அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசு பள்​ளி​களில் உள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள், கணினிகள் ஆகிய​வற்​றின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 22,418 அரசு தொடக்​கப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் 6,992 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறைக்​காக ஒலி-ஒளி அமைப்​பு​கள், இன்​ட​ராக்​டிவ் பிளாட் பேனல்​கள், டிஜிட்​டல் கற்​றல் மேலாண்மை அமைப்​பு​கள் (எல்​எம்​எஸ்) பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அனைத்து பள்​ளி​களுக்​கும் தடையற்ற இணைய சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது.


பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.


இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.


கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


0 Comments:

Post a Comment