Search

பச்சை காய்கறிகளா அல்லது சமைத்த காய்கறிகளா..? நம் உடலுக்கு எது ஆரோக்கியமானது..?

 நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை பட்டியலிட்டால், அதில் காய்கறிகள் தான் முதல் இடத்தைப் பிடிக்கும். நிச்சியம் இதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆனால் காய்கறிகளை வைத்து நீண்ட நாட்களாக ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா அல்லது சமைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா? ஆனால் காய்கறிகளை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பது குறித்த பல கட்டுரைகளை நாம் படித்திருப்போம். காய்கறிகளை வேகவைத்து சாப்பிட்டால் தான், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கும் என ஒருசிலர் கூறுகின்றனர். இல்லை, இல்லை, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதுதான் சிறந்தது என வேறு சிலர் கூறுகின்றனர்.

பச்சை காய்கறிகளை விட சமைத்த காய்கறிகளில் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சமைத்த காய்கறியின் சுவைதான் நன்றாகவும் இருக்கும். கொதிக்க வைப்பதும், வேக வைப்பதும், வறுப்பதும் காய்கறிகளை சமைக்கும் சிறந்த முறைகளாகும். நாம் சமைக்கும் முறை கூட காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, ப்ரோகோலியை வறுத்தோ அல்லது மைக்ரோ ஓவனின் சூடாக்கியோ அல்லது கொதிக்க வைத்தோ சமைத்தால், அதிலுள்ள க்ளோரோஃபைல், சர்க்கரை, புரதம், விட்டமின் சி போன்றவை குறைந்துவிடுவதகவும் வேகவைக்கும் போது இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சமைத்த பின் அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகள்:

கீரை: கீரைகளில் ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளது. இவற்றை சமைத்து சாப்பிடும் போது, இதிலுள்ள கால்சியமும் இரும்புச் சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கீரைகளில் அதிகமாக ஆக்ஸாலிக் ஆசிட் உள்ளது. ஆகையால் கீரை பச்சையாக இருக்கும் போது அதன் கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை இது தடுத்துவிடுகிறது. கீரையை வேக வைக்கும் போது அதிக வெப்பநிலையில் இந்த ஆசிட் வெளியேறி நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.

தக்காளி: சமைத்த தக்காளியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பச்சை தக்காளியை விட சமைத்த தக்காளியில் அதிகளவு லைகோபீன் உள்ளது. இதில் பல முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. சமைக்கும் போது இதன் அடர்த்தியான செல்கள் உடைந்து நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

காளான்: நமது செல்கள் பாதிப்படைவதில் இருந்து பாதுகாத்து, நமக்கு ஏற்படக் கூடிய சில ஆபத்தான நோய்களிலிருந்து காக்கிறது ஆண்டி-ஆக்ஸிடெண்ட். காளான்கள் ஒரு வகையில் பூஞ்சையாக இருந்தாலும், இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உள்ளன. சமைத்த காளானில் பொட்டாசியம், நியசின், துத்தநாகம் போன்றவை அதிகளவில் நிரம்பியுள்ளன.

கேரட்: கேரட்டில் இருக்கும் பீட்டா-கரோட்டீன் என்ற பொருள் கரோடீனய்ட் என அழைக்கப்படுகிறது. இது நம் உடலில் விட்டமின் ஏ-யாக மாற்றம் அடைகிறது. நமது எலும்பு வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருப்பதற்கும் இது காரணமாக அமைகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment