ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவப்படி | இனி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்துவிடும் - ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்

 

மத்திய அரசின் என்.பி.எஸ்., ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 'நிலையான மருத்துவப்படி' இனி ரசீதுகள் இன்றி தானியங்கி முறையில் வழங்கப்படும். காலதாமதத்தை தவிர்க்கவும், அலைச்சலை குறைக்கவும் மத்திய நிதி அமைச்சகம் இந்த நேரடி பண பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதல் வசதி

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களின் 'நிலையான மருத்துவப்படி'யை ரத்து செய்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் 'சி.ஜி.ஹெச்.எஸ்.,' மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். ஒருமுறை இந்த திட்டத்தை தேர்வு செய்துவிட்டால், அதன் விதிகளே செல்லுபடியாகும்; அதன் பிறகு மாதாந்திர மருத்துவப்படி வழங்கப்படாது.

ஓய்வூதியதாரர்களுக்கு என்ன லாபம்?

 ஆவணங்களை திரட்டுவதோ, அவற்றை சமர்ப்பிக்க அலுவலகங்களுக்கு அலைவதோ தேவையில்லை 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்து சேரும் மையப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு முறை என்பதால், பணம் விடுவிப்பதில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் கணக்கீட்டு பிழைகள் குறையும்.

முக்கிய மாற்றங்கள்

தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்செப்டம்பர் - நவம்பர் காலத்திற்கான தொகை டிசம்பர் முதல் வாரத்திலும், டிசம்பர் - பிப்ரவரி காலத்திற்கான தொகை மார்ச் முதல் வாரத்திலும் செலுத்தப்படும்மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம், தகுதியுள்ள நபர்களை சரிபார்த்து வங்கிகளுக்கு தகவல் அனுப்பும். அதன் பிறகு வங்கிகள் தானாகவே பணத்தை செலுத்திவிடு ம்மருத்துவப்படி தடையின்றி கிடைக்க வேண்டுமானால், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தங்களின் 'ஆயுள் சான்றிதழை' சமர்ப்பிக்க வேண்டும்சமர்ப்பிக்க தவறினால், டிசம்பர் மாதம் முதல் மருத்துவப்படி நிறுத்தப்பட ு ம்ஓய்வூதியதாரரின் மறைவுக்கு பிறகு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினர் (மனைவி/கணவர்) இதை பெறலாம்ஏற்கனவே அனுமதி படிவத்தில் குடும்ப உறிப்பினர்களின் பெயர் இருந்தால், ஓய்வூதியதாரரின் இறப்பு சான்றிதழை மட்டும் கொடுத்தால் போதும்பெயர் இல்லையெனில் புதிய அனுமதி பெற வேண்டும்.

களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்

 565783

களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்

Marriage Advance Apply Instructions - Download here

பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை: சிபிஎஸ்இ விளக்கம்


பிளஸ் 2 விடைத்​தாள் டிஜிட்​டல் மதிப்​பீட்டு பணி​கள் தொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்​கம் அளித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த பிப்​ர​வரி 17-ல் தொடங்கி ஏப்​ரல் 10-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது

இந்த பொதுத்​தேர்வு விடைத்​தாள்​கள் முதன்​முறை​யாக டிஜிட்​டல் முறை​யின் மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில் தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சிபிஎஸ்இ டிஜிட்​டல் மதிப்​பிடும் முறை​யில் கோளாறுகள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஷன்​யம் பரத்​வாஜ் மறுப்பு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் கூறிய​தாவது: புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள விடைத்​தாள்​கள் மதிப்​பிடும் முறை​யில் தொழில்​நுட்ப சிக்​கல்​கள் இருப்​ப​தாக வரும் செய்தி தவறானது. டிஜிட்​டல் முறை மூலம் மதிப்​பிடும் பணி​கள் சீராக​வும், இதற்கு முந்​தைய ஆண்​டு​களை​விட சிறப்​பாக​வும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த மதிப்​பிடும் முறையை செயல்​படுத்​தி​யதற்​காக சிபிஎஸ்இ வாரி​யம் பெருமை கொள்​கிறது. இதுதொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை. எனவே திட்​ட​மிட்ட கால அட்​ட​வணைப்​படி மதிப்​பிடும் பணி​கள் முடிவடை​யும். ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 3-வது வாரத்​தில் தேர்வு முடிவு​களை எதிர்​பார்க்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

 மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது

560126

தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர் - தமிழ்நாடு அரசு

3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

 3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை.👇👇👇

DSE - Maternity Leave 3rd and above Child - Download here

தகவல் தொகுப்பு....

BY N.PALANISELVAM,

PGT, COMMERCE,

GHSS, HIGHWAVYS - 625515

UTHAMAPALAYAM - TK

THENI - DT

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள்

 563890

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் 

கற்போர் மதிப்பீடு நாள் 18.10.2026

2026-2027 NILP Circular.pdf

👇👇👇👇

Download here

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

 கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

👇👇👇

DSE - Summer Season Instructions.pdf

Download here

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசு பள்​ளி​களில் உள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள், கணினிகள் ஆகிய​வற்​றின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 22,418 அரசு தொடக்​கப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் 6,992 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறைக்​காக ஒலி-ஒளி அமைப்​பு​கள், இன்​ட​ராக்​டிவ் பிளாட் பேனல்​கள், டிஜிட்​டல் கற்​றல் மேலாண்மை அமைப்​பு​கள் (எல்​எம்​எஸ்) பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அனைத்து பள்​ளி​களுக்​கும் தடையற்ற இணைய சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது.


பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.


இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.


கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

 EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

👇👇👇👇

Download here

NEET UG 2026 - Hall Ticket Download - Direct Link

 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை




NEET – உதவி எண்கள் (Helpline Numbers) அறிவிப்பு

 நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.



நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள NTA, மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - Direct Link

 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது

558176

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது


முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம்

 பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​.30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு (தொடக்​கக் கல்​வி) அவர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​.30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் - DEE Proceedings

 ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


30.04.2026 க்குள் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கைக்கு BEO அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

11.05.2026 முதல் மாணவர்களுக்கு T.C வழங்கலாம்



HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form

 நண்பர்களே வணக்கம் 🙏


பொறுப்பு ஒப்படைக்கும்
 *தலைமை ஆசிரியர்களின்* / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு* ...

General procedure..
 *HM retirement* ஆகும் போது AHM இடம் ஒப்படைப்பு ( பணி விடுப்பு தேதியில்)

 அடுத்த ஆண்டு புதிய HM வந்த உடன் AHM அப்படியே அதை ஒப்படைப்பு ( பணி ஏற்பு தேதியில்)
இது பொதுவான நடைமுறை 🙏

Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...

ஒரு copy எழுதி.. 
( seal வைக்காமல்)
4 xerox எடுத்து
5இலும் சீல் வைத்து கையெழுத்து போட்டுக் கொள்ளலாம்...

 *5set enough* 

1) Both individual 1+1
2) CEO 1
3) school copy 1+1

 *சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது* ...

1) Special fees A/c
2) PTA A/c
3) HM /NSD / Misc / School A/c
4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...
5) *SNA A/c* / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்) 
தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை 

ஒவ்வொரு கணக்கிற்கும்

 *நான்கு விஷயங்கள்* 

1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)
2) cash book
3) Minutes Note ( தீர்மான நோட்)
4) voucher file/ ஒட்டு file

இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும் 

+ 5) stock register தனியே இருக்கலாம்....

நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் ( *25/4/26* ) வங்கி கணக்கில் உள்ள தொகை.. ( மறு நியமனத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்)
 ( April retirement எனில் 30/4/26, May retirement எனில் 31/5/26)

(25/4/26 வங்கிகள் விடுமுறை ( நான்காவது சனிக்கிழமை) எனவே *24/4/26 pass book Entry* போட்டுக் கொள்ளுங்கள் 
Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...)

 *Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...

உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...

 *பகிர்ந்து கொள்ள* வேண்டியது....

1) email/Gmail ID password
2) EMIS I'd password
3) CEO DEO phone number
4) SMC/PTA president pH no

 *மற்றபடி* ...

1) Cycle account (balance male female community wise)
2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்
3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....
4) office bureau keys...

சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...

 *SR count* பொருத்தவரை..
தற்போதைய 
பணியாளர் எண்ணிக்கை சரி பார்த்து வாங்கிக் கொள்வோம்.

அதே போல
Death
Retirement
Employees old SR தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் ( staff/ teacher retirement ஆன பிறகு *SR school இல்* தான் இருங்க வேண்டும்)
( HM SR , CEO office இல் தான் இருக்கும்)

தனிநபர் இடம் கொடுக்க கூடாது...

 *Old SSLC*
*HSE original mark sheet* இருந்தால் ( வழங்காமல் விடுபட்டு போனது) அதையும் தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் 🙏

 *Cycle* note
மற்றும் cycle balance சரி பார்த்து கொள்ளுங்கள்.

School laptop
HM laptop
CRC laptop
PG laptop ( if vacant)



எண்ணிக்கை* சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்..


பொறுப்பு எடுக்க இருக்கும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு 👍

நமது தலைமை ஆசிரியரை *அன்புடன்* வழியனுப்ப வேண்டியது நமது கடமை 🤝.
 *Audit* அவர்கள் period க்கு *clear* செய்து விடுவார்கள். கவலை வேண்டாம்...

இந்த மாதம் *25/4/26 க்குள்* மற்ற அனைவருக்கும் pay bill treasury க்கு submission செய்து விடுவார்கள்...  *April* *month salary no issues* ..

அடுத்த May மாதம் மற்றும் வரும் மாதங்களில் ifhrms pay bill preparation dongle/DSC/ e sign பற்றி விரிவாக எழுதுகிறேன்..

 *மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரிய* பணி இடங்களுக்கு தடையின்றி வருடா வருடம் கலந்தாய்வு *பதவி உயர்வு* நடைபெறுகிறது....
எனவே கவலை வேண்டாம்...

 *நம்பிக்கையுடன்* பொறுப்பு எடுங்கள்...

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்களின்
உரிய *பணப்பலன்* *விதிகளுக்கு உட்பட்டு* பெற்றுத் தருவோம் அவர்களின் கண்ணியம் காப்போம் 🙏

தகவலுக்காக
 *க.செல்வக்குமார்* 
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம் 👍






சென்னை பல்கலை.யில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: இளங்கலை படிப்பில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

 ஏழை மாணவர்​களுக்​கான இலவச கல்​வித் திட்​டத்​தில் இளங்​கலை படிப்​பு​களில் சேர மே 23-ம் தேதிக்​குள்  என்று சென்னை பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை:

 கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன்  வகுப்பறையில் செய்ய வேண்டியவை:


1. கணினி மற்றும் திறன் பலகை முறையாக switch off செய்ய வேண்டும்.

2. பிறகு திறன் பலகையின் கீழ் உள்ள வெள்ளை நிற board ல் உள்ள இரண்டு switch களை off செய்ய வேண்டும்.

3. Tripper switch off செய்யக் கூடாது.

4. CCTV camera அருகில் உள்ள switch off செய்யக் கூடாது. UPS switches off செய்யக் கூடாது.

5. பள்ளி மின் இணைப்பு மீட்டர் அருகில் உள்ள Main board switch off செய்யக் கூடாது

6. திறன் வகுப்பறை கதவு ஜன்னல்களை முழுமையாக மூடி விட வேண்டும்.


7. திறன் பலகை மற்றும் கணினி மேசையை மெல்லிய துணி கொண்டு மூடி விட்டால், இந்த ஒரு மாதத்தில் தூசிகள் படியாமல் இருக்கும்.


8. கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழை சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


9. CCTV கேமரா மேல் புறம் பொருத்தப் பட்டுள்ள switch board rack ன் கண்ணாடி கதவு நன்கு மூடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.


10. Switch board rack ன் உள்புறம் உள்ள எந்த switch ஐயும் off செய்யக் கூடாது. மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் switch off செய்யக் கூடாது. இவை 24 x 7 அனைத்து நாட்களிலும் on நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க






மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக, 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்​பட்டு பள்ளி​களுக்கு அனுப்​பும்பணி​கள் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன.

தமிழக பள்​ளிக் கல்​வித் துறை​யின் கீழ், 44 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான அரசு மற்​றும் நிதி​யுதவி பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். இவர்​களுக்​கான பாடநூல்​கள் அச்​சிடும் பணியை தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது. அரசு மற்​றும் நிதி​யுதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​களுக்கு இலவச​மாக​வும், தனி​யார் பள்​ளி​களுக்கு குறைந்த விலை​யிலும் புத்​தகங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதன்​படி, வரும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 88 சதவீதப் பணி​கள் முடிவுற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.


1, 2, 3-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

TNSED App-ல் ( 22.04.26 ) வருகையினை பதிவு செய்யும் முறை :

 TNSED App-ல் இன்றைய ( 22.04.26 ) வருகையினை பதிவு செய்யும் முறை :

22.04.26 Wednesday

Today Attendance ல் 

Fully not working

Staff Attendance :

 தேர்தல் பணியில் உள்ளோர் OD

விலக்கு பெற்றவர்கள் Present

LOB : Y / N

Attendance இடுங்கள்.

 Student Attendance

  Touch செய்ய வேண்டாம்

தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மே மாதம் விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை.

 தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்கள் பழைய அரியர் தேர்வுகளை எழுத மே மாதம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் செமஸ்டர் பாடத்திட்டத்தில் இளங்கலை, (A 18, C19, A19, C20, A20 பேட்ஜ்) முதுகலை (A18, C19, A19, C20, A20, C21, A21 பேட்ஜ்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பழைய அரியர் தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற கடைசியாக 2 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவர்கள் டிச. 2025, ஜூன் 2026 தேர்வு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, 2025 டிசம்பர் அமர்வுக்கான தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மே மாதத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி www.ideunom.ac.in. பழைய அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வழங்கப்பட்டுள்ள இந்த கடைசி வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

JEE 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்

 ஜேஇஇ 2-ம் கட்ட முதன்​மைத் தேர்​வில் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளார்.

நம்​நாட்​டில் ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்​பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என இரு பிரி​வாக நடை​பெறும்.

இதில் முதன்​மைத் தேர்​வானது தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டு​தோறும் 2 கட்​டங்​களாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 28-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. 

இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 584 மையங்களில் 10 லட்சத்து 34,330 மாணவர்கள் எழுதினர்.

அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். இந்த தேர்வில் மொத்தம் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் மாணவர் தமினா கிரிஷ் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் அடுத்தகட்ட ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் ஏப்ரல் 23 முதல் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 26ம் தேதி வெளியீடு

 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 26ம் தேதி வெளியீடு


மாணவர்களின் நலன் கருதி நீண்ட தொலைவில் இல்லாமல் அவர்கள் விருப்பத்தின்படி நகரங்கள் ஒதுக்கீடு. மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது, 99.2% மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் ஒதுக்கீடு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று ECINET PRO Module Appல் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்

 தேர்தல் பணி - 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்




வாக்குப்பதிவு தலைமை அலுவலர் (PrO) இறுதியாக மண்டல அதிகாரியிடம்(Zonal Officer) ஒப்படைக்க வேண்டியவை

 Presiding Officer இறுதியாக மண்டல அதிகாரியிடம் (Zonal Officer) ஒப்படைக்க வேண்டியவை



தேர்தல் பணிக்குச் செல்லும் அன்பர்களே ! உங்களுக்கான முக்கியமான பதிவு இது!

 வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப் பட்டுள்ள வர்களுக்கானப் பதிவு இது.

நீங்கள் 2 அல்லது 3 பயிற்சிக் கூட்டங்களிலே இதுவரை கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறேன்.

இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.

1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.


நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.


2) உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.



3) தேர்தலுக்கு முதல்நாள் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள App ல் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்..



4) 22.04.2026 அன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, Appல் செய்தி அனுப்புங்கள்.



5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.


6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.



7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.



8 ) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனைச் சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி இணைப்பது என்பதை வீடியோவைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்..


VVPAT என்ற வாக்களிப்பதை உறுதி செய்யும் அச்சு எந்திரத்தின் மீது நேரிடையாக ஒளி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். VVPAT - பின்பக்க பட்டன் Off position ல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.




9) உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.



தேர்தலுக்குப் பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 17 C போதுமான அளவில் இருக்கிறதா என்பதைச் சரிபாருங்கள்..



உங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களோ அத்தனை எண்ணிக்கையில் அந்தப் படிவம் கைவசம் இருப்பது மிக முக்கியம்.


தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தப் படிவம் போதுமான அளவில் நிச்சயம் வழங்கப்படாது.




எனவே இப்பொழுதே போதுமான அளவில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். படிவ நகல் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.



10) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவிற்கு வரச் சொல்லி நினைவுபடுத்திவிடுங்கள்..


11) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்.. பெண்.. எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (பெரும்பாலான பேர் இதைச் சரிபார்க்க தவறிவிடுவர். வாக்காளர் பட்டியலில் எல்லா பக்கங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். பின் அடிக்கிறபொழுது ஏதேனும் ஒரு தாள் தவறுதலாக விடப்பட்டிருந்தால்.. மறுநாள் மிகவும் சிரமப்படுவீர்கள்)



12) Tender votes (கள்ள வாக்கு), Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள். 


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையைக் கையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதற்காக அவரை வாக்களிக்க அனுமதிக்கவேகூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.



13) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.



14) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.


15) 23.04.26 அன்று காலை 5 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.




Clear


Ballot


Close


Total


Result


Clear



என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.



குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.. அதற்கான நேரமிருக்குமா என்று பலரும் கவலைப்படுவதைப் பார்க்கிறேன்..



ஒரு வாக்குப்பதிவிற்கு 10 நொடிகள்தான்.. எனில் 50 பதிவிற்கு 500 நொடிகள்.. அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடங்கள் வரைதான் ஆகும்..


அதன் பிறகு சீல் வைப்பதற்கு தனியே 10 நிமிடங்களே அதிகம்..


உங்களுக்கோ 1 மணி நேர அவகாசம் இருக்கிறது..


எனவே அது பற்றி கவலைப்படாதிருங்கள்.. பதட்டமும் அடையாதீர்கள்..


VVPAT டிரேயில் உள்ள சிலிப்புகளை வெளியே எடுத்து அதில் Mock poll ballot sheet என்ற ரப்பர் முத்திரையைப் பதிவு செய்து, அதையும் சீலிட்டு அதற்குரிய பையில் பத்திரப்படுத்தி.. அதை ஒரு டப்பாவில் அடைத்து சீல் வைத்து, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, பத்திரமாக வைத்திடுங்கள்..




#மிகமுக்கியம்..


Mock poll முடிந்த உடன் அனைத்தும் சரிபார்த்தல் முடிந்த பின்னர் மறுபடியும் Total பட்டனை அழுத்தவும். Total vote 0 என உள்ளதா என சரி பார்த்து விட்டு பின் polling ஆரம்பிக்கவும்.. இது மிக முக்கியம். ஏனெனில் நிறைய இடங்களில் mock poll ஓட்டை clear பண்ணாமல் polling ஆரம்பித்து விட்டு சிரமப்படுகின்றனர்.. (எக்காரணத்தை முன்னிட்டும் Close பட்டனை தொட்டுவிடாதீர்கள்)



Mock poll certificate ல் வந்திருக்கும் முகவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.



எந்திரத்தை சீல் செய்யுங்கள்.


Green seal

Special tag

Strip seal

Address tag

எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.



*6.30 மணிக்கு Mock Poll Completed என App ல் பதிவு செய்யுங்கள்.*



16) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள். VVPAT மற்றும் Control unit யை On செய்து கொள்ளுங்கள்..




17) 7 மணிக்கு தேர்தல் துவங்கிவிட்டது என்பதை App ல் பதிவிடுங்கள்..




18) அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்யுங்கள்.




ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Evm total மற்றும் வாக்காளர் பட்டியலில் tick செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும்




9 மணி : _ _ _


11மணி: _ _ _


1 மணி : _ _ _


3 மணி : _ _ _


3.30. : _ _ _


4. : _ _ _


4.30. : _ _ _


5. : _ _ _


5.30. : _ _ _


6. : _ _ _


6.30. : ___


7.00. : ___




வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.



அவ்வப்பொழுது வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியே சூழ்நிலையைக் கவனியுங்கள்..



மாலை 7 மணிக்கு, வரிசையில் வாக்காளர்கள் நின்றால், வரிசையில் நிற்கும் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.



இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.



19) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.


20) *BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.*



21) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.



22) எல்லா நிகழ்வுகளையும் PROCEEDING OFFICER DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள். அதுதான் பின்னால் பிரச்சனைகள் எதுவும் எழும்பினால் உங்களைக் காப்பாற்றும்.



7.00 மணிக்கு கீழ்க்கண்ட பதிவுகளை அனுப்புங்கள்.




VM _ _ _


VF _ _ _


VT _ _ _



23) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)

*24) உங்களோடு பணியாற்ற வந்திருக்கும் பெண் அலுவலர்களுக்கும் / பெண் காவலர்களுக்கும் நீங்கள்தான் மூத்த சகோதரர் என்பதை மனதில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான வசதிகளும் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்..




அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்..


மாதவிடாய் காலத்தில் அவர்களில் எவரேனும் இருக்கலாம்.. 


அவர்களில் எவருக்கேனும் நீரிழிவு நோய் இருக்கலாம்..



கைக்குழந்தையை வீட்டில் விட்டு வந்திருக்கலாம்..


எல்லாத் தேவைகளையும் குறிப்பால் உணர்ந்து உதவி செய்யுங்கள்.


அவர்கள் நம் சகோதரிகள்.. 




25) முதல்நாளே தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணக்கிட்டு, உங்கள் கைப்பணத்திலிருந்து கவர் தயார் செய்து பிரித்து வைத்துவிட்டீர்கள் என்றால்.. தேர்தல் முடிந்தபிறகு சில்லறைக்கு என்ன செய்வது .. எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்ற கவலை தோன்றாமல் இருக்கும்..




அவ்வளவுதான்.. பதட்டமில்லாமல் இயங்குங்கள்..


எந்த முறைகேட்டையும் , நீங்கள் செய்யாதிருங்கள்..


எந்த முறைகேட்டையும் அனுமதிக்காதிருங்கள்..


எல்லா பணிகளும் நிறைவு பெற்ற பிறகு,




அனைத்துமுகவர்களுக்கும் , சக பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.




 நாளை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்  வாழ்த்துக்கள்.