Search

ட்ராவல் பண்ணும்போது சிறந்த ஸ்னாக்ஸ்... உலர் அத்திப்பழத்தில் இவ்வளவு பவர் இருக்கா?

 வேலை நிமித்தமாக சென்றாலும் சரி அல்லது ஓய்விற்காக சென்றாலும் சரி என்பது கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும். பயணத்திற்கு தேவையான துணிகள், மருந்து, பிரஷ், பேஸ்ட், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை பேக் செய்வது தவிர, பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டிய உணவுகளில் நீங்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் ட்ரிப் செல்லும் போது உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான ஸ்னாக்ஸ்களை பேக் செய்வது உங்களை உற்சாகப்படுத்தும் விஷயமாக இருக்க கூடும். உங்கள் ஸ்னாக்ஸ் பட்டியலில் சிப்ஸ், சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை அடங்கிய பானங்கள் போன்றவை இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பயணங்களின் போது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் பசியைப் போக்க உதவும் சத்துக்கள் நிறைந்த உலர் உணவுகளை பேக் செய்து எடுத்து செல்ல நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Emamiagarwal இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள வீடியோவில் ட்ரை ஃப்ரூட்டாக இருக்கும் உலர் அத்திப்பழம் பயணங்களின் போது எப்படி சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அத்திப்பழங்கள் இயற்கையாகவே இனிப்பு, தேன் போன்ற சுவையுடன் மென்மையான மற்றும் உள்ளே சிறிய, முறுமுறுப்பான விதைகளை கொண்டு சிறந்த சுவையான விருந்தாக சாப்பிடுவோருக்கு இருக்கின்றன. அத்திப்பழங்கள் சிறந்த சுவையாக இருப்பதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இந்த உலர் பழங்களில் நம்முடைய செரிமான ஆரோக்கியத்தை நன்றாக வைப்பதற்கான நார்ச்சத்து அதிகம் உள்ளது.

தவிர இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டை சிறப்பாக வைங்க உதவும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது. மேலும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க இரும்பு சத்தை வழங்குகின்றன. மேலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால் சத்தான ஸ்னாக்ஸ் தேர்வாக இருக்கின்றன என அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.



பயணங்களின் போது ஏன் உலர் அத்திப்பழங்களை பேக் செய்து எடுத்து செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களையும் இவர் குறிப்பிட்டுள்ளார். அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து nmamiagarwal ஷேர் செய்திருக்கும் தகவல்களை கீழே காணலாம்…

  • பயணம் செய்வது சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்த கூடும். ஆனால் உலர் அத்திப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து நிரம்பியுள்ளது. எனவே இது செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

  • அதே போல உலர் அத்திப்பழங்களில் ப்ரீபயாடிக்ஸ் நிறைந்துள்ளன, இவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நம்முடைய செரிமான அமைப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, நகரும் போது நன்றாக உணர உதவுகின்றன.

  • நம் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தவும், தசைகள் சரியாக வேலை செய்யவும் பொட்டாசியம் அவசியம். குறிப்பாக நீண்ட பயணங்களின் போது இது மிகவும் முக்கியம்.

  • மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உலர் அத்திப்பழங்கள் பசியை கட்டுப்படுத்த மற்றும் உங்கள் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. தவிர ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்க்க உதவுகிறது.

  • ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தால் கூட உலர் அத்திப்பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை அதிகரிக்க செய்யாத ஆரோக்கியமான ஸ்னாக்ஸாக இருக்கின்றன.

    எனவே அடுத்த முறை நீங்கள் பயணம் செய்ய திட்டமிடும் போது, ​​உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உலர் அத்திப்பழங்களை பேக் செய்து எடுத்து கொள்ளுங்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment