Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

ENNUM EZHUTHUM LESSON PLAN

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ENNUM EZHUTHUM LESSON PLAN 

10 NOV 2025

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்

CLICK HERE EE LOP UNIT 4
CLICK HERE EE LOP UNIT 4 CLASS 4&5
CLICK HERE EE LOP COLLECTIONS

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN SCHOOLS CLUB ACTIVITIES RECORDS PDF

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மன்ற செயலபாடுகள் பதிவேடுகள் 

PDF DOWNLOAD 

வகுப்பு 6 முதல் 8 வரை பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மன்ற செயல்பாடுகள் பதிவேடுகள் PDF இங்கு பகிர்ந்துள்ளோம்...

CLICK HERE TAMIL MANDRAM PDF
CLICK HERE MATHS CLUB PDF
CLICK HERE HISTORY CLUB PDF
CLICK HERE MOVIE CLUB PDF
CLICK HERE MAGIZH MUTRAM PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

S.I.R - கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா்கள் வசதிக்காக இந்தியத் தோ்தல் ஆணையம் தனது அதிகாரபூா்வ இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளா்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் அல்லது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள்நுழைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னா், அந்த இணையப் பக்கத்தில் காட்டப்படும் இணைப்பைத் தோ்வு செய்யலாம்.

இந்த வசதியை வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா், ஆதாா் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளா்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளா் இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

சரியான விவரங்களைச் சமா்ப்பித்த பிறகு இணையப் பக்கம் பக்கத்துக்கு மாறும். அதன் பின்னா் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பப்படும்.

அந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். தங்களது கைப்பேசி எண்களைப் பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளா் பட்டியல் மற்றும் ஆதாா் பதிவுகளில் பெயா் பொருந்தி உள்ள வாக்காளா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

S.I.R படிவத்தை நிரப்புவது எப்படி? - முழு விளக்கம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும் இனி வரும் தேர்தல்களில் வாக்களிக்கவும் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெறவும் நீங்கள் இந்த படிவத்தைப் பெற்று கண்டிப்பாக நிரப்பித் தர வேண்டும்.

ஏனெனில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்வது சிறப்பு சுருக்க திருத்தம்(எஸ்.எஸ்.ஆர்.) இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது நடக்கும்.

ஆனால் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும். முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது வாக்காளர் பட்டியலை முழுவதுமாக ஒருமுறை சரிபார்ப்பதாகும்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் படிவத்தை வீடுவீடாகச் சென்று வழங்குகின்றனர்.

வருகிற டிச. 4 ஆம் தேதிக்குள் நீங்கள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலின்படி வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி பெயர் மற்றும் அமைவிடம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், க்யூஆர் கோடு, தற்போதைய புகைப்படம் ஆகியன ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும். தற்போதைய புகைப்படத்திற்கு அருகில் புதிய புகைப்படத்திற்கான இடம் இருக்கும். அதில் உங்களுடைய இப்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இதன் பிறகு கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.

வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பின்னர் தந்தை//பாதுகாவலர் பெயர், தந்தை/பாதுகாவலர் வாக்காளர் அடையாள அட்டை எண், தாய் பெயர், தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவன்/மனைவி பெயர் மற்றும் அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இதற்கு கீழே மேலும் ஒரு விவரம் கேட்கப்பட்டிருக்கும்.

2002ல் நீங்கள் வாக்களித்திருந்தால் முந்தைய(2002) சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். உங்களுடைய பெயர், அடையாள அட்டை எண், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

ஒருவேளை நீங்கள் 2002ல் வாக்களிக்கவில்லை என்றால் 2002ல் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இறுதியாக வாக்காளரின் கையொப்பம் என்ற இடத்தில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும். உங்கள் தொகுதி வாக்குச்சாவடி அலுவலரும் கையெழுத்திடுவார்.

2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர் உங்களுடைய அடையாள ஆவணங்களைக் கேட்கலாம்.

அந்த வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரும் இல்லை, உங்களுடைய பெற்றோரின் பெயரும் இல்லை என்றால் உங்களுடைய படிவம், அடையாள ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அந்த சமயத்தில் அடையாள ஆவணங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

படிவத்தில் வெள்ளை நிற பின்னணி கொண்ட புதிய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இரு பிரதிகள் வழங்கப்படும் நிலையில் அதனை பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து வழங்க முடியாது.

அதனால் திருத்தங்கள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் அதை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆவணமாக ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நிரப்புவதற்கு கடினமாக இருந்தால் அலுவலரிடம் அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் உள்ள 2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியைப் பெறலாம். தவறுகள் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.

படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். படிவத்தில் வாக்குச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு எண் இருக்கும்.

டிச. 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க வேண்டும். படிவத்துடன் முதலில் எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை எனவும் உங்கள் விண்ணப்பங்களில் சந்தேகங்கள் இருந்தால் தேவைப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் ஆவணங்களைக் கேட்பார்.

2002 வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது எப்படி?

உங்கள் தொகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர் 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை வைத்திருப்பார். அவரிடம் உங்களுடைய தொகுதி, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி கேட்கலாம். https://voters.eci.gov.in/ அல்லது https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிட்டு கண்டறியலாம்.

கட்சி அங்கீகரிக்கப்பட்ட '2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்'

தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவார். அவர்களுக்கு உதவியாகவோ அல்லது ஒவ்வொரு தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த கட்சிகள் ஒரு வாக்குச்சாவடி அலுவலரைத் தயார் செய்து நியமிக்கும்.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி நியமித்துள்ளது.

எனவே படிவம் தொடர்பான சந்தேகங்களுக்கு 2002 பட்டியலில் பெயர் இருக்கிறதா என தெரிந்துகொள்ள உங்கள் தொகுதியில் உள்ள கட்சி சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு படிவத்தை நிரப்பியும் தருவார்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
kalkionline2022-11af5d3ff6-7f04-406d-8593-79fc3a823398voter_list_kalkigroup

1. காலதாமதத்தைத் தவிர்க்க, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் பூர்த்தி செய்யும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

3. தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களைக் கொடுத்து வாக்காளர் விவரங்களைப் பூர்த்தி செய்யும் பணியை டிசம்பர் 4-ந் தேதி வரை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

4. கடந்த ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

5. ஒரு மாதத்துக்குள் 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சரிபார்ப்பது கடினம் என்ற கேள்வி எழுந்தது.

6. பல பகுதிகளில் இன்னும் கணக்கீட்டு விண்ணப்பப் படிவம் கொடுக்கும் பணி தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

7. இந்தநிலையில், 'ஆன்லைன்' மூலம் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

8. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

9. வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in-ல் கணக்கீட்டுப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

10. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழையலாம்.

11. இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி. எண்) அனுப்பப்படும்.

12. அந்த எண்ணை உள்ளிட்டபின், இணையப் பக்கத்தில் காட்டப்படும் 'கணக்கீட்டுப் படிவம்' (Fill Enumeration Form) என்ற இணைப்பைத் தேர்வு செய்யலாம்.

13. உள்நுழைந்த பிறகு, இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை வாக்காளர் நிரப்ப வேண்டும்.

14. விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணையப் பக்கமானது 'e-sign' பக்கத்திற்கு மாறும்.

15. மீண்டும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும்.

16. இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - அறிவுரை வழங்குதல் - DSE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் -  சார்பு

Click Here to Download - DSE - திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு. உறைவிட பயிற்சி நடைபெறுதல் - DIET Letter

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் கல்வி -கரூர் மாவட்டம் -மாயனூர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சேலம் மண்டலத்தில் 10.11.2025 முதல் 14.11.2025 வரை ஏற்காட்டில் உண்டு. உறைவிட பயிற்சி நடைபெறுதல் - இணைப்பில் உள்ள ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் - சார்பு.

Click Here to Download - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு. உறைவிட பயிற்சி நடைபெறுதல் - DIET Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வானவில் மன்றம் - அறிவியல் பழகு போட்டிகள் - கால அட்டவணை மாற்றம் - சார்ந்து- DSE Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதன்மை கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள்.

பள்ளிக் கல்வி - வானவில் மன்றம்- 2025 - 26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால அட்டவணை மாற்றம் - சார்ந்து.

Click Here to Download - DSE - ARIVIYAL PAZHAGU REVISED COMPETITION DATES - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )   

Economics, Commerce உட்பட இதர பாடங்கள் தணிக்கை தடை வழக்கில் மிகச் சிறப்பான தீர்ப்பு - High Court Judgment Copy

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் சகோதரர்களுக்கு வணக்கம் . economics commerce உட்பட இதர பாடங்கள் தணிக்கை தடை வழக்கில் மிகச் சிறப்பான நீதிமன்ற தீர்ப்பை பெற்று உள்ளோம் .சட்டப் போராட்டத்தில் இணைந்து பயணித்த அனைத்து ஆசிரியர் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் .

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

Click Here to Download - Economics,  Commerce - High Court Judgment Copy - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Special TET பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் - SCERT Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் ( SLP ) தீர்ப்பாணை பெறப்பட்டது. தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் இணையவழி பயிற்சி கட்டகம் உருவாக்குதல் பணிமனை 07.11.2025 முதல் 14.11.2025 முடிய மேற்கொள்ளுதல் வழங்குதல் தொடர்பாக 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SIR - சிறப்பு தீவிர திருத்தம் - வழிமுறைகள்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. *BLO எனப்படும் பூத் அதிகாரி* வாக்காளர் அனைவரது இல்லங்களுக்கும் வந்து, குடும்பத்தில் உள்ள, *ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி தனியாக*, வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் & புகைப்படத்துடன் கூடிய *Enumuration Form - கணக்கெடுப்பு படிவத்தை* வழங்குவார்.

2. ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவம் வழங்குவார். அதில் ஒன்றை நிரப்பி கொடுத்தால் போதும். தவறு ஏதும் எழுதியிருந்தால், இன்னொரு படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.

3. ⁠படிவத்தில், தங்களுடைய பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் பெயர் அல்லது மனைவி பெயர் உள்ளிட்ட தகவல்களை எழுத வேண்டும். ஆதார்கார்டு எண் இருந்தால், அதை எழுத வேண்டும்.

4. ⁠அதற்கு அடுத்த கட்டத்தில், *2002 வாக்காளர் பட்டியலில்*, தங்களது ( சம்பந்தப்பட்ட வாக்காளர் ) *பெயர் இருப்பின்*, அந்த பட்டியலில் உள்ள வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

5. ⁠தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் *இல்லை என்றால்,* தங்களுடைய ( வாக்காளரது ) தந்தை அல்லது தாய், உறவினர் பெயர் இருப்பின், அவர்களது வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை தெளிவாக எழுதவேண்டும்.

6. ⁠2002 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் அல்லது தாய், தந்தை பெயர் *இருக்கிறதா என்பதை, BLO அதிகாரி வைத்திருக்கும் Mobile App ன்*, வழியாக பார்த்துகொள்ளலாம். அதில் உள்ள, தகவலின் அடிப்படையில், வாக்களர் வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை படிவத்தில் நிரப்பி கொள்ளலாம்.

7. தங்களுக்கு 2002 ல் வாக்காளர் பெயர் இல்லையென்றால் அந்த கட்டத்தில் *இல்லை என்று எழுதவேண்டும்.* தங்களது தாய்,தந்தை ஆகியோருக்கும் இல்லை என்றாலும், அடுத்த Box ல், *இல்லை என்று* எழுதவேண்டும்.

8. ⁠பின்பு படிவத்தில் Sign செய்து கொடுக்க வேண்டும்.

9. ⁠2002 என்பது, மீண்டும் வாக்குகளை பெறுவதற்கான *ஒரு Additional Benefits தானே* தவிர, அதில் இல்லாதவர்களுக்கு, *வாக்குரிமை வராது என்பதல்ல*.

10. ⁠நிரப்பிய படிவத்தை BLO அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.