TNPSC போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


டிஎன்​பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்​றும் 4 உள்​ளிட்ட போட்​டித் தேர்வுகளுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நவ.2-ம் தேதி முதல் நடக்​க​வுள்​ளது. 2026-ம் ஆண்​டு்க்​கான போட்​டித் தேர்வு கால அட்​ட​வணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.‌ இதற்கான பாடத்​திட்​டங்​களின்​படி தேர்​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் பயிற்சி வகுப்​பு​கள் நடத்த அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புப் பயிற்சி மையம் திட்​ட​மிட்​டுள்​ளது.


திறமைமிக்க பயிற்​றுநர்​களைக் கொண்டு வகுப்​பு​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. மேலும் மாதிரித் தேர்​வு​களு​டன் கூடிய கலந்​துரை​யாடல் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வுள்​ளது. அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து கட்​ட​ணமில்​லாமல் இந்த பயிற்சி வகுப்​பு​களை கடந்த 14 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்​கும் மேற்​பட்​டோர் மத்​திய, மாநில அரசு பணி​களில் இணைந்​துள்​ளனர்.


இப்​ப​யிற்சி வகுப்​பில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​களும், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய அனைத்​துப் பிரிவு மாணவர்​களும் கலந்து கொள்​ளலாம். சென்​னை-1 பாரி​முனை 6/9, அக்​ரஹாரம் சந்து (கச்​சாலீஸ்​வரர் ஆலயம்) அரு​கில் உள்ள அரண்​மனைக்​காரன் தெரு​வில் அமைந்​துள்ள இக்​கல்வி மையத்​தில் நவ.2. முதல் வகுப்​பு​கள் தொடங்க உள்​ளன.


வாரம்​தோறும் சனி மற்​றுமஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 9.30 மணி​முதல் மாலை 4.45 மணி வரை​யில் வகுப்​புகள் நடை​பெறும். ஆர்வமுள்ள தேர்​வர்​கள் முன்​ப​திவு செய்​வதுடன் பாஸ்​போர்ட் அளவி​லான புகைப்​படம் மற்​றும் முகவரி ஆதார நகலுடன் வரவேண்​டும். கூடு​தல் விவரங்​களுக்கு 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712 எண்​களை தொடர்​பு கொள்​ளலாம்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment