மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதுப்பொலிவுடன் விநாடி-வினா மன்றம்

 hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2024%2F06%2F30%2Fxlarge%2F1272292

அரசு பள்​ளி​களில் விநாடி-​வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்வி இயக்​குநர் (பொறுப்​பு) ந.லதா அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: அரசு பள்​ளி​களில் செயல்​பட்டு வரும் விநாடி- வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் வலுப்​படுத்​தப்​பட்டு புதிய உற்​சாகத்​துடன் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மாண​வர்​களின் பொது அறிவை விரி​வுபடுத்​து​வது, கேள்வி கேட்​கும் திறனை வளர்ப்​பது, தகவல்​களை தொடர்​படுத்தி சிந்​திக்​கும் திறனை உரு​வாக்​கு​வது ஆகிய​வையே இம்​மன்​றத்​தின் நோக்​கங்​களாகும்.

கல்வி வழிகாட்டி

எனவே, விநாடி-வினா போட்​டிகளில் பங்​கேற்​கும் சில மாண​வர்​களுக்​காக மட்​டுமின்றி 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்​வொரு மாண​வ​ரும் கேள்வி கேட்​டு, கற்​று, சிந்​தித்து மேற்​குறிப்​பிட்ட நோக்​கங்​களை அடை​யும் வகை​யில் இந்த மன்​றத்​தின் செயல்​பாடு​கள் அமைய வேண்​டும். விநாடி- வினா மன்​றச் செயல்​பாடு​கள் மூல​மாக அனைத்து மாண​வர்​களுக்​கும் சமமான கற்​றல் மற்​றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்​யும் வகை​யில் தரப்​படுத்​தப்​பட்ட கற்​றல் வளங்​களை வடிவ​மைத்து ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த வளங்​களை ஒவ்​வொரு வகுப்​புக்​கான விநாடி-​வினா மன்​றத்​தின் பொறுப்​பாசிரியர் பதி​விறக்​கம் செய்து கொண்டு விநாடி- வினா மன்​றப் பாடவேளை​யின்​போது செயல்​படுத்த வேண்​டும். விநாடி-​வி​னா​வின் பல்​வேறு கேள்வி வடிவங்​கள், விநாடி- வினா நடத்​தும் முறை​கள் மற்​றும் பல்​வேறு சுற்​றுகளுக்கு மாண​வர்​களைப் பள்ளி நிலை​யி​லிருந்தே அறி​முகப்​படுத்​தும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் மாநில அளவி​லான வினாடி-​வினா போட்​டிகளில் மாண​வர்​கள் எதிர்​கொள்​ளும் கேள்வி வடிவங்​கள் மற்​றும் சுற்​றுகள், அவர்​களுக்கு முற்​றி​லும் புதிய அனுபவ​மாக இல்​லாமல், ஏற்​கெனவே பள்ளி அளவிலேயே அறி​முக​மாகி பயிற்சி பெற்ற ஒன்​றாக அமைய வாய்ப்​பாக இருக்​கும். பள்​ளி​களில் “சொல்! வெல்!’ விநாடி-​வினா மன்​றம், போட்​டிக்​கான பயிற்சி மைய​மாக மட்​டுமின்றி கேள்வி கேட்​கும், சிந்​திக்​கும் மாண​வர் சமூகத்தை உரு​வாக்​கும் கற்​றல் தளமாக செயல்பட வேண்​டும். இது தங்​களது பள்​ளி​யில் முனைப்​புடன் செயல்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கலைத் திருவிழா: நாடக போட்டியில் தொடர்ந்து 5-ம் ஆண்டாக கோவை அரசு பள்ளி முதலிடம்!

கோவை வடவள்ளி அருகேயுள்ள கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 5-வது முறையாக, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரியில் நடந்தது. இதில் 5 வகைகளில் 36-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நாடகத்தில் பாவனை நடிப்பு, குழுநடிப்பு, பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், குழு நடிப்பில் கல்வீரம்பாளையம் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குழு நாடகப் பிரிவில் பல்வேறு பள்ளிகள் பங்கெடுத்தாலும், கோவை கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது.

பள்ளி மாணவிகள் எஸ்.சுபஸ்ரீ, எஸ்.ப்ரீத்தி, ஆர்.அசோக், ஏ.ஸ்ரீதர், எஸ்.பிரதீப் ஆகிய 5 பேர் கொண்ட குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றது. இதில் எஸ்.ஸ்ரீதர் மட்டும் பிளஸ் 1 மாணவர், மற்றவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர்.

இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5-ம் ஆண்டாக மாநில அளவிலான நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து வருகிறோம். 'இளையோர் திறன் என்ற தலைப்பு எங்களுக்கு தரப்பட்டிருந்தது. தற்போது பலரும் ரீல்ஸ், யூ டியூப் என சமூக வலைதளத்தில் நேரத்தை பொழுதுபோக்காக செலவிடுகின்றனர். இதை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வகையில் கதையை கட்டமைத்தோம். 10 நிமிடத்தில் 3 கதைகளை கூறினோம்.

டெல்லி யமுனை நதிக்கரையோரம் குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான பிரயன்சி பக்கா தன் வீட்டு பணிப்பெண் மூலம் அறிந்து கொண்டார். நதிக்கரை பகுதியில் வாழும் ஏழை குழந்தைகளுக்காக, நாப்கின் விநியோகத்தை ஒரு இயக்கமாக மாற்றி அனைவருக்கும் அந்த சிறுமி வழங்கினார் என்பது முதல் கதை.

2-வதாக உச்சபட்ச வறட்சியும், உச்சபட்ச இயற்கை சீற்றமும் கொண்ட 'எல் நினோ' பாதிப்பு மூலம், மனித சமூகம் எதிர்கொள்ளும் பேராபத்தை கதையாக கட்டமைத்தோம். 3-வதாக போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்த கதை. இந்த 3 கதைகளையும் ஒன்றாக இணைத்து நாடகத்துக்கான திரைக்கதையாக ஆக்கினோம்.

காலாண்டு விடுமுறையில் கடும் பயிற்சி எடுத்தோம். 10 நிமிட நாடகம் முடிந்ததும், பார்வையாளர்கள் பலரும் பாராட்டினர். எங்கள் பள்ளி தொடர்ந்து 5-ம் முறையாக வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் பரிசு பெற்றிருப்பது. மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி தரும் ஆசிரியை வை.சசிகலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எல். சிவக்குமார் தரும் உற்சாகமும், ஊக்கமும் எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேபோல, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, பிற வகை நடனப் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் கபடி மற்றும் ஹாக்கியில் வென்றதையும் நடனத்துடன் கருத்துருவாக வைத்து மாணவிகள் தன்வந்தி, சாயாஸ்னீ. கோபிகா, புவனேஸ்வரி, சுரஜா தாபா, பூர்ணிமா, சைனி மிராக்ளின் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஆகிய மாணவிகள் கொண்ட குழு வென்றுள்ளனர்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அக்.22இல் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

3500

தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை

ராஜ ராஜ சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்துக்கு அக்.22இல் உள்ளூர் விடுமுறை 1041ஆம் ஆண்டு சதய திருநாள் வரும் அக்டோபர் 21, 22 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளது.

திருவாரூர் உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இதனை ஈடு செய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தொடர்ந்து 5-ம் ஆண்டாக கோவை அரசு பள்ளி முதலிடம்! கலைத் திருவிழா: நாடக போட்டியில் தொடர்ந்து 5-ம் ஆண்டாக கோவை அரசு பள்ளி முதலிடம்!

hindutamil-prod%2F2026-10-09%2Fbl3k8q6z%2FCoimbatore-School-Students

கோவை வடவள்ளி அருகேயுள்ள கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 5-வது முறையாக, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரியில் நடந்தது. இதில் 5 வகைகளில் 36-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நாடகத்தில் பாவனை நடிப்பு, குழுநடிப்பு, பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், குழு நடிப்பில் கல்வீரம்பாளையம் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குழு நாடகப் பிரிவில் பல்வேறு பள்ளிகள் பங்கெடுத்தாலும், கோவை கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது.

பள்ளி மாணவிகள் எஸ்.சுபஸ்ரீ, எஸ்.ப்ரீத்தி, ஆர்.அசோக், ஏ.ஸ்ரீதர், எஸ்.பிரதீப் ஆகிய 5 பேர் கொண்ட குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றது. இதில் எஸ்.ஸ்ரீதர் மட்டும் பிளஸ் 1 மாணவர், மற்றவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர்.

இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5-ம் ஆண்டாக மாநில அளவிலான நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து வருகிறோம். 'இளையோர் திறன் என்ற தலைப்பு எங்களுக்கு தரப்பட்டிருந்தது. தற்போது பலரும் ரீல்ஸ், யூ டியூப் என சமூக வலைதளத்தில் நேரத்தை பொழுதுபோக்காக செலவிடுகின்றனர். இதை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வகையில் கதையை கட்டமைத்தோம். 10 நிமிடத்தில் 3 கதைகளை கூறினோம்.

டெல்லி யமுனை நதிக்கரையோரம் குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான பிரயன்சி பக்கா தன் வீட்டு பணிப்பெண் மூலம் அறிந்து கொண்டார். நதிக்கரை பகுதியில் வாழும் ஏழை குழந்தைகளுக்காக, நாப்கின் விநியோகத்தை ஒரு இயக்கமாக மாற்றி அனைவருக்கும் அந்த சிறுமி வழங்கினார் என்பது முதல் கதை.

2-வதாக உச்சபட்ச வறட்சியும், உச்சபட்ச இயற்கை சீற்றமும் கொண்ட 'எல் நினோ' பாதிப்பு மூலம், மனித சமூகம் எதிர்கொள்ளும் பேராபத்தை கதையாக கட்டமைத்தோம். 3-வதாக போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்த கதை. இந்த 3 கதைகளையும் ஒன்றாக இணைத்து நாடகத்துக்கான திரைக்கதையாக ஆக்கினோம்.

காலாண்டு விடுமுறையில் கடும் பயிற்சி எடுத்தோம். 10 நிமிட நாடகம் முடிந்ததும், பார்வையாளர்கள் பலரும் பாராட்டினர். எங்கள் பள்ளி தொடர்ந்து 5-ம் முறையாக வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் பரிசு பெற்றிருப்பது. மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி தரும் ஆசிரியை வை.சசிகலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எல். சிவக்குமார் தரும் உற்சாகமும், ஊக்கமும் எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேபோல, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, பிற வகை நடனப் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் கபடி மற்றும் ஹாக்கியில் வென்றதையும் நடனத்துடன் கருத்துருவாக வைத்து மாணவிகள் தன்வந்தி, சாயாஸ்னீ. கோபிகா, புவனேஸ்வரி, சுரஜா தாபா, பூர்ணிமா, சைனி மிராக்ளின் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஆகிய மாணவிகள் கொண்ட குழு வென்றுள்ளனர்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்! விருப்ப பயிற்சிக் கட்டணம் ரூ. 67 லட்சம்!

Donald-trump-AP-eid

அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் விருப்பப் பயிற்சி பெற 70,000 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் விருப்பப் பயிற்சி பெற்றுக்கொள்வதற்காக இனி கட்டணம் கட்ட வேண்டும் என்ற புதிய முன்மொழிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் படிப்பை முடித்து அங்கேயே விருப்பப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் 70,000 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 67 லட்சம்.

இதற்கு முன்பு இதற்காக 500 டாலர்கள் கட்டணமாக இருந்த நிலையில், அதனை உயர்த்த அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து வருகிறது. எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்தவகையில் அமெரிக்காவில் தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே முதல்முறை விருப்ப செய்முறைப் பயிற்சி பெற 70 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் 24 மாத பணி பயிற்சி நீட்டிப்புக்கும் 30 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பயிற்ச்சிக்கு 500 டாலர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 31% இந்திய மாணவர்கள். இதனால் இந்த பரிந்துரை இந்திய மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தற்போது தீபாவளி முன்பண விண்ணப்பத்தை களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்கலாம்.

  1280170

தற்போது விழா முன்பண விண்ணப்பத்தை களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்கலாம்.

விழா முன்பண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS திட்டத்தில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான NHIS (New Health Insurance Scheme)-ல், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் செலவினங்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து 1.7.2021 முதல் 30.6.2026 வரை NHIS திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட மொத்தத் தொகை, அந்த ஐந்து ஆண்டுகளில் திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை, திட்டத்திற்காகப் பிடித்தம் செய்யப்பட்ட மொத்த கார்பஸ் தொகை மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கார்பஸ் தொகை உள்ளிட்ட விவரங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு நிதித்துறையிடம் தகவல் கோரப்பட்டது..

இதற்கு பதிலளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட விவகாரம் கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு மாற்றப்பட்டு, அதன் மூலம் சில தகவல்கள் வழங்கப்பட்டது.

அந்த RTI பதிலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து NHIS திட்டத்திற்காக ரூ.1,489.74 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கார்பஸ் தொகையாக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3.56 கோடி கார்பஸ் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே காலகட்டத்தில் NHIS திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன, அவர்களுக்காக மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பது தொடர்பான விவரங்களை வழங்காமல், அந்தத் தகவல்களை United India Insurance Company நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக United India Insurance Company நிறுவனத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த விவரங்களை தமிழ்நாடு அரசிடமே பெற்றுக்கொள்ளுமாறு அந்நிறுவனம் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரே திட்டம் தொடர்பான முக்கியமான நிதி மற்றும் பயனாளிகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பெறுவதில் அரசு துறையும், காப்பீட்டு நிறுவனமும் ஒன்றையொன்று சுட்டிக்காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது NHIS திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் கணக்குப்பொறுப்பு குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது..

குறிப்பாக, ஐந்து ஆண்டுகளில் ஊழியர்களிடம் இருந்து ரூ.1,489.74 கோடி பிடித்தம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையான காலகட்டத்தில் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் சிகிச்சை பெற்றனர், அவர்களுக்காக எவ்வளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது என்ற அடிப்படைத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாகக் கிடைக்க வேண்டியது அவசியம் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும் NHIS தொகை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது, திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை மருத்துவச் செலவாக வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட முழுமையான நிதி விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ள RTI பதில்களின் அடிப்படையில் முழுமையான கணக்குகள் வெளியிடப்பட்டால் மட்டுமே NHIS திட்டத்தின் நிதி நிலவரம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை உருவாக்க முடியும் எனவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.