனை செய்யுங்கள். அவர்களுக்கு தெரியாவிட்டாலும் இது குறித்து பேசும்போது அவர்கள் மனதில் ஆரோக்கியமான உணவுகள் குறித்த ஆர்வம் மற்றும் பிடிப்பு அதிகரிக்கும்.

எப்போதாவது ஒருமுறை : இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகளை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டால், என்றைக்காவது ஒரு முறை அல்லது ஏதேனும் விசேஷ சமயங்களில் மட்டும் இதனை குழந்தைகள் சாப்பிடுமாரு நாம் கட்டுப்பாடுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : வீட்டில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பழங்கள், முழு தானியங்கள், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பண்டங்கள், நட்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முட்டையின் மஞ்சள் கரு உடல் நலனுக்கு தீங்கானதா..? அவசியம் அறிய வேண்டிய உண்மை..!

July 29, 2023 0
முட்டையின் மஞ்சள் கரு உடல் நலனுக்கு தீங்கானதா..? அவசியம் அறிய வேண்டிய உண்மை..!

 முட்டையின் மஞ்சள் கரு உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து நீண்ட காலமாகவே விவாதம் நடைபெற்று வருகிறது. மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் நம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதி பெரும்பாலான மக்கள் அதனை ஒதுக்கி விடுகின்றனர்.

இன்னும் சிலர் ஒட்டுமொத்தமாகவே முட்டையை தங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆனால் உண்மையாகவே முட்டை ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து நாம் விரிவாக பார்க்க வேண்டி இருக்கிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர் மிடேன் ககையா கூறுகையில், “முட்டையின் மஞ்சள் கரு தீங்கு விளைவிக்கும் என்று பரவலான நம்பிக்கை இருந்தாலும் அது கட்டுக்கதை தான். உண்மையை சொல்ல போனால் காலை உணவிலேயே முட்டையை நாம் சேர்த்துக் கொள்ளலாம். நம் உணவு பட்டியலில் அது இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டாம்

மற்றவர்களைப் போலவே மஞ்சள் கரு தீங்கானது என்று கருதி அதனை தூக்கி எறிவதற்காக முட்டையை இரண்டாக உடைத்த நபர்களில் நீங்களும் ஒருவரா! எத்தனை முறை இதுபோன்று தூக்கி எறிந்திருப்பீர்கள். மஞ்சள் கருவை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்து இதய நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று நினைத்துள்ளீர்களா? உங்கள் கவலையை ஒதுக்கி விடுங்கள்.

கடந்த 1968 ஆம் ஆண்டில் அமெரிக்க இதய நல சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

உணவு மூலமாக சேர்கின்ற கொலஸ்ட்ரால் ரத்தத்தில் நேரடியாக கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கும் என்ற தன்மையின் அடிப்படையில் இந்த அறிவுரையை அந்த சங்கம் வழங்கியிருந்தது. எனினும் நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும், ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விரிவான ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக ககையா தெரிவித்தார். ஆகவே முட்டையின் மஞ்சள் கரு குறித்து கவலை கொள்ள தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

முட்டையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நீங்கள் கவலைப்படுவதை காட்டிலும், அதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன என்பதனை சிந்தித்துப் பார்த்தால் அதன் நன்மை உங்களுக்கு புரிய வரும். முட்டையில் A, D, E, K, B1, B2, B5, B6, B9, B12 ஆகிய ஊட்டச்சத்துக்களும், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற மினரல்களும் உள்ளன. இவையெல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடியவை மற்றும் எலும்புகளை வலுவூட்டக்கூடியவை. ரத்தசோகை போக்குவதற்கு இரும்பு சத்து மிகவும் உதவியாக இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

July 27, 2023

இந்த 6 ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இத்தனை பாதிப்புகள் வருமா..? அறிகுறிகளை கவனிக்க மறந்துடாதீங்க..!

July 27, 2023 0
இந்த 6 ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இத்தனை பாதிப்புகள் வருமா..? அறிகுறிகளை கவனிக்க மறந்துடாதீங்க..!

 நம் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளையும், அதனால் ஏற்படும் அறிகுறிகளையும் நாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. வழக்கமாக, நம் உடலில் போதுமான விட்டமின்களும் மினரல்களும் இல்லாத காரணத்தால் தான் நமக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். அதையும் கூட நாம் தெரிந்துகொள்ளாமல் தான் இருப்போம்.

வறண்ட சருமம், குறட்டை, வறட்சியான கண்கள், ஈறுகளில் ரத்தப்போக்கு போன்றவை விட்டமின், மினரல் குறைபாட்டால் ஏர்படும் அறிகுறிகளாகும். இப்படி நம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான குறைபாடுகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பது குறித்து, எல்லாருக்கும் புரியும் வகையில் கேள்வி – பதில் வரிசையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுட்டுள்ளார் டாக்டர்.விஷாகா. சரிவிகித டயட்டின் முக்கியத்துவம் குறித்தும், நமது ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவைப்படும் ஊட்டச்சத்துகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நெல்லை இளைஞர்கள் கவனத்திற்கு.. ஜூலை 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்..

July 27, 2023 0
நெல்லை இளைஞர்கள் கவனத்திற்கு.. ஜூலை 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்..

 திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்வி சான்று உள்ளிட்ட அனைத்து தகுதி சான்றுகளுடன் நேரில் வரவேண்டும். இதில் பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.

வேலை தேடுபவர்களும், வேலை அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் டெலிகிராம் சேனலில் இணைந்து அறிந்து கொள்ளலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதற்கான பாடகுறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.



here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

July 26, 2023

ரூ.6000 ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு மிதியடிகள் தயாரிக்கும் பயற்சி.. எங்கே தெரியுமா?

July 26, 2023 0
ரூ.6000 ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு மிதியடிகள் தயாரிக்கும் பயற்சி.. எங்கே தெரியுமா?

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென்னை நார் வாரியத்தின் உதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உன்னத் பாரத் அபியான் (UNNAT BHARAT ABHIYAN)எனும் மத்திய அரசின் கிராமப்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சியானது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு தற்போது இப்ப பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக தென்னை நார் பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இப்ப பயிற்சியின் மூலம் மிதியடிகள் (FLOOR MAT) தயாரிப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

தென்னை நாரிலிருந்து மிதியடிகள் தயாரிப்பதற்கான இப்பயிற்சி இரண்டு மாதங்கள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் பெண்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் 6000 ரூபாய் தென்னை நார் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான நீலக்குடி, நாகக்குடி, கருநாகநல்லூர், தியாகராஜபுரம், சாகரமங்கலம், பண்ணைவளகம், செங்கமேடு, ஆதமங்கலம், எட்டியலூர் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களை இருந்து தற்போது பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரையில் 9 குழுக்களாக பயிற்சிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 10 வாது குழுவிற்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் மதிப்பிலான மிதியடிகள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் பயிற்சிகளை பெற்று தொழில் வளர்ச்சியில் மேம்பட வேண்டும் என்பதே இத்த உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் நோக்கமாகும்.

here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 

கிராமத்தில் பணம் சம்பாதிக்க அட்டகாசமான 5 பிஸினஸ் ஐடியாக்கள்!!

July 26, 2023 0
கிராமத்தில் பணம் சம்பாதிக்க அட்டகாசமான 5 பிஸினஸ் ஐடியாக்கள்!!

நீங்களே ஒரு தொழில்முனைவோராக மாறுவது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும். கிராமத்தில் வசதியாக தொடங்கக்கூடிய 5 தொழில்களைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறோம்.

மில் அமைப்பது மிகச் சிறந்த சிறு வணிகமாகும். கிராமங்களில், பெரும்பாலான மக்கள் கோதுமை, ஓட்ஸ், அரிசி, சோளம் மற்றும் பார்லி போன்ற பல்வேறு தானியங்களை பயிரிடுகின்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பதப்படுத்த நகர ஆலைகளையே சார்ந்துள்ளனர். இது அவர்களுக்கு கடினமானதோடு செலவும் அதிகம். கிராமத்திற்குள் மில் இருந்தால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்காக நகரத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போகும். நீங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெறுவீர்கள், இங்கிருந்து நீங்கள் பொருட்களை நகரங்களிலும் விற்க முடியும்.

உங்கள் அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வேறு ஊருக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தால் அது கடினமானது. பல கிராம மக்கள் இப்பிரச்னையை சந்திக்க வேண்டியுள்ளது. தங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் கடை இருந்தால், அவர்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. ஊர் மக்களின் வசதியும் உங்கள் லாபமும் கைகூடும்.

உலகெங்கிலும் எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த இயற்கை இழைகளில் ஒன்று சணல். சணல் நார் மக்கும் தன்மையுடையது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது. எனவே, நீங்கள் கிராமத்தில் ஒரு சிறு வணிகத்தை அமைக்க விரும்பினால், சணல் பை உற்பத்தி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள இல்லத்தரசிகள் மற்றும் பிற பெண்களுக்கு இது ஒரு அற்புதமான சிறிய அளவிலான வணிகமாகும்.

கிராமத்தில் உள்ளவர்கள் நாகரீகமான ஆடைகளை அணிவதில்லை என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஏனென்றால், அங்கு நல்ல துணிக்கடைகள் அங்கு இல்லை. கிராமத்து மக்களும் காலப்போக்கில் மாறிவரும் நாகரீகத்துடன் இணைய தயாராக உள்ளனர், அவர்கள் ஆடைகளை வாங்க பல நூறு கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை என்றால், அவர்கள் நிச்சயமாக நவநாகரீக மற்றும் புதிய நாகரீக ஆடைகளை அணிவார்கள். அதனால் ஒரு சிறந்த துணிக்கடை நல்ல வணிக யோசனையாக இருக்கலாம். இதன் மூலம் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

கிராமங்களில், விவசாயிகள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதற்கு பெரும்பாலும் பெரிய நகரங்களுக்கு செல்கிறார்கள். எனவே, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை சேமிப்பதற்கான சேமிப்பு வசதியை உருவாக்கினால், நீங்கள் வியாபாரத்தில் முதன்மையாக இருப்பீர்கள். கிராமத்தில் இந்த சிறிய அளவிலான வணிகத்திற்கு அதிக மூலதனம் தேவையில்லை.

here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


புதுச்சேரி பல்கலை. முதுகலை படிப்புகள்; ’க்யூட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

July 26, 2023 0
புதுச்சேரி பல்கலை. முதுகலை படிப்புகள்; ’க்யூட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பல்கலை கழகங்களில் முதுநிலை படிப்பிற்கு சேர்வதற்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடந்தது. அதன் முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புதுச்சேரி பல்கலையில் உள்ள முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணைய முகவரியில் கிடைக்கும். மேலும் தகவல் குறிப்பேட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC: தமிழக அரசு பஸ்களில் டிரைவர்- கண்டக்டர் ஆகணுமா? நோ எக்ஸாம்; நீங்க செய்ய வேண்டியது என்ன?

July 26, 2023 0
TNSTC: தமிழக அரசு பஸ்களில் டிரைவர்- கண்டக்டர் ஆகணுமா? நோ எக்ஸாம்; நீங்க செய்ய வேண்டியது என்ன?

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வந்தாச்சு அருமையான வேலைவாய்ப்பு. தேர்வு கிடையாது. எனவே, 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் தவிர மற்ற கழகங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 812

மண்டலம் வாரியான காலியிட விவரம்

கும்பகோணம் – 174

சேலம் – 254

கோயம்புத்தூர் – 60

மதுரை – 136

திருநெல்வேலி – 188

கல்வித் தகுதி : டிரைவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நடத்துனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கூடுதல் தகுதிகள் :

1. தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஜ்

2. அடிப்படை முதலுதவி சான்றிதழ்

3. 160 செ.மீ குறைவில்லாத உயரம்

4. குறைந்தபட்ச எடை 50 கிமீ

5. நல்ல கண்பார்வை மற்றும் பிற உடல் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல்

சம்பளம் : ரூ. 17,700 – 56,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. வயது, படிப்பு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமங்கள் ஆகியவை முன்னுரிமைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

1,876 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

July 26, 2023 0
1,876 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

 2023 ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு (Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces

Examination, 2023) அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:

பதவி: எண்ணிக்கை
மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர்

டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)

பதவிஎண்ணிக்கை
மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர்1,714
டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)109
டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (மகளிர்)53
மொத்தம்1,876

முக்கியமான நாட்கள்:

ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 22.07.2023

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 15.08.2023 (நள்ளிரவு 11 மணி வரை)

எழுத்துத் தேர்வு: எதிர்வரும் அக்டோபர் மாதம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமை கட்டாயமாகும்.

வயது வரம்பு: 01.08.2023 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.08.2003 க்குப் பின்பு பிறந்தவர்களும், 01.01.2002-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும், முன்னாள் இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக 3 ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.

விண்ணப்ப  கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

தெரிவு செய்யப்படும் முறை: முதல் தாள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில், தகுதி பெற்றவர்கள் இரண்டாம் தாள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ சோதனைக்கு வரவழைக்கப்படுவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும். ஆள்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யலாம்.


July 25, 2023

உங்கள் உயரத்தை அதிகரிக்கனுமா..? ஊட்டச்சத்து மிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...

July 25, 2023 0
உங்கள் உயரத்தை அதிகரிக்கனுமா..? ஊட்டச்சத்து மிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...

 நாம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உயரமாக வளர்வதற்கு இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் விளம்பரங்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை உண்மையாகவே உயரமாக வளர உந்து சக்தியாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நம் உடலின் உயரத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களை தூண்டுவதற்கு தேவையான சத்துக்கள் உணவுகளிலேயே உள்ளன. அவற்றை எடுத்துக் கொண்டால் நம் உயரம் அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு: பலவகை ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டால் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும். ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனிசியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

சர்க்கரைவள்ளி கிழங்கு : இனிப்பு கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளி கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்குகளில் விட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. இது நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயரத்தை அதிகரிக்கவும் உறுதுணையாக அமையும்.

முட்டை: குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரையில் முட்டையை வாடிக்கையாக கொடுத்து வந்தால் உரிய விட்டமின் டி சத்து கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கவும் இது வழிவகை செய்யும்.

பீன்ஸ் : நமக்கு அபரிமிதமான புரதச்சத்து கிடைக்க பீன்ஸ் விதைகளை எடுத்துக் கொள்கிறோம். இது நம் குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டக்கூடிய இன்சுலின் போன்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தயிர்: இளம் வயதில் தயிரை விரும்பி சாப்பிடாத குழந்தைகள் இருக்க முடியாது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய புரோபயாட்டிக் சத்துக்கள் இதில் உள்ளன. அதேபோல நம் உடல் உயரத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

சிக்கன்: உங்கள் குழந்தைகள் அசைவ விரும்பியாக இருப்பின் நீங்கள் தாராளமாக சிக்கன் கொடுக்கலாம். இதில் விட்டமின் பி2 மற்றும் இதர முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் உயரத்தை அதிகரிக்க உதவியாக அமையும்.

பெர்ரி பழங்கள்: அடர்த்தியான கரும் ஊதா நிறங்களை கொண்ட பெர்ரி பழங்களை பார்த்த உடனேயே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்புகளை பலப்படுத்தும்.

பச்சை இலை காய்கறிகள்: பாலக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற பச்சை இலை கீரைகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் விட்டமின் கே சத்து மிகுதியாக கிடைக்கும். இது நம் எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தக் கூடியவை மற்றும் உயரத்தை அதிகரிக்கும்.

திணை: குயினோவா என்று சொல்லக்கூடிய சீமை திணையை எடுத்துக் கொள்ளலாம். அல்லது நமது பாரம்பரிய திணை வகையை எடுத்துக்கொண்டால் அதைவிட கூடுதலான பலன்கள் கிடைக்கும். உயரம் அதிகரிப்பதுடன் மக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.

சால்மன் மீன்: சால்மன் மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் என்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பச்சை காய்கறிகளா அல்லது சமைத்த காய்கறிகளா..? நம் உடலுக்கு எது ஆரோக்கியமானது..?

July 25, 2023 0
பச்சை காய்கறிகளா அல்லது சமைத்த காய்கறிகளா..? நம் உடலுக்கு எது ஆரோக்கியமானது..?

 நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை பட்டியலிட்டால், அதில் காய்கறிகள் தான் முதல் இடத்தைப் பிடிக்கும். நிச்சியம் இதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆனால் காய்கறிகளை வைத்து நீண்ட நாட்களாக ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா அல்லது சமைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா? ஆனால் காய்கறிகளை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பது குறித்த பல கட்டுரைகளை நாம் படித்திருப்போம். காய்கறிகளை வேகவைத்து சாப்பிட்டால் தான், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கும் என ஒருசிலர் கூறுகின்றனர். இல்லை, இல்லை, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதுதான் சிறந்தது என வேறு சிலர் கூறுகின்றனர்.

பச்சை காய்கறிகளை விட சமைத்த காய்கறிகளில் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சமைத்த காய்கறியின் சுவைதான் நன்றாகவும் இருக்கும். கொதிக்க வைப்பதும், வேக வைப்பதும், வறுப்பதும் காய்கறிகளை சமைக்கும் சிறந்த முறைகளாகும். நாம் சமைக்கும் முறை கூட காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, ப்ரோகோலியை வறுத்தோ அல்லது மைக்ரோ ஓவனின் சூடாக்கியோ அல்லது கொதிக்க வைத்தோ சமைத்தால், அதிலுள்ள க்ளோரோஃபைல், சர்க்கரை, புரதம், விட்டமின் சி போன்றவை குறைந்துவிடுவதகவும் வேகவைக்கும் போது இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சமைத்த பின் அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகள்:

கீரை: கீரைகளில் ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளது. இவற்றை சமைத்து சாப்பிடும் போது, இதிலுள்ள கால்சியமும் இரும்புச் சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கீரைகளில் அதிகமாக ஆக்ஸாலிக் ஆசிட் உள்ளது. ஆகையால் கீரை பச்சையாக இருக்கும் போது அதன் கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை இது தடுத்துவிடுகிறது. கீரையை வேக வைக்கும் போது அதிக வெப்பநிலையில் இந்த ஆசிட் வெளியேறி நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.

தக்காளி: சமைத்த தக்காளியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பச்சை தக்காளியை விட சமைத்த தக்காளியில் அதிகளவு லைகோபீன் உள்ளது. இதில் பல முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. சமைக்கும் போது இதன் அடர்த்தியான செல்கள் உடைந்து நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

காளான்: நமது செல்கள் பாதிப்படைவதில் இருந்து பாதுகாத்து, நமக்கு ஏற்படக் கூடிய சில ஆபத்தான நோய்களிலிருந்து காக்கிறது ஆண்டி-ஆக்ஸிடெண்ட். காளான்கள் ஒரு வகையில் பூஞ்சையாக இருந்தாலும், இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உள்ளன. சமைத்த காளானில் பொட்டாசியம், நியசின், துத்தநாகம் போன்றவை அதிகளவில் நிரம்பியுள்ளன.

கேரட்: கேரட்டில் இருக்கும் பீட்டா-கரோட்டீன் என்ற பொருள் கரோடீனய்ட் என அழைக்கப்படுகிறது. இது நம் உடலில் விட்டமின் ஏ-யாக மாற்றம் அடைகிறது. நமது எலும்பு வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருப்பதற்கும் இது காரணமாக அமைகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!

July 25, 2023 0
மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!


 காலை மற்றும் இரவு உணவை போலவே மத்திய நேரத்தில் உணவு சாப்பிடுவது மிக முக்கியமானது. பலரும் வேலைப்பளு காரணமாக மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் இல்லை என்றால் மிக தாமதமாக சாப்பிடுகிறார்கள்.

இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, சரியான நேரத்தில் தவறாமல் மதிய உணவு சாப்பிட வேண்டும். மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம். இங்கே நாம் மதிய உணவின் போது எவற்றையெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

முந்தைய நாள் இரவில் மீந்த உணவுகள்: முந்தைய நாள் இரவில் தயாரித்த உங்களுக்கு பிடித்த பிரியாணி போன்ற உணவுகளை அடுத்த நாள் மதியம் சாப்பிட நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால் முந்தைய தினம் தயாரிக்கப்பட்ட அதிக காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவது உங்கள் வயிற்றை மிக மோசமாக பாதிக்க கூடும்


எண்ணெயில் பொரித்த உணவுகள்: மதிய உணவு என்பது ஒரு நாளின் காலை மற்றும் இரவு நேரத்தை விட அதிகம் சாப்பிட கூடிய நேரமாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் மதிய நேரத்தில் தான் ஹெவியாக சாப்பிடுவோம். எனவே மதிய நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் டீப் ஃப்ரை செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சாலட்ஸ்கள் மற்றும் சூப்ஸ்கள்: பலர் மதிய உணவிற்கு சூப்கள் மற்றும் சாலட்ஸ்களை சாப்பிடுவதை காணலாம். ஆனால் இதுபோன்ற குறைந்த கலோரி அடங்கிய உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவது, இரவு வரை உங்கள் பசியை கட்டுக்குள் வைக்க உதவாது. இரவு உணவிற்கு இடையிலேயே மேம்படும் ஹெவியாக சாப்பிட வேண்டும் என்ற ஆவலை தூண்ட கூடும்.

பழங்கள்: மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பழக்கம் உங்கள் செரிமானத்தை கணிசமாக பாதிக்க கூடும்.

சாண்ட்விச்கள் மற்றும் முன் ப்ரீ-மேட் ஃபுட்ஸ் : மதிய நேரத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுவது அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே அந்த நேரத்தில் சாண்ட்விச்கள் மற்றும் முன்பே தயாரித்து வைக்கப்படும் Pre-made உணவுகளை சார்ந்திருப்பது மிக மோசமான யோசனையாக இருக்கும்.

பாஸ்தா / பீட்சா: மதிய நேரத்தில் பாஸ்தா அல்லது சில பீஸ்கள் பீட்சா சாப்பிடுவது உங்கள் பசியை குறைத்து திருப்தியுணர்வை தரும். ஆனால் இது போன்ற உணவுகளை மதியம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து கிடைக்காது.

ஸ்மூத்தீஸ், ஜூஸ்கள், ஷேக்ஸ்: ஸ்மூத்தீஸ்கள், ஜூஸ்கள், ஷேக்ஸ் உள்ளிட்ட பானங்கள் நமது வயிற்றை விரைவாக ஃபுல் செய்து விடும் என்றாலும், மதிய நேரத்தில் நம் உடலுக்கு தேவையான சரியான உணவுகள் இவை அல்ல.

சரியான உணவுகளையோ அல்லது மதிய நேரத்தில் நீங்கள் வழக்கமாக உண்ணும் ஆரோக்கிய உணவுகளை தவிர்க்காதீர்கள்.

மதிய நேரத்தில் எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட மற்றும் சூடான உணவுகளை சாப்பிட முன்னுரிமை கொடுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

July 23, 2023

தமிழ்நாடு அரசின் TANUVAS வேலை வாய்ப்பு வந்தாச்சு!

July 23, 2023 0
தமிழ்நாடு அரசின் TANUVAS வேலை வாய்ப்பு வந்தாச்சு!

 TANUVAS Recruitment 2023: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS – Tamil Nadu Veterinary and Animal Sciences University) காலியாக உள்ள Project Associate-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TANUVAS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, MVSc. ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில்  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06/07/2023 முதல் 04/08/2023 வரை TANUVAS Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Namakkal-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TANUVAS Job Notification-க்கு, நேர்காணல் (Walk-in) முறையில் விண்ணப்பதாரர்களை TANUVAS ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TANUVAS நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (http://www.tanuvas.ac.in/) அறிந்து கொள்ளலாம். TANUVAS Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TANUVAS CAREERS 2023 FULL DETAILS:


பதவிProject Associate-I
காலியிடங்கள்01
கல்வித்தகுதிBE/B.Tech, MVSc
சம்பளம்மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு35 வயது உடையவராக இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in Namakkal
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் (Walk-in)
முகவரிDepartment of Animal Nutrition, Veterinary College and Research Institute, Mohanur Road, Namakkal-637002.

TANUVAS RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். TANUVAS -யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள TANUVAS Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Walk-in முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியான தேதி: 06 ஜூலை 2023
கடைசி தேதி: 04 ஆகஸ்ட் 2023
TANUVAS Recruitment 2023 Notification & Application Form pdf

TANUVAS CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tanuvas.ac.in/-க்கு செல்லவும். TANUVAS Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TANUVAS Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TANUVAS Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TANUVAS Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TANUVAS Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TANUVAS Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

  • TANUVAS Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TANUVAS RECRUITMENT 2023 FAQS

Q1. What is the TANUVAS Full Form?

TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

Q2.TANUVAS Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Walk-in.

Q3. How many vacancies are TANUVAS Vacancies 2023?

தற்போது, 01 காலியிடம் உள்ளன.

Q4. What is the qualification for this TANUVAS Recruitment 2023?

The qualification is BE/B.Tech, MVSc.

Q5. What are the TANUVAS Careers 2023 Post names?

The Post name is Project Associate-I.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news