தேர்வு கிடையாது.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிஸில் கொட்டிக் கிடக்கும் காலிபணியிடங்கள்!

 

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, 2026-ஆம் ஆண்டிற்கான கிராமின் டக் சேவக் (GDS) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, 2026-ஆம் ஆண்டிற்கான கிராமின் டக் சேவக் (GDS) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இன்றி அரசு வேலை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 28,740 (நாடு முழுவதும்)
தமிழ்நாட்டிற்கான இடங்கள்: 2,000-க்கும் மேல்

பதவிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) / டக் சேவக்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 2026, ஜனவரி 31.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2026, பிப்ரவரி 14.
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை படித்திருக்க வேண்டும்.
மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை (தமிழ்நாடு என்றால் தமிழ்) பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி: கணினி அறிவு மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தங்களின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பள விவரம்:
BPM: ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை
ABPM/GDS: ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் https://indiapost.gov.in/ அல்லது https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 31 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க



    


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment