Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

கல்வி உதவித் தொகை வழங்க முதல்வரின் திறனாய்வுத் தேர்வு: தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற் கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. முதல் தாள் (கணிதம்) தேர்வு காலை 10-12 மணி வரையும், 2-ம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) தேர்வு மதியம் 2-4 மணி வரையும் நடைபெறும்.

ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், அவர்களது பதிவெண்ணுக்கு உரியது தானா என்பதை ஹால்டிக்கெட் டுடன் ஒப்பிட்டு உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளை குறிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட தேர்வு மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

     180884

பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பார்வைச் சவால் கொண்ட மாணவர்கள் சொல்வதை எழுதுபவராக Scriber பணிக்கு ஆசிரியர் பட்டயச் சான்றிதழ், ஆசிரியர் பட்டச் சான்றிதழ், தொழிற்கல்வி, கலை அறிவியல் பட்டம் படிக்கும் 2ம் ஆண்டு மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்திக் கொள்ளளாம்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுவோராக நியமனம் செய்யலாம் 

- அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை

 DGE - Appointment of Scribe Letter

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அனுமதியளித்து சுகாதாரத் துறை உத்தரவு...

பள்ளிக் கல்வித்துறை - இளநிலை உதவியாளர் பணியாளர்களுக்கு மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

     173587

தமிழ்நாடு அமைச்சுப் உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து பணி இளநிலை தட்டச்சர் நிலை-3. ஆகியோர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் தாயர் செய்யப்பட்டது மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விவரங்கள் தெரிவித்தல் - சார்ந்து

2025-2026ض ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV ற்கான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நியமனம் வழங்குவதற்கு முன்னர் ஏற்கனவே பணியில் உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவியில் பணிபுரிவோரிடமிருந்து உடல்நிலை. குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவ்விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு பார்வை 6ல் காணும் செயல்முறைகளுடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு விடுபட்ட பணியாளர்கள் விவரம் மற்றும் பட்டியலிலுள்ள பணியாளர்களின் விவரங்களில் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய விவரங்களை அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருத்தம், மற்றும் நீக்கம் செய்யப்படவேண்டிய விவரங்களுடன் விடுபட்ட பணியாளர்களின் விவரங்களும் பார்வை 7ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து கருத்துருக்கள் (இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3) பெறப்பட்டது.

மேற்கண்டவாறு மாறுதல் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாவட்டத்திற்குள் மாறுதல் (Within District) கோரியுள்ளவர்களுக்கு 29.01.2026 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் நிலையிலேயே பார்வை 2ல் காணும் அரசாணை, பார்வை 3 மற்றும் பார்வை 4ல் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

DSE transfer counseling_reg - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு.

182192

ஆசிரியர் சிறப்பு  தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்றம் WP No : 2083/2026

தீர்ப்பு நாள் : 22.01.2026

* ஆசிரியர் சிறப்பு  தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தீர்ப்பில் உறுதி அளித்துள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு:

💥💥💥💥💥💥💥

 *சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 *பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு ஆறு வார காலத்திற்குள் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.* 

 *மூத்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பளித்த பிறகே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலையாசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

👇👇👇👇

Court Order - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வு முடிவுகள், நேற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை (G.O.Ms.No.23, School Education (TRB) Department, Dated: 28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

TET தேர்வு முடிவுகள், நேற்று  பிறப்பிக்கப்பட்ட அரசாணையை (G.O.Ms.No.23, School Education (TRB) Department, Dated: 28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும்  என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

181396

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Breaking : TET தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைப்பு - அரசாணை வெளியீடு. - G.O(Ms)No.23 dt 28.01.2026

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை வெளியீடு

School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of category wise minimum qualifying marks - Orders - Issued.

178309
பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான 55% தேர்ச்சி 50%-ஆக குறைக்கப்பட்டுள்ளது

* MBC, BC ...பிரிவினர் (50%) 150 க்கு. 75 மதிப்பெண்கள் பெற வேண்டும், 

* SC/ ST ..பிரிவினர் (40%) 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

* பொது பிரிவினர் -90

* 2025 தேர்வுக்கு மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.

TET Pass Mark New G.O(Ms)No.23 dt 28.01.2026 - Download here

IIT Madras Recruitment 2026 | Junior Research Fellow வேலை – ₹37,000 சம்பளம்

     இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான Indian Institute of Technology Madras (IIT Madras)-இல் Junior Research Fellow (JRF) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 13.02.2026 கடைசி தேதி

📌 பணியிடங்கள் விவரம்

பதவிகாலியிடம்
Junior Research Fellow1
மொத்தம்1
  • Job Location: Chennai, Tamil Nadu
  • Apply Mode: Online
  • Application Fee: இல்லை

🎓 கல்வித் தகுதி

Jrf
  • BE / B.Tech / ME / M.Tech
  • துறைகள்:
    • Chemical Engineering
    • Biomedical Engineering
    • Materials Engineering
    • Biotechnology
    • Nanotechnology
  • NET / GATE தேர்ச்சி அவசியம்

👉 Research-oriented background இருப்பவர்களுக்கு முன்னுரிமை.

💰 சம்பளம் (Salary)

  • Monthly Salary: ₹37,000

வயது வரம்பு

  • Age Limit: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
    (👉 அதிகாரப்பூர்வ Notification-ஐ பார்க்கவும்)

📝 தேர்வு முறை

  • Written Examination / Interview
  • Shortlisted Candidates மட்டும் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

🗓️ முக்கிய தேதிகள்

  • Online Registration தொடக்கம்: 27.01.2026
  • Online Registration முடிவு: 13.02.2026

🧾 விண்ணப்பிக்கும் முறை (Online – Step-by-step)

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Online லிங்கை கிளிக் செய்யவும்
  2. தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்
  3. Online Application-ஐ Submit செய்யவும்
  4. எதிர்கால பயன்பாட்டுக்காக Application Reference-ஐ சேமித்து வைக்கவும்

🔗 முக்கிய லிங்குகள் (Source)

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Notification & Apply Link-ஐ உறுதி செய்ய பரிந்துரை)

📌 ஏன் இந்த IIT Madras JRF வேலை முக்கியம்?

  • Top IIT-யில் Research Experience
  • NET / GATE qualified candidates-க்கு direct opportunity
  • ₹37,000 நிலையான மாத சம்பளம்
  • PhD / Advanced Research Career-க்கு Strong Foundation

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக் கல்வித்துறை - இளநிலை உதவியாளர் பணியாளர்களுக்கு மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

     173587

தமிழ்நாடு அமைச்சுப் உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து பணி இளநிலை தட்டச்சர் நிலை-3. ஆகியோர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் தாயர் செய்யப்பட்டது மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விவரங்கள் தெரிவித்தல் - சார்ந்து

2025-2026ض ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV ற்கான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நியமனம் வழங்குவதற்கு முன்னர் ஏற்கனவே பணியில் உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவியில் பணிபுரிவோரிடமிருந்து உடல்நிலை. குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவ்விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு பார்வை 6ல் காணும் செயல்முறைகளுடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு விடுபட்ட பணியாளர்கள் விவரம் மற்றும் பட்டியலிலுள்ள பணியாளர்களின் விவரங்களில் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய விவரங்களை அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருத்தம், மற்றும் நீக்கம் செய்யப்படவேண்டிய விவரங்களுடன் விடுபட்ட பணியாளர்களின் விவரங்களும் பார்வை 7ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து கருத்துருக்கள் (இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3) பெறப்பட்டது.

மேற்கண்டவாறு மாறுதல் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாவட்டத்திற்குள் மாறுதல் (Within District) கோரியுள்ளவர்களுக்கு 29.01.2026 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் நிலையிலேயே பார்வை 2ல் காணும் அரசாணை, பார்வை 3 மற்றும் பார்வை 4ல் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

DSE transfer counseling_reg - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNTET - தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு: விரைவில் அரசாணை வெளியாகிறது

     GE-17461-tntet-v2-1024x512

ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடிசா உள்​ளிட்ட மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் ஆசிரியர் தகு​தித் தேர்​வுக்​கான (டெட்) தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​கள் டெட் தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். தமிழகத்​தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்துகிறது.

மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப்​பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் பிசி, பிசி-​முஸ்​லிம், எம்​பிசி, எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 55 சதவீதமும் எடுக்க வேண்​டும்.

கடந்த நவம்​பரில் நடத்​தப்​பட்ட டெட் தேர்​வில் மட்​டும் எஸ்சி வகுப்​பினருக்குதேர்ச்சி மதிப்பெண் 40 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இந்தத் தேர்வு முடிவு​கள் இன்னும் வெளி​யா​வில்​லை. இதற்கிடையே, அண்மை​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸிடம், இதர மாநிலங்​களைப்போல் தமிழகத்​திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரின.

ஆந்​தி​ரா, தெலங்​கானாவில் டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 40 சதவீத​மாக​வும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. பிஹாரில் ஓபிசி-க்கு 50 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி-க்கு 45 சதவீத ​மாக​வும் உள்​ளது.

உத்​தரப்​பிரதேசத்​தில் ஓபிசி-க்கு 55 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி-க்கு 45 சதவீத​மாக​வும் இருக்கிறது. ஹரி​யானா மற்​றும் ஒடி​சா​விலும் அனைத்து பிரி​வினருக்​கும் தேர்ச்சி மதிப்​பெண் 50 சதவீத​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், மற்ற மாநிலங்​களைப் போல் தமிழகத்​தி​லும் மதிப்​பெண்ணை குறைக்க அரசு முன்​வந்​துள்​ளது. அதன்​படி, ஆந்​தி​ரா​வில் இருப்​ப​தைப்​போன்று பிசி, எம்​பிசி வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும் (150-க்கு 75 மதிப்​பெண்) எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு 40 சதவீத​மாக​வும் (150-க்கு 60) என குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யிடப்பட உள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்​கான 5 சதவீத மதிப்​பெண் குறைப்பை கடந்த 2025 டெட் தேர்​வில் இருந்தே அமல்​படுத்த அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் காரண​மாக, தேர்ச்சி பெறும் ஆசிரியர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி​யிட்​டுள்ள புள்ளி விவரப்​படி, டெட் தாள்​1-ல்தேர்ச்சி பெற்று 68,756 இடைநிலை ஆசிரியர்​களும், தாள்​ 2-ல் தேர்ச்சி பெற்று 66,660 பட்​ட​தாரி ஆசிரியர்​களும் பணியை எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​றனர்.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்​தவரை​யில் டெட் தேர்ச்சி பெற்​றாலும் அவர்​கள் பணிநியமனத்​துக்கு மற்​றொரு போட்​டித் தேர்வை எழுத வேண்​டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

G.O 330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை

     அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க  பரிசும்  பெறலாம் .  (07.11.2012)

எனவே 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு   நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு  முறை தயார்செய்யப்படும் பட்டிலலில் இடம் பிடித்து  பண ஒதுக்கீடூ கோரி சான்றும்  பரிசுத்தொகையும் பெற வும்

முக்கிய விவரங்கள்:

  • பணியிட தேவை: 25 ஆண்டுகள் மாசற்ற பணி.
  • ஊக்கத்தொகை: ₹ 2,000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்).
  • பயனாளிகள்: அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள்.
  • நிர்வாகம்: பள்ளிக்கல்வித்துறை/மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக பட்டியல் சேகரிக்கப்படுகிறது. 

Click Here to Download - G.O 330 - 25 Years of Service - Cash Incentive - Orders (07.11.2012) - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள் - இணைப்பு பரிந்துரை படிவம்

 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள்

விழுப்புரம் மாவட்டம் , அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் ஒழுங்கு நடவடிக்கையோ , தண்டனையோ இன்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 

ரூ .2000 / -வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு கோரும் ஆசிரியர்கள் / பணியாளர்களில் தகுதியானவர்களின் அசல் பணிப்பதிவேட்டின் பணிக்கால சரிபார்ப்பு ஒருங்கிணைந்த சான்று . பணிப்பதிவேடு முதல் பக்கம் , நியமனம் பக்க விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்

தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Download - 25 Years of Service As Teacher - Special Incentive - இணைப்பு பரிந்துரை படிவம் - Proceedings - Pdf

தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மாதிரிப் பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவா் சோ்க்கை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தரத்தை உயா்த்த, 2021-2022-ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம், நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தோ்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, உயா்கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை ஊக்குவிக்கிறது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு உயா்தர கல்வி மற்றும் நவீன வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இந்த மாதிரிப் பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா்.

இந்தநிலையில் இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதமும், பிளஸ் 1 வகுப்புக்கு மே மாதமும் மாணவா் சோ்க்கை நடைபெறும். எனவே அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆகியோரைக் கொண்டு இதற்கான முன்னோட்டக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மாதிரிப் பள்ளிகளில் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அணுகி, அவரது ஒப்புதலைப் பெற்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள், அவா்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் ஆகியோருக்கு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் மாணவா்கள் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.