இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு அடிப்படை கல்வித்தகுதியும் மாற்றப்பட்டு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்) டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர் , கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதே அந்தஸ்துள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு குரூப்-1-ஏ தேர்வும், இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு குரூப்-1-பி தேர்வும், மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு குரூப்-1-சி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. இவை தவிர, குரூப்-1 அந்தஸ்துடைய தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை படிப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா அல்லது முதுகலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். அதேசமயம் குரூப்-1 தேர்வெழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும்.இந்நிலையில், இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையின்படி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் அடிப்படை கல்வித் தகுதி (தொழிலாளர் நலன் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் நலன் டிப்ளமா படிப்பு) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்படுவதால் இதற்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்.
மேலும், முன்பு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆக இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கிடையாது. ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் இத்தேர்வு இணைக்கப்பட்டுள்ளதால் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு இதற்கும் பொருந்தும். குரூப்-1 தேர்வில் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் வேண்டுகோள்: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு இடம்பெற்றும் பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவில்லை. இத்தேர்வை எதிர்பார்த்து தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும், தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா படிப்பை படித்த பட்டதாரிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தேர்வு திடீரென குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டு வயது வரம்பும் கொண்டுவரப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகிறோம். முன்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்போது வயது வரம்பு 39 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் 39 வயது கடந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. தொழிலாளர் சட்டம் படித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வயது வரம்பு தளர்வை குறைந்தபட்சம் ஒருமுறையாவது வழங்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே, எங்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்,” என்றனர்.
🟥 தங்கள் வகுப்பு மாணவர்கள் முதல் பருவத்தில் ஒவ்வொருவரும் வாசிப்பு இயக்கம் சார்ந்து
🔅 நுழை
🔅 நட
🔅 ஓடு
🔅 பற
*ஆகியவற்றில் எந்த நிலையில் உள்ளார் என்பதையும் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும்..படிக்க விரும்பும் 3 புத்தகங்களையும் தேர்வு செய்து Update செய்ய வேண்டும் அதற்கான வழிமுறை
வேலை நிமித்தமாக சென்றாலும் சரி அல்லது ஓய்விற்காக சென்றாலும் சரி என்பது கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும். பயணத்திற்கு தேவையான துணிகள், மருந்து, பிரஷ், பேஸ்ட், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை பேக் செய்வது தவிர, பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டிய உணவுகளில் நீங்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் ட்ரிப் செல்லும் போது உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான ஸ்னாக்ஸ்களை பேக் செய்வது உங்களை உற்சாகப்படுத்தும் விஷயமாக இருக்க கூடும். உங்கள் ஸ்னாக்ஸ் பட்டியலில் சிப்ஸ், சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை அடங்கிய பானங்கள் போன்றவை இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பயணங்களின் போது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் பசியைப் போக்க உதவும் சத்துக்கள் நிறைந்த உலர் உணவுகளை பேக் செய்து எடுத்து செல்ல நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Emamiagarwal இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள வீடியோவில் ட்ரை ஃப்ரூட்டாக இருக்கும் உலர் அத்திப்பழம் பயணங்களின் போது எப்படி சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அத்திப்பழங்கள் இயற்கையாகவே இனிப்பு, தேன் போன்ற சுவையுடன் மென்மையான மற்றும் உள்ளே சிறிய, முறுமுறுப்பான விதைகளை கொண்டு சிறந்த சுவையான விருந்தாக சாப்பிடுவோருக்கு இருக்கின்றன. அத்திப்பழங்கள் சிறந்த சுவையாக இருப்பதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இந்த உலர் பழங்களில் நம்முடைய செரிமான ஆரோக்கியத்தை நன்றாக வைப்பதற்கான நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தவிர இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டை சிறப்பாக வைங்க உதவும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது. மேலும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க இரும்பு சத்தை வழங்குகின்றன. மேலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால் சத்தான ஸ்னாக்ஸ் தேர்வாக இருக்கின்றன என அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
பயணங்களின் போது ஏன் உலர் அத்திப்பழங்களை பேக் செய்து எடுத்து செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களையும் இவர் குறிப்பிட்டுள்ளார். அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து nmamiagarwal ஷேர் செய்திருக்கும் தகவல்களை கீழே காணலாம்…
பயணம் செய்வது சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்த கூடும். ஆனால் உலர் அத்திப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து நிரம்பியுள்ளது. எனவே இது செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
அதே போல உலர் அத்திப்பழங்களில் ப்ரீபயாடிக்ஸ் நிறைந்துள்ளன, இவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நம்முடைய செரிமான அமைப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, நகரும் போது நன்றாக உணர உதவுகின்றன.
நம் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தவும், தசைகள் சரியாக வேலை செய்யவும் பொட்டாசியம் அவசியம். குறிப்பாக நீண்ட பயணங்களின் போது இது மிகவும் முக்கியம்.
மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உலர் அத்திப்பழங்கள் பசியை கட்டுப்படுத்த மற்றும் உங்கள் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. தவிர ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்க்க உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தால் கூட உலர் அத்திப்பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை அதிகரிக்க செய்யாத ஆரோக்கியமான ஸ்னாக்ஸாக இருக்கின்றன. எனவே அடுத்த முறை நீங்கள் பயணம் செய்ய திட்டமிடும் போது, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உலர் அத்திப்பழங்களை பேக் செய்து எடுத்து கொள்ளுங்கள்.
IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Intern பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IIITDM காலிப்பணியிடங்கள்:
IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Intern பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Project Intern கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IIITDM வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Intern ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
IIITDM தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.
8ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.915/- ஊதியத்தில் வேலை!
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Professional Assistant, Peon, Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
Anna University காலிப்பணியிடங்கள்:
Professional Assistant, Peon, Driver பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Professional Assistant கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Professional Assistant ஊதிய விவரம்:
செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.915/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து irsrecruitment2023@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Union Bank of India-வில் Apprentice வேலை – 500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!
Union Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Union Bank of India காலிப்பணியிடங்கள்:
Apprentice பணிக்கென காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Union Bank of India வயது வரம்பு:
20 வயது பூர்த்தியான 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Apprentice ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
Union Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
NIEPMD-யில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள்!
Assistant Professor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NIEPMD ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Assistant Professor காலிப்பணியிடங்கள்:
Assistant Professor பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIEPMD கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / MD தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.
Assistant Professor வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 மற்றும் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
NIEPMD ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-12 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
Assistant Professor தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Senior Drupal Developer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DIC காலிப்பணியிடங்கள்:
Senior Drupal Developer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Drupal Developer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் B.Tech / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
DIC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Senior Drupal Developer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DIC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.