புத்தகத்திற்கு Good bye - இனி அரசு பள்ளிகளில் புதிய Experiential Learning முறை அறிமுகம்...

 
சென்னையில் மாணவர்களின் கற்பித்தலை முற்றிலும் மாற்றும் வகையில், மாநில அனுபவக் கற்றல் வளமையம் (State Resource Centre for Experiential Learning) துவங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் இந்த மையத்தை திறந்து வைத்தார்.

மையத்தின் நோக்கம், புத்தகத்தை மனப்பாடம் செய்வதை தாண்டி புரிந்துக்கொள்ளும்படியாக அறிவியல், கணிதம், மொழிப் பாடங்கள், சமூக அறிவியல் போன்ற பாடங்களை நேரடியாக மாதிரிகள் மூலம் செயல்படுத்திக் கற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் வகுப்பறை பாடங்களை நேரடியாகக் கையாளுவதோடு, வண்ண மாடல்கள், செய்முறை கருவிகள் பயன்படுத்தி பொருள்களை கண்டு, தொடு, செயல் மூலம் புரிந்து கொள்ளலாம். இது கடினமான கருத்துக்களையும் எளிதாக கற்றுக்கொள்ள உதவும்.ஆசிரியர்களுக்கும் புதுமையான கற்பித்தல் முறைகளை பயிற்றுவிக்கும் வகையில் தனித்தனிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்றலில் புதுமை மற்றும் ஆர்வத்தை உருவாக்கும்

மையத்தின் வகுப்பறைகள் மற்றும் பிரிவுகள், மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட புதுமையான கற்றலை அனுபவிக்க முடியும்.

சென்னையில் தொடங்கிய மையம் விரைவில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவடையும். இது, பள்ளிக் கல்வியை வகுப்பறையைத் தாண்டி, வாழ்க்கை அனுபவக் கல்வியுடன் இணைக்க உதவும்.மாணவர்கள், வார விடுமுறைகளில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் இந்த மையத்தை நேரில் அனுபவிப்பது, சுலபமான கற்றலும் ஆர்வமும் ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment