Search

இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!

 ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கம் அவசியம், ஏனெனில் நல்ல தூக்கம் தான் நமது உடலை ரீசார்ஜ் செய்து சுறுசுறுப்பாக செயல்பட அனுமதிக்கிறது,  முதல் நாள் இரவு நன்றாக தூங்கினால் தான் நம்மால் அடுத்த நாள் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக செயல்படுவதோடு, மனதும், உடலும் புத்துணர்வாக இருக்கும்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல உறக்கத்தை பெறுவது சவாலான ஒன்றாக இருக்கிறது.  பரபரப்பான வாழ்க்கை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாவின் அதிகப்படியான ஆதிக்கம் போன்றவற்றால் நம்முடைய தூக்கம் வெகுவாக பாதிக்கிறது.  தூக்கமின்மை காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற்று ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நீங்கள் சில பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இரவு நாம் படுக்கைக்கு செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட காலையில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியும்.  காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக இயற்கை ஒளியுடன் நீங்கள் இணைய வேண்டும்., குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நீங்கள் அதிகாலை சூரிய ஒளியைப் பெறவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  அதிகாலை நேரத்தில் சூரிய ஒளி நம் மீது படுவதால் நமது உடலில் சர்க்காடியன் ரிதம்ஸ் மீட்டமைக்கப்படுவதோடு, சூரியனில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் நம் மீது படுவதால் இரவில் ஆழ்ந்த உறக்கததிற்கு உதவிபுரியும் மெலடோனின் மேம்படுகிறது.  நல்ல தூக்கமே ஒரு மனிதனின் சிறந்த மருந்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலை நேரத்தில் உங்களால் சூரிய ஒளியை பெறமுடியாவிட்டால் முடிந்தவரை மாலை நேரத்திலாவது சூரிய ஒளியை பெற முயற்சி செய்யலாம்.  மாலை நேரத்து சூரியனில் கூட அகச்சிவப்பு நன்மைகள் நிறைந்துள்ளது, காலையில் முடியாதவர்கள் மாலையில் இதை செய்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.  பொதுவாக வைட்டமின் டி தூக்கமின்மை மற்றும் தூக்க ஒழுங்குமுறையை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் போதிய அளவு வைட்டமின் டி இல்லாததால், தூக்கத்தின் அளவு குறைதல், தூக்கமின்மை மற்றும் இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.  ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் 15 முதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் சூரிய ஒளியில் நிற்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.  அதேசமயம் தோல் புண்கள், புற்றுநோய்கள், சுருக்கங்கள் , வறட்சி, தொய்வு மற்றும் மந்தமான, தோல் தோற்றம் மற்றும் நிறமி மாற்றங்கள் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் மூளை நரம்பு பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

 மனித உடலில் அனைத்து உறுப்புகளும் அவசியம் எனினும் என்றாலும், மூளை என்பது மிக முக்கியமான அங்கம். நமது செயல், நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் என எல்லாவற்றையும் முறைப்படுத்துவது மூளை தான். மூளையில் இருந்து பெறும் கட்டளையை ஏற்றுக் கொண்டு தான் மற்ற உறுப்புகள் வேலை செய்கின்றன என்பதால், மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் உடலின் இயக்கம் ஸ்தம்பித்து விடும் அல்லது கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும். 

மூளை நரம்புகள் பலவீனமடைவது உங்கள் மனத் திறனையும் பாதிக்கிறது. அதாவது, உங்கள் சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதனால், சில சமயங்களில் நினைவாற்றலையும் பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு விஷயங்களை நினைவில் வைத்து பேசுவதை கடினமாகிறது. இது தவிர, பேசுவதில் குழப்பம் ஏற்பட்டாலும், மூளையின் நரம்புகளின் பலவீனம் காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

உடலின் அனைத்து பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள சிறிய பிரச்சனை கூட, உடலின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும். நரம்புகளின் பலவீனத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மூளையில் ஏற்படும் காயங்கள், உடலில் சில ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் நரம்புகளில் அழுத்தம் ஆகியவை மூளையில் வலியை ஏற்படுத்துகின்றன. இதனுடன் சில சமயங்களில் தொற்று மற்றும் சில மருந்துகளாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும். இது தவிர, சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும்.

மூளை நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

மூளையின் நரம்புகளில் பலவீனம் காரணமாக, ஆக்ஸிஜன் அனைத்து செல்களையும் சரியாகச் சென்றடையாது. இதனுடன், சில சமயங்களில் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நரம்புகளில் ரத்தம் சேர்வதால், திடீரென கடுமையான தலைவலியும் வரலாம். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், ,மருத்துவரை உடனே கலந்தாலோசிக்கவும். அதேபோல், உங்கள் உடலில் கூச்ச உணர்வு அதிகம் இருந்தால், இவையும் மூளை நரம்புகள் பலவீனமடைவதற்கான அறிகுறிகளாகும். உங்கள் மூளையின் நரம்புகளில் இரத்தம் சரியாகச் செல்லவில்லை என்றால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் கூச்ச உணர்வு ஏற்படத் தொடங்கும். மேலும், மூளையின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து பேசும்திறன் இழத்தல் அல்லது பேசுவதில் சிரமம், ஒரு கை பலவீனமடைதல் அல்லது உடலின் ஒரு பகுதி பலவீனமடைதல், நடக்கும்போது சமநிலை இழத்தல், கை நடுக்கம் ஆகியவை இருந்தாலும், உடனெ மருத்துவரை அணுக வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமா? தாட்கோவின் இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்

 தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்/பழங்குடியின இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற Aspiring

Minds Computer Adaptive Test AMCAT தேர்வு இலவச பயிற்சியை தாட்கோ அறிவித்துள்ளது.

அடிப்படைத் தகுதிகள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்  இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சி கால அளவு மூன்று மாதம் ஆகும். இப்பயிற்சியினை பெற அனைத்து செலவினையும் தாட்கோ ஏற்கும்.

AMCAT பயிற்சித் திட்டம்

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AMCAT தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு AMCAT சான்றிதழும் வழங்கப்படும் இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!

 

நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களைத் துலக்கியும், உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றமானது ஒருவரது தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்பது தெரியுமா? வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்கும் பலர் மற்றவர்களின் அருகில் சென்று பேச கூட சங்கடப்படுவார்கள். ஏன் தங்கள் வாழ்க்கை துணைக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க யோசிப்பார்கள்.

வாய் துர்நாற்றத்திற்கான பொதுவான காரணங்கள் நாக்கில் உள்ள வெள்ளைப் படலம், பல் சொத்தை, ஈறு நோய்கள் மற்றும் போதுமான வாய் சுகாதாரம் இல்லாமை போன்றவையாகும். இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையைத் தடுக்க தற்போது பல்வேறு வாய் பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பொருட்களில் கெமிக்கல்கள் இருப்பதால், சிலருக்கு இந்த பொருட்கள் சேராமல் இருக்கலாம். ஆனால் நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது வாயில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். கீழே வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வைக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருக்கும் போது, வாய் வறட்சி ஏற்பட்டு, வாயில் துர்நாற்றம் வீசத் தொடங்கும். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றமின்றி இருக்க நினைத்தால், தினமும் நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகம் குடிங்கும் போது, வாய் வறட்சி தடுக்கப்பட்டு, வாயும் ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.


தயிர் தயிரில் நன்மை விளைவிக்கும் லேக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா காணப்படுகிறது. இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு வெளியே உள்ள கிருமிகளை விரட்ட உதவுகிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் தயிரில் சர்க்கரை எதுவும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை தடுக்க நினைத்தால், தினமும் ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள்.


சோம்பு சோம்பில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன் நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களும் உள்ளன. எனவே சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. முக்கியமாக சோம்பானது எச்சில் உற்பத்தியை அதிகரித்து, வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஆகவே உங்கள் துர்நாற்றத்தை தடுக்க நினைத்தால், தினமும் சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.

கிராம்பு கிராம்பு நறுமணமிக்க மசாலா பொருட்களுள் ஒன்றாகும். இது சுவாசத்தை புத்துணர்ச்சியூட்ட உதவுவதோடு, பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதற்கு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்யும் போது, அது வாய் துர்நாற்றத்தை உடனடியாக போக்கும். தினமும் கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், படிப்படியாக வாய் துர்நாற்ற பிரச்சனையானது நீங்கும்.


க்ரீன் டீ க்ரீன் டீ உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக க்ரீன் டீ வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வுகளின் படி, க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பல விஷயங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. குறிப்பாக க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை உருவாக்கும் கிருமிகள் மற்றும் சல்பர் பொருட்களைக் குறைக்கின்றன. எனவே நீங்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்தித்து வந்தால், க்ரீன் டீயை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நாக்கை சுத்தம் செய்வது தினமும் பற்களைத் துலக்குவதனால் மட்டும் வாய் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. பற்களைத் துலக்குவது போன்றே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சொல்லப்போனால் நாக்கில் படியும் வெள்ளை படலத்தை நீக்காமல் இருப்பதனாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க தினமும் நாக்கை சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!

 பழங்கள் சுவையாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. நீங்கள் அவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.பழங்களை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து பழச்சாட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது கல் உப்பு கலந்த பழச்சாறு ஒரு கிளாஸ் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் வரும் போது, எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எது அதிக நன்மைகளை வழங்கக்கூடியது? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் முழு பழங்களை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நிறைய நார்ச்சத்துகளை வழங்குகிறது, இது செரிமானம், எடை மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. புதிய பழங்களை அவற்றின் முழு வடிவத்திலும் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களால் ஊட்டமளிக்கிறது. மிதமான அளவில் பழங்களை சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.


எடைக்குறைப்பிற்கு பழங்கள் எப்படி உதவுகிறது? பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது உடல் எடை குறைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் நார்ச்சத்து அதிக அளவு உட்கொள்ளாமல் உங்களை விரைவாக திருப்திப்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவும் பழங்களில் பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் திராட்சை ஆகியவை அடங்கும். பொதுவாக, நீங்கள் முழு பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதம் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உண்ண வேண்டும்.

பழச்சாறுகளின் தீமைகள் பழச்சாறு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பழங்களின் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. பழங்களை சாப்பிட இது ஒரு வசதியான வழியாகும். இருப்பினும், பழச்சாறில் முழு பழங்களில் காணப்படும் நார்ச்சத்து இல்லாததால், முழு பழத்தின் அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை தக்கவைத்துக்கொள்ளாது. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளை குடித்தால் அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எடை இழப்புக்கு பழச்சாறு குடிக்கலாமா? பழச்சாறு குடிப்பது 'ஆரோக்கியமானது' என்று பார்க்கப்பட்டாலும், ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று எந்த முறையான ஆராய்ச்சியும் இல்லை. எடை இழப்புக்கு பழச்சாறு சிறந்த தேர்வாக இருக்காது. முழு பழத்தையும் சாப்பிடுவதற்குப் பதிலாக சாறு குடிப்பது ஒட்டுமொத்தமாக அதிக கலோரிகளை உட்கொள்ள வழிவகுக்கும். உதவுவதற்குப் பதிலாக, இது எடை இழப்பை மிகவும் கடினமாக்கும்.

எது சிறந்தது? பழம் மற்றும் பழச்சாறு இரண்டும் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், முழு பழங்களே சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. நீங்கள் பழச்சாறு குடிக்கத் தேர்வுசெய்தால், சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறைத் தேர்வுசெய்யவும். வீட்டிலேயே பிழிந்து, நார்ச்சத்தை முடிந்தவரை தக்கவைத்துக்கொள்வது நல்லது. உங்கள் தினசரி உணவில் முழு பழங்களையும் ஒரு சிற்றுண்டியாக அல்லது சாலட் அல்லது உணவின் ஒரு பகுதியாக தேர்வு செய்யவும்.

சிறுபான்மையினருக்கு லட்சக் கணக்கில் அரசின் கடன் உதவி - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்குக் கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ளார்.

டாம்கோ கடனுதவித் திட்டம்:

டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டங்கள் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்குக் கடன் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

கடனுதவித் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வட்டி விகிதம்:

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின் மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாகத் திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2 -ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

டாம்கோ கடன் உதவி பெறுவது எப்படி?

கடன் மனுக்களுடன், மத சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதே போல், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் உதவி பெறவிரும்பும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயக்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் ஒப்படைத்து டாம்கோவில் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் இலவச மேக்-அப் பயிற்சி... 100% வேலைவாய்ப்பு உறுதி... உடனே விண்ணப்பியுங்கள்

 

புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட அருந்ததியர்/ பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family salon and spa International Training Academy) மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் / பழங்குடியின சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development Of India)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் தெரிவித்துளளது.

Cosmetology & Hair Dressing Training Programme
தாட்கோ திறன் பயிற்சித் திட்டம்

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair & Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/-முதல் ரூ.20,000/- வரைபெறலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.45,000-த்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு  மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் (chennai - Entrepreneurship Development and Innovation Institute) தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நாளை  (31.01.2023 அன்று)  நடை பெறவுள்ளது.

மேற்கண்ட முகாம் காலை 12.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கயிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.  மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள. கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசுத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082, 9677152265, 8668102600 ஆகும்.Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த உணவுகள் மீந்து விட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.. மீறினால் உங்களுக்கே விஷமாகலாம்..!

 ஒருவேளைக்கு சமைத்த உணவு மீந்து விட்டால் அதை 2 - 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து படன்படுத்துவது நம்மில் பலரது பழக்கமாக இருக்கிறது. ஆனால் சுட சுட சமைத்து அல்லது அப்போதே தயார் செய்து சாப்பிடும் உணவுகளுக்கு பதில் அவற்றை ஸ்டோர் செய்து மீந்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

ஆம், முக்கிய ஆய்வுகளின்படி ஏற்கனவே சமைத்த சில உணவுகளை மற்றும் பொருட்களை (ingredients) மீண்டும் சூடுபடுத்தும் போது அவற்றிலிருந்து தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் வெளியாகின்றன அல்லது உடலுக்கு சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய சில சேர்மங்கள் மீண்டும் ரீஆக்டிவேட் செய்யப்படுகின்றன. உங்களை நோய்வாய்ப்படுத்த கூடும் என்பதால் மீந்தால் கூட தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முட்டைகள்: முட்டையில் எப்பொழுதும் சால்மோனெல்லா (salmonella) என்ற பாக்டீரியா இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக முட்டைகளை சமைக்க பயன்படுத்தப்படும் முறைகள் குறுகிய காலத்திற்கு மென்மையான வெப்பத்தை (gentle heat) பயன்படுத்துகின்றன. இந்த ஹீட் முட்டைகளில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியாவை முற்றிலும் அழிக்காது. எனவே சமைத்த முட்டைகளை ஸ்டோர் செய்து பின்னர் சாப்பிட்டால், அவை உடலுக்கு சில தீங்குகளை ஏற்படுத்த கூடும்..

பீட்ரூட்: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைட் நிறைந்துள்ளன. இந்த கலவை நிறைந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும் போது, அவை நைட்ரைட்ஸ்களாகவும் பின் நைட்ரோசமைன்ஸ்களாகவும் மாற்றப்படுகின்றன. எனவே ஒருமுறை சமைக்கப்பட்ட பீட்ரூட்டை அல்லது beet products-களை தொடர்ந்து சாப்பிடுவது சில வகை கேன்சருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்..

கீரை: பீட்ரூட்டை போலவே சில கீரை வகைகள் நைட்ரேட் அதிகம் நிறைந்தவையாக இருக்கின்றன. கீரைகளில் உள்ள நைட்ரேட்ஸ்கள் கேன்சரை உண்டாக்கும் நைட்ரோசமைன்ஸ்களாக மாறுவதை தவிர்க்க அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

சிக்கன்: முட்டைகளை போலவே பச்சைக் கோழியிலும் (Raw chicken) சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளது. சமைத்த சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவாக மாற கூடும். எனவே சிக்கனை ஒரு முறைக்கு மேல் அதை மீண்டும் சூடாக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

கோல்ட்-பிரெஸ்டு ஆயில்ஸ்: ஃப்ளேக்ஸ்சீட் , ஆலிவ் ஆயில் மற்றும் கனோலா ஆயில்ஸ் போன்ற கோல்ட்-பிரெஸ்டு ஆயில்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் பிற நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அதே நேரம் வெப்பநிலைக்கு மிகவும் சென்சிட்டிவானவை. இந்த எண்ணெய்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடாக்குவது உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

 தேர்வு காலம் துவங்கிவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது மாணவர்களின் கடமை மட்டும் அல்ல, பெற்றோர்களின் கடமையும் ஆகும். தங்களின் குழந்தைகள் படிக்கும் போது, பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். நம்மில் சிலர் குழந்தைகள் இரவில் படிக்கும் போது அவர்கள் தூங்காமல் இருக்க அடிக்கடி காஃபி போட்டு கொடுப்போம். காஃபி எப்படி உறக்கத்தை கட்டுப்படுத்துகிறது என எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?. அது நமது உடலில் என்ன செய்கிறது என இங்கே காணலாம்

காஃபியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்கொண்டால், அது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு 4 கப் காஃபி வரை உட்கொள்ளலாம். அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானது அல்ல. அதிகமாக காஃபி குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை விவரிக்க முடியாவிட்டாலும், இது தொடர்ச்சியான தலைவலி, சீரற்ற இதயத் துடிப்புக்கு வழிவகும்.


காஃபி காதலர்கள் தான் குடிக்கும் ஒவ்வொரு கப் காபியிலும் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு சர்க்கரை எடுத்துக்கொண்டால் மனநிலை தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கும் என ஆய்வுகள் கூறுகின்றனர். இது தவிர அதிக அளவு சர்க்கரை வாழ்நாளை குறைக்கும் எனவும் கூறுகிறது. பல்வறு உடல்நல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.

காஃபி உங்களை நாள் முழுவதும் உறங்காமல் வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் தற்காலிகமானது. இரவில் உங்களுக்கு கிடைக்கும் ஆற்றலை, பகலில் திருப்பி கொடுக்க வேண்டும். அதாவது, பகலில் தூக்கம் வரலாம். அதிகமாக காபி உட்கொள்வதை காஃபின் க்ராஷ் (caffeine crash) என்று அழைக்கின்றனர். இது சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் அலைப்பாயும் மனநிலைக்கு வழிவகுக்கும்.

காபியின் பாதகமான விளைவுகள் : இன்றைய காலத்தில் காபி அல்லது காஃபி தண்ணீரை போல அடிக்கடி குடிக்கும் ஒரு உணவாக மாறிவிட்டது. ஆனால், இதில் நல்ல விஷயங்களை விட, அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மக்கள் உளவியல் உணர்வுகளை குறைக்க விரும்புவதால் காஃபினுக்கு அடிமையாகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், தங்களின் அதீத சிந்தனைகளுக்கு தற்காலிக தீர்வு காஃபி மூலம் கிடைக்கிறதாம்

காஃபி நமது நியூரான்களில் டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இது நம் உடலை ஓய்வெடுக்க உதவுகிறது. ஆனால், தினமும் காபி உட்கொள்வது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கும், செரிமான பிரச்சனை, பசியின்மை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கலாம். இதன் விளைவாக ஒருவரின் வாசிப்புத் திறன், அறிவாற்றல் செயல்பாடுகள், பதட்டம், காலையில் சோர்வு மற்றும் ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தால் வயது முதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

ஒருவர் எவ்வளவு காபி குடிக்கலாம் : ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. கருப்பு காபி அல்லது இரவு நேரங்களில் கண் விழித்து படிக்க காஃபி குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் அறிந்ததே. எனவே, அதற்கு ஏற்றார் போல நாம் இருந்தால் மேம்படும்..


நேர்காணல் மட்டுமே... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கள்ளக்குறிச்சி  மண்டலத்தில், 2022-23 காரீப் பருவ கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 

பதவியின் பெயர்காலி இடங்கள்சம்பளம்கல்வித் தகுதி
பருவகால பட்டியல் எழுத்தர் (ஆண்/பெண்)20ரூ.5,285+ரூ.3,499/- (அகவிலைப்படி)  பணிநாள் ஒன்றுக்கு  போக்குவரத்துப்படி ரூ.120இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பருவகால உதவுபவர் (ஆண்/பெண் )40ரூ.5,218+ரூ.3,499/- (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.10012 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்)150ரூ.5,218+ரூ.3,499/-(அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.1008 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேற்காணும் தகுதியுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே 07.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, மாடூர், சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 ஆகும்.

3,167, கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. மிஸ் பண்ணாதீங்க

 


"இந்திய அஞ்சல் துறையில் (INDIA POST) " எவ்வித தேர்வுகளும் இல்லாமல் நேரடியாக (Only Merit) 10 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் "GDS-கிராமிய அஞ்சலக ஊழியர்" வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Notification - Download here....

வெல்லம் கலந்த காபி ‘சுகர் ப்ரீ’ காபியா... நிபுணர்கள் கூறுவது என்ன!

வெல்லம் கலந்த காபி ‘சுகர் ப்ரீ’ காபியா... நிபுணர்கள் கூறுவது என்ன!

வெல்லம் பல இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும். பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. வெல்லத்தில்  ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள்உள்ளன. இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் உண்மையில் சர்க்கரைக்கு நல்ல மாற்றா? சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட இது இயற்கையானது என்று ஏன் நினைக்கிறோம்? இந்தக் கூற்றை ஆராய்ந்து, வெல்லத்தின் ஊட்டச்சத்து மதிப்பை சிறப்பாக ஆராய்ந்து, சர்க்கரையுடன் ஒப்பிடலாம்.

அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஷஷிகாந்த் நிகம், வெல்லம் என்பது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் ஒரு வடிவம் என்று விளக்குகிறார். இதில் 65-70 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது, அதே சமயம் வெள்ளை சர்க்கரையில் 99.5 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் சுக்ரோஸ் குறைவாக இருப்பதால், அதை உட்கொண்ட பிறகு குளுக்கோஸ் அளவு மெதுவாக அதிகரிக்கிறது என்று டாக்டர். நிகாம் கூறுகிறார். இரத்த சர்க்கரை அளவில் வெல்லத்தின் தாக்கம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைவு தான். ஆனால் கிளைசெமிக் இன்டெக்ஸ் எனப்படும் ஒரு முக்கிய காரணி காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை.

வெல்லம் மற்றும்  சர்க்கரை ஒரு ஒப்பீடு

இரத்த சர்க்கரையில் தேங்காய் வெல்லம் மற்றும் டேபிள் சர்க்கரையின் விளைவுகளை ஒப்பிடும் சமீபத்திய ஆய்வில் இதே போன்ற வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கரும்புச் சர்க்கரையை விட வெல்லத்தில் உள்ள புரதச் சத்து அதிகம். எனினும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக வெல்லம் உட்கொள்ளலாம் ஆய்வு பரிந்துரைக்கவில்லை. 

சத்துக்கள் நிறைந்த வெல்லம்

பல இந்திய பாரம்பரிய உணவுகளில் வெல்லம் ஒரு பகுதியாகும். கரும்பு உற்பத்தி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வெல்லம் எப்போதும் நம் வீடுகளில் விரும்பப்படுகிறது. பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக வெல்லம் உள்ளது என்று டாக்டர் நிகம் விளக்குகிறார். வைட்டமின் பி12 நிறைந்த வெல்லம் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்

 

ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்

கால்சியம் சத்தானது, உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும் என்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த உண்மை. வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகிய இரண்டு ஊட்டச் சத்துகளும் அவசியம் ஆகும். விட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் குறைபாட்டால் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை.  இதனால் இதயநோய்கள் உண்டாகிறது இப்படி பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை கொண்டிருக்கிறது கால்சியம் குறைபாடு.

ஆனால், நோய் ஏற்படும் அபாயம் ஒரு புறம் என்றால், கால்சியம் குறைபாடு ஆரோக்கியத்தை குலைக்கும். நமது உடலில் எலும்புகள் வலுவுடன் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் தவறுகளால், நாமே நமது எலும்புகளை சேதப்படுத்துகிறோம். எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை குறைக்கும் வேலைகளை நாமே செய்கிறோம். நாம் செய்யும் என்னென்ன விஷயங்கள் நமது உடலின் கால்சியத்தை காலி செய்கின்றன என்பது தெரியுமா?  

தேநீர் மற்றும் காபி

இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமே இல்லை, நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் விழிப்பதே, காபி அல்லது தேநீர் போன்ற பானங்களில் தான். அவற்றில் காபி, கால்சியத்தை குறைக்க காரணமாகிறது என்பது தெரியுமா? நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தியை குறைப்பதில் காபிக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே முடிந்தவரை காபி அருந்துவதைத் தவிர்க்கவும்.

இனிப்பு உணவு
இனிப்புகளை சாப்பிடுவது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம், ஆனால் சர்க்கரை நுகர்வு என்பது நம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் சர்க்கரை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த அளவில் சாப்பிடுங்கள் என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.

மதுபானம்
ஆல்கஹால் பல நோய்களை ஏற்படுத்துவது மற்றும் ஆரோக்கியத்தை குலைக்கும் பண்புகளைக் கொண்டது என்பது தெரியும். ஆனால், மது அருந்துவது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. மது அருந்துவதால், எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக உப்பு பொருட்கள்
அதிக சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும், இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஊறுகாய் போன்ற உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது.  

சோடா பானம்
செரிமானத்திற்கு என்றும், சுவைக்காகவும் குளிர்பானங்களை அருந்துகிறோம், ஆனால் சோடா கலந்த குளிர்பானங்கள் நமது எலும்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன, பழச்சாறுகள் அடங்கிய இயற்கை பானங்களை மட்டும் குடிப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆங்கிலம் கற்க ஆசையா...? இதையும் முயற்சிக்கலாம்

 'கிராமர்' (இலக்கணம்) என்பதிலேயே முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கிலத்தை மிக சுலபமாகவும் கற்கலாம். 

ஆங்கில திரைப்படங்களை சப்டைட்டிலுடன் பாருங்கள். இசை ஆல்பங்களை பாடல்வரிகளுடன் இசையுங்கள். இதுவும் கற்றல்தான். 

மொழி கற்பது எந்த தேவைக்காக என்பதை முடிவு செய்துவிட்டு உணவு, பயணம், இலக்கியம் என விருப்பம் எதுவோ அதுதொடர்பான வார்த்தைகளைக் கற்கலாம். 

கற்றது வரையில் மொழியை உரையாடிப் பழகுங்கள். பட்லர் இங்கிலீஷ், தரம் பற்றி மனம் குமையாமல் கற்பது அவசியம். 

மொழியைக் கற்க குழுவாக முயற்சிக்கிறீர்களா? அல்லது தனியாக படிப்பதே சந்தோஷமா என்பது உங்களின் சாய்ஸ்தான். 

முடிந்தவரை எளிதில் இலவசமாகக் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துங்கள்.

 பிறருடன் பேசிப் பழகினால் மட்டுமே மொழியைப் பேசுவதில் பாஸ் மார்க் வாங்கமுடியும். மொழியைப் பேச முயற்சிக்கும் முன் 90 சதவிகிதம் அந்த மொழியை காது கொடுத்து கேளுங்கள்.

 சரளமாக பேசுவது என்பது உங்களது தேவை சார்ந்தது. மொழியைக் கற்கையில் சின்ன சின்ன பயிற்சிகளையும், அதில் கிடைத்த வெற்றிகளையும் கொண்டாடிவிட்டு, அடுத்த பகுதியை உற்சாகமாகப் படியுங்கள்.

குழந்தைகளின் Self Motivation-ஐ அதிகரிக்க பெற்றோர்கள் எப்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்..?

 இன்றைய காலத்தில் வளரும் குழந்தைகள் அனைவருடனும் போட்டி போட்டு வளர்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும், யாரேனும் ஒருவரோடு போட்டி போட்டு தான் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. சில சமயங்களில் அவர்கள் மேற்கொள்ளும் சில முயற்சிகள் தோல்வியிலும் முடியலாம். ஆனால் இதுபோன்று விஷயங்களுக்கு எல்லாம் அவர்கள் மனம் துவண்டு போய்விடக்கூடாது. எவ்வளவுதான் பாதிப்புகள் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து தானாகவே மீண்டு எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.இதுபோன்ற குணாதிசயங்களை பெறுவதற்கு குழந்தைகள் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொண்டு தன்னுடைய இலக்கை நோக்கி நடப்பவராக இருக்க குழந்தைகளை சுய உந்துதல் உடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. ஒரு பெற்றோர் தன் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய குணநலன்களில் இந்த சுய உந்துதலும் ஒன்றாகும். இதை பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு சரியாக கற்றுக் கொடுத்து விட்டால் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வார். இவ்வாறு பெற்றோர் சுய உந்துதலுடன் குழந்தைகளை வளர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

எட்ட கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்: குழந்தைகளுக்கு சுய உந்துதலை கற்றுக் கொடுக்க முதலில் அவர்களுக்கு எட்ட கூடிய ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அந்த இலக்கை அடைவதற்கு அவர்களாகவே திட்டங்களை தீட்டி அந்த இலக்கை நோக்கி செல்லும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் எந்த விஷயத்தை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளையின் முக்கியத்துவத்தை பற்றியும் நன்றாக அறிந்து கொள்வர். ஒருவேளை அவர்கள் இலக்கை நோக்கி செல்வதில் கஷ்டப்படும் பட்சத்தில் சிறிய உதவிகளை செய்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

முயற்சிதான் முக்கியம், முடிவுகள் அல்ல: எப்போதும் ஒரு இலக்கை அடைவதற்கு செய்ய வேண்டிய முயற்சியை பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கட்டும் ஆனால் நம்மால் முடிந்த 100% உழைப்பையும் முயற்சியையும் நாம் அளிக்க வேண்டும்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் சுய உந்துதலை ஊக்கப்படுத்த முக்கிய வழியாகும். தங்களுடைய செயல்களுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

தெளிவான எதிர்பார்ப்புகளை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்: உங்கள் பிள்ளைகளின் செயல் திறனை பற்றியும் நடத்தைகளை பற்றியும் அவர்களிடம் தெளிவாக பேசி புரிய வைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு தங்களைப் பற்றியும் பெற்றோர் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி தன்னுடைய வளர்ச்சியிலும் அவர்கள் கவனம் செலுத்த முடியும்.

தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும்: தங்களுடைய சொந்த வாழ்க்கையை முடிவு செய்வதற்கும், பிடித்த விஷயங்களை செய்வதற்கும் அவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பிடித்து தேர்ந்தெடுத்த ஒரு செயலை செய்யும்போது அவர்களின் அனைத்து வித விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். முதல் ஏதேனும் தவறு நடந்தாலும் தாங்கள் தவறுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்பது உணர்ந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார்கள்.

குறைத்து மதிப்பிடப்படும் சுற்றுலா தலங்கள்... அழகு கொஞ்சும் இந்த இடங்களை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..

 எண்ணற்ற டூரிஸ்ட் ஸ்பாட்களை கொண்டுள்ள இந்தியாவில் பிரபலமான பல இடங்கள் ஆண்டு முழுவதும் கூட்டமாகவே தான் காணப்படுகின்றன. எனினும் கூட்டம் அதிகம் இல்லாத அதே சமயம் மிகவும் அழகான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள்.

மக்கள் கூட்டத்தில் கலந்து கூட்டத்தில் ஒருவராக இயற்கை அழகை ரசிப்பதை விட, கூட்டம் அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கிருப்பவற்றை ரசிப்பது சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன் மனநிம்மதியையும் சேர்த்து தரும். அந்த வகையில் நீங்கள் இனிவரும் காலங்களில் பிளான் செய்ய வேண்டிய கூட்டம் அதிகம் இல்லாத அதே நேரம் குறைத்து மதிப்பிடப்பட்ட சில அற்புத டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

மாண்டு (மத்திய பிரதேசம்) : ஆப்கானிஸ்தான் கட்டிடக்கலைக்கு இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளின் தாயகமாக மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மாண்டு (Mandu) இருக்கிறது. ஒரு பழங்கால நகரமான மாண்டு மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியின் தார் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காலத்தால் அழியாத நினைவுச்சின்ன அழகுகள், பிரமாண்டமான அரண்மனைகள் மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நுழைவாயில்கள் மாண்டுவின் வளமான மற்றும் நீண்ட வரலாற்றுக்கு சாட்சியாக இங்கு நிற்கின்றன. நீங்கள் இங்கு சுற்றுலா வர திட்டமிட்டால் ஜஹாஸ் மஹால், ஹோஷாங் ஷா கல்லறை, பாஸ் பகதூர் அரண்மனை மற்றும் இன்னும் இருக்கும் பல இடங்களை காண தவறாதீர்கள்.

பதான் (குஜராத்) : குஜராத் மாநிலத்தில் உள்ள அழகான பழங்கால வரலாற்று நகரங்களில் ஒன்று பதான். நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலர் என்றால் கட்டாயம் இந்த இடத்தை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும். சௌதா நாட்டு அரசன் வனராஜன் சௌதா என்பவரால் கிமு 745-ல் கோட்டையுடன் இந்த நகரம் கட்டப்பட்டது. சுமார் 650 ஆண்டுகள் குஜராத்தின் தலைநகராக இருந்த கோட்டை நகரம் இது. குஜராத்தின் முன்னாள் தலைநகராக இருந்த பதான் உலகின் மிகச்சிறந்த கையால் செய்யப்பட்ட ஜவுளிகளில் ஒன்றான படோலா புடவைகளுக்கு பிரபலமான இடமாகும். இங்கே மிகவும் குறுகலான பாதைகளில் மார்க்கெட்கள்அமைந்துள்ளன. ராணி கி வாவ் (படிக்கட்டுக் கிணறு), அற்புதமான ஜெயின் கோவில்கள் மற்றும் பல இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்கள்.

உனகோடி (திரிபுரா) : அகர்தலாவில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள Unakoti-யில் 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் லட்சக்கணக்கான செதுக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. இது ஒரு பழமையான சைவத்தலமாகும். வடகிழக்கு இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் உனகோடி இடம் பிடித்துள்ளது. ட்ரெக்கிங், ஹைக்கிங் மற்றும் பலவற்றுக்கு ஏற்ற இடமாக இது இருக்கிறது. பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கற்சிற்பங்களுமாக இந்த பகுதி காட்சியளிக்கிறது.

காஸ் மலர் பீடபூமி (சதாரா) : மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பூக்கள் நிறைந்த இந்த பீடபூமி வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தாலும் வார நாட்களில் சென்றால் கண்களுக்கான விருந்தை, பசுமையை நன்றாக அனுபவிக்கலாம். இந்த இடம் கடந்த ஜூன் 2012-ல் யுனெஸ்கோவால் உயிர் பன்முகத்தன்மை தளமாக (bio-diversity site) அறிவிக்கப்பட்டது.

லம்பசிங்கி (ஆந்திரா) : தென்னிந்தியாவின் காஷ்மீர்நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருக்கிறது. ஆந்திராவின் Lambasingi என்ற இடம் தான் இந்த பெருமையை பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் குளிரான இந்த பகுதியின் சராசரி 0 -10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் டூர் செல்ல சிறந்த இடமாகவும், வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்கவும் உதவுகிறது. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் தாயகமாக மற்றும் மாசற்ற இயற்கை அழகை கொண்டதாக இந்த லம்பசிங்கி பகுதி இருக்கிறது.

தவாங் (அருணாச்சலப் பிரதேசம்) : நீங்கள் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்வதை தவிர்க்க விரும்பினால் அதற்கு இணையாக அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் தவாங் பகுதிக்கு டூர் செல்லலாம். பசுமையால் சூழப்பட்ட மற்றும் அழகான ஏரிகள் நிறைந்த இந்த இடம் நிச்சயமாக உங்களை உற்சாகமாக வைக்குமே தவிர ஏமாற்றாது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி, இயற்கை அழகிற்காக மட்டுமல்லாமல், 400 ஆண்டுகள் பழமையான மடாலயத்திற்கும் பிரபலமானது. புத்த மடாலயங்களில் ஒன்றான தவாங் மடாலயம் (Tawang Monastery) ஒரு முக்கிய யாத்திரை மையமாக திகழ்கிறது.


மன அழுத்தமா.. ஒரு டிராவல் போயிட்டு வாங்கனு ஏன் சொல்றாங்க தெரியுமா..?

 


பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபடவும், மன அழுத்ததிலிருந்து விடுதலை பெறவும் பலர் மனதிற்கு இதமான சில பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஒருவர் உடலையும், மனதையும் சரியான சமநிலையில் வைத்துக்கொள்ள இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்வது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இது தவிர தியானம் செய்வதும், யோகாசனம் செய்வது, மசாஜ் சென்டர்களுக்கு செல்வது சாகச பயணங்களை மேற்கொள்வது போன்றவையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.

வெல்னஸ் டிராவல் எனப்படும் இந்த ஆரோக்கிய பயணங்களை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு நீங்கள் ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்ளும் நேரங்களில் உங்களது மன அழுத்தத்தை குறைப்பது பற்றியும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், தெளிவான சிந்தனைகளும், நன்றாக உறங்குவதற்கும் அவை எவ்வாறு உதவி செய்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

மன அழுத்தத்தை குறைக்க உதவும்: தினசரி ஒரே விதமான வாழ்க்கை முறைகளை பின்பற்றி, ஒரே விதமான செயல்களை செய்து நமது உடலும் மனமும் மிகவும் சோர்வடைந்திருக்கும். இது போன்ற சமயங்களில் இந்த ஆரோக்கிய பயணங்களை மேற்கொண்டு உடலுக்கும் மனதிற்கும் சற்று ஓய்வு அழித்து புத்துணர்ச்யூட்டும் விதமாக நாம் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாக இது போன்ற பயணங்களின் போது யோகாசனம் செய்வது தியானம் செய்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலம் மனம் தெளிவாகவும், மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்க உதவும். இதைத் தவிர மலையேற்றம், நீச்சல் போன்றவையும் நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.

உடல் இயக்கங்கள் அதிகரிப்பு: நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும், ஒரே விதமான வேலை செய்பவர்களுக்கும் இந்த ஆரோக்கிய பயணத்தின் போது உடல் இயக்கங்களை அதிகரிக்கும் விதமான வேலைகளை செய்ய வேண்டும். யோகாசனம் செய்வது மலை, ஏறுவது, ஃபிட்னஸ் வகுப்புகளுக்கு செல்வது ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் வலுவான தசைகளை கட்டமைக்கவும் உதவும்.

சிறப்பான மனநிலை : யோகாசனம் செய்வதும், தியானம் செய்வதும் நம்முடைய மனதை பக்குவப்படுத்துவதோடு மிகவும் தெளிவாக சிந்திக்கவும் வைக்கிறது. இதன் மூலம் தேவையற்ற மன அழுத்தங்கள் மனக்கவலைகளில் இருந்து நம்மால் எளிதாக வெளிவர முடியும். நீங்கள் உங்களது வழக்கமான இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதும், உங்களது சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் கூட உங்களது மனநிலையில் நல்ல மாறுதல்களை அளிக்கக்கூடும். இயற்கையோடு ஒன்றி இருப்பது என்பதே ஒரு சிகிச்சை முறை ஆகும்.

நல்ல உறக்கம்: ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும். தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபடுவதும், புதிய சூழ்நிலையில் உங்களை உட்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வதுமே மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மலையேற்றம், நீச்சல்  ஆகியவை உடலை மிகவும் களைப்பாக்கி மிக எளிதில் உறங்குவதற்கு உதவுகிறது.

அதிகரித்த சுய விழிப்புணர்வு: மேலே கூறிய அனைத்தையும் விட ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதினால் கிடைக்கும் முக்கிய பயனே நமது சுய விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஆகும். நமது அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு, புதிய பழக்கங்களுக்கு உட்படுவதன் மூலமாக ஒருவர் தன்னை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் மிகத் தெளிவாக சிந்திக்கவும் முடியும். இதனால் சுய விழிப்புணர்வு ஒருவருக்கு அதிகரிக்கும்.


நீங்கள் புத்திசாலி என நினைக்கிறீர்களா.? இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

 எப்போதுமே ஒரு கூட்டத்தில் புத்திசாலிகளை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ள அனைவராலும் முடியாது. மேலும் அவர்கள் எப்போதும் தங்களை மறைத்துக் கொண்டுதான் வாழ விரும்புவார்கள். அனைவருமே தாங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் பலரால் அது முடிவதில்லை. புத்திசாலிகள் தங்களுக்கு என்ன சில குறிப்பிட்ட பழக்கங்களை வைத்துள்ளனர். இவற்றைக் கொண்டு நாம் அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மேலும் அவர்களது பழக்கவழக்கங்களில் சிலவற்றை நாமும் பின்பற்றலாம். அந்த வகையில் புத்திசாலிகளிடம் பொதுவாக காணப்படும் பழக்கங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

தங்களுக்குத் தெரிந்ததை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்: புத்திசாலிகள் பொதுவாக தங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது என்றால் அதைப் பற்றி வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதைப் பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

மற்றவர்களை கவனிப்பார்கள் : இவர்கள் எப்போதும் மற்றவர்கள் செய்யும் செயல்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் அவர்களிடம் உள்ள நிறைய குறைகள் ஆகியவற்றை எடை போடுவார்கள்.

சுதந்திரமாக செயல்படுவார்கள் : தனிப்பட்ட வாழ்க்கையோ வேறு எதுவும் பிரச்சனையாக இருந்தாலும் தனியாக மற்றவரின் உதவியின்றி அந்த பிரச்சனையை எதிர்கொண்டு தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள்.

பெருமை பேசுதல் : புத்திசாலி நபர்கள் எப்போதும் தங்களைப் பற்றி அதிகமாக பெருமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். முக்கியமாக மற்றொருவர் முன்னிலையில் தற்பெருமை பேசுபவர் என்பது அவர்களுக்கு கிடையவே கிடையாது. எப்போதும் அமைதியான மனநிலையிலேயே இருக்க விரும்புவார்கள்.

நிலைமையை கணிக்க கூடியவர்கள் : இவர்கள் எப்போதும் பல்வேறு விஷயங்களை ஒன்றாக சேர்த்து அதன் மூல காரணத்தை அறிய முற்படுவார்கள். தனித்தனியாக பிரிந்து உள்ள விஷயங்களை சரியான விதத்தில் ஒன்று சேர்ந்து அதன் முக்கியமான நோக்கத்தை தெரிந்து நிலைமையை எளிதாக கணிப்பார்கள்.

வாசிப்பு : அதிக அளவு புத்திசாலித்தனமாக உள்ள பலரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்கள். புத்தகத்தின் மூலமாகவே அவர்கள் உலகத்தின் பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்கிறார்கள்.

கேள்விகள் : இவர்கள் எப்போதும் அதிகமாக கேள்வி கேட்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். தனக்குத் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்வார்கள்.

மற்றவர்களின் நடத்தையை கண்டுகொள்ள மாட்டார்கள் : மிகவும் அடாவடித்தனமான நடத்தை உடைய மனிதர்களை இவர்கள் அறவே மதிக்க மாட்டார்கள். அது போன்ற மனிதர்களை புறந்தள்ளி தன்னுடைய வழியில் சென்று கொண்டிருப்பார்கள்.

அதிகம் பேச மாட்டார்கள் : இவர்கள் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு விவரிக்க வேண்டும் எனில் மிக சுருக்கமாக எளிமையான முறையில் விவரித்து விடுவார்கள். தேவையற்ற அதிகமான வார்த்தைகளை வளவளவென்று பேசி மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.


குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!

 குளிர்காலத்தில் பொதுவாகவே ஒரு சில உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சாதாரணமாக மற்ற காலத்தை விட, குறைவான வெப்ப நிலையால் வலி, செரிமானக் கோளாறு, உடல் இயக்கத்தில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உள்ளிட்ட பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். குளிரால் ரத்த ஓட்டத்தின் வேகம் கொஞ்சம் குறையும். மேலும், ஹைப்போதெர்மியா என்ற உடல் வெப்பம் வேகமாக குறையும் குறைபாடு, உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும், குளிர்காலத்தில் திசுக்கள் விரிவாக்கம் அடையும், இதனால் அழற்சி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். எனவே, உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முதியவர்களின் உடல் வெப்பமாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை அதிகரிக்க அல்லது தக்கவைக்க, கம்பளி ஆடைகள், கையுறைகள், காலுறைகள், தொப்பி, ஆகியவற்றை முதியவர்கள் அணிய வேண்டும். குளிரில் உடல் நடுங்காமல், வெப்பமாக இருந்தால், நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க முடியும்.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் ஜில்லென்று இருக்கிறது, நாள் முழுவதும் படுக்கையிலேயே இழுத்து போர்த்தி கொண்டு தூங்கலாம் என்று தான் நினைப்போம். முதியவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஆனால் இளமையாக இருப்பவர்கள் போலவே முதியவர்களும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். நாள் முழுவதும் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருப்பது மூட்டுக்களை இறுக்கமாக்கி வலி மற்றும் அழற்சியை ஏற்படுத்தும்.

எனவே அவர்கள் உடல் ரீதியாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டுக்குள்ளேயே நடக்கலாம், அல்லது சின்ன சின்ன ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம். எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். இவ்வாறு செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி, உடல் குளிர்ச்சியடைவதிலிருந்து பாதுகாக்கும். இது அவர்களுக்கு ஆற்றலையும் கொடுக்கும்.

வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் : குளிர்காலத்தில் நல்ல சூடான நீரில் குளிப்பது இதமானதாக இருக்கும். இருப்பினும் எவ்வளவு சூடாக குளிக்கிறோமோ, அந்த அளவுக்கு சரும பாதிப்பும் ஏற்படும். சருமம் வறட்சியாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் சூடான நீரில் குளித்த பின்பு, சிறிது நேரத்திலேயே உடல் சில்லென்று மாறி நடுங்க ஆரம்பிக்கும். எனவே வயதானவர்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். மூட்டுகளில் வலி மற்றும் அழற்சி இருந்தால் அவர்கள் தங்கக்கூடிய அளவுக்கு சூடான நீரால் ஒத்தடம் கொடுக்கலாம்.

தண்ணீர் குடிக்க வேண்டும் : பொதுவாகவே குளிர்காலத்தில் அதிக அளவுக்கு தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும். ஆனால் தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தாகம் எடுக்காமலேயே உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சருமத்துக்கு மட்டும் அல்லாமல் உடலுறுப்புகள் இயல்பாக இயங்குவதற்கு தேவையான அளவுக்கு தண்ணீரை குடிக்க வேண்டும். சூடாக அல்லது சாதாரண டெம்பரேச்சரில் இருக்கும் தண்ணீரை குடிப்பதை விட, வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது. தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால் கிரீன் டீ, லெமன் டீ, பிளாக் டீ, சுக்கு காப்பி போன்ற பானங்களையும் குடிக்கலாம்.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியம். அதே போல, வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம்.


Bank Job Vacancy : டிகிரி படித்தவர்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் வங்கி மேனேஜர் வேலை!

 வங்கித்துறையில் வேலை வாங்க வேண்டும் என ஆர்வமாக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அருமையான வாய்ப்பு. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officer) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிஐயின் அதிகாரப்பூர்வ தளமான Unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஜனவரி 23 அன்று தொடங்கப்பட்டது. பிப்ரவரி 12, 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை சரிபார்க்கவும்.

காலியிட விவரம்: 

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்): 3.

சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 34.

மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 5.

கல்வி தகுதி:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சீனியர் மேனேஜர் பதவிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) - 25 முதல் 40 ஆண்டுகள்.

சீனியர் மேனேஜர் (கிரெடிட் அதிகாரி) - 25 முதல் 35 வயது.

மேனேஜர் (கடன் அதிகாரி) - 22 முதல் 35 வயது.

வயது தளர்வு:

OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வைபோயிடலாம்.

சம்பள விவரம்:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு, ரூ. 76,010 முதல் ரூ. 89,890 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

சீனியர் மேனேஜர் (கடன் அதிகாரி) பதவிக்கு, ரூ. 63,840 முதல் ரூ. 78,230 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்) பதவிக்கு, ரூ. 48,170 முதல் ரூ. 69,810 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 850 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் 150 ரூபாய் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு.

குழுமுறையில் கலந்துரையாடல்.

தனிப்பட்ட நேர்காணல்.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in ஐப் பார்வையிடவும்.

பின்னர், “Recruitment” பகுதிக்கு செல்லவும்.

இப்போது, “Click Here to Apply Online for Manager, Chief Manager and Senior Manager Posts” என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்களை பதிவு செய்து உள்நுழையவும்.

தேவையான விவரங்களை நிரப்பி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news