எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு.

5வது முறை முதல் பணம் எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ₹15+ ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன - பாரத ஸ்டேட் வங்கி (SBI)

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் பெற்று 01.01.2026க்கு பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான TAPS Interim Payout தொடர்பாக அரசாணை வெளியீடு!

 1030070

6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் பெற்று 01.01.2026க்கு பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான TAPS Interim Payout தொடர்பாக அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.168 - TAPS Interim Payout 6th Pay Commission.pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

25.08.2026-க்குள் NHIS புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை சார்பான விவரம் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

1030473

 மேலே சம்பளக் கணக்கு அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுவள்ளவாறு 25.08.2026-க்குள் NHIS புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை சார்பான விவரம் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட பணியாளர்களே 25.08.2026க்குள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களே பொறுப்பு என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

  1031538

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.143 - SMC Guidelines & Procedures

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து. 15.09.2026க்குள்

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தினுள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக் கட்டணத் தொகையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று பெறப்பட்டத் தொகையை ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே, மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து கீழ்க்கண்டவாறு 2026-2027ஆம் ஆண்டிற்குரிய இணைப்புக்கட்டணத் தொகையினை சென்னையில் (Payable at Chennai) "The Secretary & Treasurer, Tamilnadu State Parent Teacher Association, Chennai-6" 15.09.2026-க்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1032761

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

INSPIRE AWARD 2026-27 | பதிவேற்றம் செய்வதற்கான முகவரி

INSPIRE AWARD 2026-27

அரசு அரசு உதவி பெறும் தனியார் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / CBSE பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

மதிப்புமிகு இணை இயக்குனர் - NSS அவர்களின் 14.07.26 அன்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்திற்கு பயன்மிக்க/ சுற்றுச் சூழலுக்கு உகந்த / புதுமையான திட்டம்/ தொடர்பான  கண்டுபிடிப் களுக்குரிய கருத்துருவை

 5 மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் பெற்று , கீழ்க்கண்ட இணைய வழியில் பள்ளி மூலம் உடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்

பதிவேற்றம் செய்வதற்கான  முகவரி

inspireawards-dst.gov.in

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS Family Details Update - களஞ்சியம் App ல் 25.08.2026 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

NHIS Family Details Update

தற்போது களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு 25-08-2026க்குள் இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
சேலம் மாவட்ட கருவூல அலகு
வழிமுறைகள்
1. KALANJIYAM APP பதிவிறக்கம் செய்யவும். ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப் பட்டுயிருந்தால் KALANJIYAM APP Update செய்ய வேண்டும் 

2. பின்னர் களஞ்சியம் செயலியில் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும்
3. இதில் Family Member Details / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் என்பதனை அழுத்தி உள்ளே செல்லவும்

4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருந்ததால் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும். புதியதாக குடும்ப உறுப்பினர்கள் சேர்க்க விரும்பினால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பூர்த்தி செய்து புதிய உறுப்பினரை சேர்க்கலாம் . 

5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும்

6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை Update செய்வது

7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள Adjustment பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி Update செய்யவும்.

**இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 25-08-2026 க்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கலை ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு!

சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், பேரவையில் இன்று(ஆக. 19) நடைபெற்றது.

அப்போது, கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர் / பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் நிரப்பி, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர்ந்து கூடுதல் செலவினமாக ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்படும்

சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் 23 மாவட்ட அருங்காட்சியகங்கள் ரூ. 20 கோடி செலவில் 2 ஆண்டுகளில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

அருங்காட்சியகப் பொருள்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகள் கணினிமயமாக்கப்படும். இதற்கான DPR ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

அருங்காட்சியக விரிவாக்கத்தின் முதல்கட்டமாக 4 மாவட்டங்களுக்கான திட்ட அறிக்கை ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

தற்போது 23 மாவட்டங்களில் செயல்படும் அரசு அருங்காட்சியகங்கள் மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல்கட்டமாக நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் அரியலூரில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ரூ. 80 லட்சம் செலவில் DPR தயாரிக்கப்படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு

hindutamil-prod%2F2026-08-19%2F4lcu36gn%2F1005032

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 34 மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆக.13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கைக் குறிச்சியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 7 பேருக்கு எம்பிபிஎஸ் மற்றும் ஒருவருக்கு பிடிஎஸ் என 8 பேருக்கு நிகழாண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோல, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவற்றுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 30 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 4 பேருக்கு பிடிஎஸ் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் வீ.ஜோதி மணி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டு மருத்துவப் படிப்பில் சேர இடம் பெற்ற அரசுப் பள்ளி

மாணவ, மாணவிகள் 34 பேரில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே பிளஸ் 2 முடித்துவிட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் பயிற்சி மையங்களில் படித்து வெற்றி பெற்றுள்ளனர்.

அனைவருமே பிற மாவட்டங்களுக்குச் சென்றுதான் ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவிட்டுப் படிக்கின்றனர். எனவே, அரசே மாவட்டந்தோறும் பிரத்யேக நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் கூறியதாவது: 2020-ல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள் இடஒதுக்கீடு மூலம் மாவட்டத்தில் 17 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல, 2021-ல் 34பேருக்கும், 2022-ல் 26 பேருக்கும், 2023-ல் 19 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.Education

2024-ல் 41 பேருக்கும், 2025-ல் 37 பேருக்கும், 2026-ல் 34 பேருக்கும் என கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 180 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 28 பேருக்குப் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் இதுவரை மொத்தம் 34 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தவிர, கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். புதுக்கோட்டை அந்த அளவுக்கு கல்வி விழிப்புணர்வு பெற்ற மாவட்டமாக உள்ளது என்றார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆக. 28இல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு.

3500

வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்பு

மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.12(சனிக்கிழமை) வேலைநாளாகும். SHARE IT