Search

TNSTC: தமிழக அரசு பஸ்களில் டிரைவர்- கண்டக்டர் ஆகணுமா? நோ எக்ஸாம்; நீங்க செய்ய வேண்டியது என்ன?

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வந்தாச்சு அருமையான வேலைவாய்ப்பு. தேர்வு கிடையாது. எனவே, 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் தவிர மற்ற கழகங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 812

மண்டலம் வாரியான காலியிட விவரம்

கும்பகோணம் – 174

சேலம் – 254

கோயம்புத்தூர் – 60

மதுரை – 136

திருநெல்வேலி – 188

கல்வித் தகுதி : டிரைவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நடத்துனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கூடுதல் தகுதிகள் :

1. தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஜ்

2. அடிப்படை முதலுதவி சான்றிதழ்

3. 160 செ.மீ குறைவில்லாத உயரம்

4. குறைந்தபட்ச எடை 50 கிமீ

5. நல்ல கண்பார்வை மற்றும் பிற உடல் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல்

சம்பளம் : ரூ. 17,700 – 56,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. வயது, படிப்பு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமங்கள் ஆகியவை முன்னுரிமைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment