Showing posts with label Finance & Savings. Show all posts
Showing posts with label Finance & Savings. Show all posts

ஓய்வுக்கால நிதியை எங்கே முதலீடு செய்வது? SCSS Vs Senior citizen FD ? எது பெஸ்ட்?

     

ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை, ஓய்வு பெற்ற பிறகு எங்கே முதலீடு செய்வது என்பது ஒவ்வொரு முதியவரின் மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. ஒரு புறம் வட்டியே வராவிட்டாலும் பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பயம். மறுபுறம் விலைவாசி உயர்வை சமாளிக்க அதிக வட்டி கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு. இந்த இரு தேடலில் நம் முன்னே நிற்கும் இரண்டு அம்சங்கள், ஒன்று மத்திய அரசின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ( SCSS), இரண்டாவது வங்கிகளின் மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் (Senior Citizen FD).


தற்போதைய சூழலில் SCSS திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.2% வழங்கப்படுகிறது., வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு வட்டி விகிதம், வழக்கமான திட்டங்களை விட சற்று அதிகம். இருப்பினும் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்? வரிச் சலுகை என்று வரும்போது எது கை கொடுக்கும்? அவசரத் தேவைக்கு எதில் பணத்தை எளிதாக எடுக்கலாம்? எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பணத்திற்கு 100% கியாரண்டி தருவது எது? இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசங்களையும், உங்கள் தேவைக்கு எது கச்சிதமாக பொருந்தும் என்பதையும் விரிவாக பார்ப்போம்.

வழக்கமாக மாத வருமானம் நின்றுவிடும் போது, நாம் செய்யும் முதலீடுகளே, நமக்கான மாதாந்திர ஓய்வூதியமாக மாறுகின்றன. ஆக ஓய்வு காலத்திற்கு பிறகு முதலீடு என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்படி மூத்த குடிமக்களிடையே அதிகம் விவாதிக்கப்படும் திட்டங்கள் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டம். இதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது மத்திய அரசு வழங்க கூடிய ஒரு சிறப்பு திட்டமாகும். இது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். மேற்கொண்டு 3 ஆண்டுகள் அதிகரித்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச முதலீடாக 30 லட்சம் ரூபாய் செய்து கொள்ளலாம். இதற்கு 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு உண்டு. இது அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படுவதால், அரசின் பாதுகாப்பு உண்டு. ஆக மிகவும் பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டமானது எந்த வங்கியில் வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். இதற்கு வழக்கமான திட்டங்களை விட 0.25% முதல் 0.75% வரை அதிகமாக வட்டி கிடைக்கிறது. வங்கிகள் சுமார் 7.1% என்ற விகிதத்தில் வழங்குகின்றன. ஆனால் சிறு நிதி நிறுவனங்கள் 8% வரையில் வட்டி கொடுக்கின்றன.
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டத்தில் வங்கிக்கு வங்கி வட்டி மாறுபடும். உத்தரவாதமாக இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் வரையில் கவர் செய்யப்படுகிறது. இதில் 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் இருக்கும். வட்டி விகிதம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கூட பெற்றுக் கொள்ள முடியும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆக உங்களுக்கு முதலீட்டு காலம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இது பெஸ்ட்டாக இருக்கும்.


ஓய்வுக்கால முதலீட்டை பொறுத்த வரை முழுமையான பாதுகாப்பு மற்றும் தவறாத வருமானம் ஆகியவற்றுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் SCSS சற்று முன்னிலையில் உள்ளது. ஆனால் மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமல்ல. ஆக பணத்தின் ஒரு பகுதியை SCSS-லும், மீதமுள்ள பகுதியை வங்கி FD-களிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும், அதே சமயம் அவசரத் தேவைக்கான பணப்புழக்கமும் இருக்கும்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அப்பாவுக்கு வாடகை கொடுத்து வரி மிச்சப்படுத்தலாமா? 2026 புதிய வரைவு வரி விதிகளில் அதிரடி மாற்றம்!

     

சொந்த வீட்டிலேயே வாடகைக்கு இருந்து கொண்டு வரி மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் யுக்திக்கு வருமான வரித்துறை இப்போது ஒரு பெரிய செக் வைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதுவரை அப்பாவிடமோ அல்லது மனைவியிடமோ ஒரு வாடகை ஒப்பந்தம் போட்டு, ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் செய்து வந்த காலம் மெல்ல மாறி வருகிறது.

ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகள் படி, நீங்கள் யாருக்கு வாடகை கொடுக்கிறீர்கள் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அந்த வீட்டு உரிமையாளருக்கும், உங்களுக்கும் என்ன உறவுமுறை என்பதையும் இனி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கென படிவம் 124 (Form 124) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலி வாடகை ரசீதுகளை ஒழித்து கட்டவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் வரித்துறை கையில் எடுத்துள்ள இந்த ஆயுதம், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 2026-ல் உங்கள் ஹெச்.ஆர்.ஏ கிளைம் தள்ளுபடி ஆகாமல் இருக்க, நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.



புதிய வரைவு விதி 205 பெற்றோருக்கோ, துணைவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ வாடகை கொடுப்பதை தடை செய்யவில்லை. இது ஒரு சட்டப்பூர்வ வரி சேமிப்பு திட்டமே. ஆனால் அந்த வாடகை ஒப்பந்தம் உண்மையானதாக இருக்க வேண்டும். இதற்கு முன்பெல்லாம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி வாடகை வரம்பானது ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டினால், வீட்டு உரிமையாளர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும், படிவம் 12BA மூலம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது வரி ஏய்ப்பை தடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமே தவிர, தடை அல்ல.



உதாரணத்திற்கு 36 வயதான அனிதா என்பவர், தனது தாய்க்கு சொந்தமான சென்னை வீட்டில் வசிக்கிறார். முறையான வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாதம் 20,000 வாடகையை வங்கி கணக்கு மூலம் செலுத்துகிறார். தாயாரோ தனது மகளிடம் இருந்து வரும் வாடகையைத் தனது வருமான வரித் தாக்கலில் வருமானம் என காட்டுகிறார். அனிதா தனது தாயுடனான உறவை வெளிப்படுத்தினாலும், அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருப்பதால், அவரது ஹெச். ஆர்.ஏ கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படாது.



புதிய விதிகளின் படி அனிதா 12BA - தனது வீட்டு உரிமையாளர் தாய் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். நீங்களும் உங்கள் உறவினர்களுக்கு வாடகை கொடுக்க திட்டமிட்டால், கட்டாயம் வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். வாடகையை வங்கி பரிமாற்றம் மூலம் செய்தல், வீட்டு உரிமையாளரின் வருமான வரி தாக்கல் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புதிய விதிமுறைகள் உறவினர்களுக்கிடையிலான பணப்பரிமாற்றத்தை முடக்கவில்லை, மாறாக அதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆக உண்மையான வாடகை பரிமாற்றங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

புதிய வரைவு விதிகளின் சாராம்சம் மிகவும் தெளிவானது. நீங்கள் முறையாக வாடகை செலுத்தினால் உங்களுக்கு பயமில்லை. ஆனால், வரியை சேமிக்க திட்டமிட்டால் கடும் அபராதம் காத்திருக்கிறது. வருமான வரிச் சட்டம் 270A-ன் படி, தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பு செய்தால், அதாவது குறைவான வருமானம் காட்டினால் செலுத்த வேண்டிய வரி தொகையில் 50% அபராதம். அதுவே போலி ரசீதுகள், பணப்பரிமாற்றம் இல்லாத வாடகை ஒப்பந்தங்கள் போன்ற போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், வரித் தொகையில் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம்.



எவையெல்லாம் ஆபத்தான செயல்கள்?
• உண்மையில் வசிக்காத ஒரு வீட்டிற்கு வாடகை ரசீது சமர்ப்பித்தல்.
• பணத்தை அனுப்பி விட்டு, அதை மீண்டும் ரகசியமாகத் திரும்ப பெறுதல்.
• முறையான வாடகை ஒப்பந்தம் அல்லது வங்கிப் பரிமாற்றம் இல்லாமல் இருப்பது.
• நீங்கள் கொடுக்கும் வாடகையை, வாங்கும் உரிமையாளர் (பெற்றோர்/உறவினர்) தனது வரித் தாக்கலில் காட்டாமல் இருப்பது.

நிபுணர்கள் கூறுவது என்ன?
உண்மையில் வாடகை முறையாக செலுத்தப்பட்டு, சரியான ஆவணங்கள் இருந்து, அது சந்தை நிலவரப்படி இருந்தால், அந்த ஹெச்.ஆர்.ஏ (HRA) சலுகையை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது. இந்த விதி குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் வாடகை ஒப்பந்தங்களை ஒழிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக யார் யாருக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தவும், வெறும் வாய்மொழி பேச்சாக இல்லாமல், ஆவண ரீதியாகப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்படி இருந்து விட்டால் அது உங்கள் பெற்றோரோ அல்லது உறவினரோ அல்லது துணையோ யாராக இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

 

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

வேலையில்லா பட்டதாரிகளின் நலன் கருதி பல வேலைவாய்ப்பு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் கடன் உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் இயக்கம் (TANSEED) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
இந்த டான்சீட் திட்டம் என்பது 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவியாக வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒரு வருட கால தொழில் வளர் பயிற்சி, வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியாக  ஜனவரி 15, 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!

 EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு –  ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.


குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊதிய வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. EPF Account-ல் இருந்து அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்தது. மேலும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

லாபம் தரும் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்களா? கடைசி தேதி இதுதான்!

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, IDBI மற்றும் இந்தியன் பேங்க், பஞ்சாப் மற்றும் சிந்து பேங்க் போன்ற பல்வேறு வங்கிகள் வழங்கக்கூடிய சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான டெட்லைன் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. FD பாலிசிகளில் அதிக வட்டி விகிதத்தை பெற நினைக்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய பணத்தை இந்த திட்டங்களில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.

தங்களுடைய முதலீடுகளில் சிறந்த ரிட்டன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை சீனியர் சிட்டிசன்கள் மற்றும் வழக்கமான கஸ்டமர்களுக்கு வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வங்கிகள் அறிமுகம் செய்தன. எனினும் பொதுமக்கள் இந்த திட்டங்களுக்கு கொடுத்த வரவேற்பு காரணமாக முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை பலமுறை வங்கிகள் மாற்றியமைத்தது.

IDBI உட்சவ் காலபில் ஃபிக்சட் டெபாசிட்

இதற்கான வேலிடிட்டி செப்டம்பர் 30, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 300 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.05%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55 சதவீதமும் கொடுக்கப்படுகிறது. 375 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.25 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது. 444 நாட்கள் கொண்ட சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.35%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதுவே 700 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.70 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்

இந்தியன் வங்கி வழங்கும் ஸ்பெஷல் இண்டு சூப்பர் 300 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024 ஆகும்.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அதன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதியாக 30 செப்டம்பர், 2024 ஐ நியமித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்கள் 333 நாட்களுக்கு 7.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை பெறலாம்.

SBI அம்ருத் காலா ஃபிக்சட் டெபாசிட்

SBI வழங்கும் அம்ரித் காலா 400 நாட்கள் கொண்ட திட்டத்தில் 7.10 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024. சீனியர் சிட்டிசன்கள் மற்றும் ஸ்டாஃப் பென்ஷனர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்.

SBI WECARE டெபாசிட் திட்டம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள எஸ்பிஐ வீ கேர் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் 30 செப்டம்பர், 2024 வரை செல்லுபடி ஆகும். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

குறைந்த முதலீட்டில் ரூ.7 லட்சம் வருமானம்: போஸ்ட் ஆபிஸின் இந்தத் திட்டம் தெரியுமா?

  Post Office Savings Scheme | வங்கிகளை விட தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. அதேநேரத்தில், வங்கிகளை விட தபால் நிலைய திட்டங்களில் அதிக மக்கள் முதலீடு செய்கின்றனர். மேலும், இதில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் பெறலாம்.

இந்த நிலையில், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

தற்போது நாம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்ட வட்டியில்.. முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால அவகாசத்துடன் இதில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டாளர்களுக்கு 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என முதலீடு செய்யலாம். அதாவது, போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் (நேர வைப்புத் திட்டம் தகுதியானது) 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.

இருப்பினும், 2 அல்லது 3 வருட கால முதலீட்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தின் பலன் கிடைக்கும். 5 வருட காலத்திற்கான முதலீடு 7.5 சதவீத வட்டி விகித பலன் கிடைக்கும்.

உதாரணமாக.. நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.

இதை கணக்கிட்டால் ரூ. 5 லட்சம் மீது ரூ. 2,24,974 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் ரூ.7,24,974 பெறலாம்.

 

🔻 🔻 🔻 

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி முதலீடு, லட்சக்கணக்கில் வருமானம்: இதை ட்ரை பண்ணுங்க!

 Post Office Scheme | மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் தற்போது உள்ளன. ஆனால் பாதுகாப்பான முதலீட்டிற்கான பலரின் முதல் தேர்வாக அஞ்சல் அலுவலகத் திட்டம் உள்ளது.

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் ஒரு சிறந்த மற்றும் வலுவான வருவாய் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய வருமானத்தைப் பெறலாம்.

வட்டி விகிதத்தின் பலன்

தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் அரசு தீர்மானிக்கிறது. செப்டம்பர் கடைசி வாரத்தில், சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசு கடைசியாக நிர்ணயித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில், தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு ஆர்.டி. திட்டத்தின் வட்டி விகிதம் 6.70 சதவீதமாக உள்ளது.

முன்னதாக இது 6.50 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், மொத்தம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2023 வரை பொருந்தும்.

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. கால்குலேட்டர்

தபால் அலுவலக RD கால்குலேட்டரின் படி, நீங்கள் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.

வட்டியாக ரூ.56,830 கிடைக்கும். ஆக உங்களுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 830 கிடைக்கும். மேலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.

மொத்த வைப்புத் தொகையில் 50 சதவீதத்தை கடனாகப் பெறலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கடனைப் பெற முடியும்.

மேலும், அதன் வட்டி விகிதம் RD திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



🔻 🔻 🔻