பழைய ஓய்வூதிய திட்டம் - 01.03.2004 பணியில் சேர்ந்தவர் CPS - GPF மாற்றி அரசாணை

  1466732


நீண்ட சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது

* நாகப்பட்டினம் மாவட்டம், வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் திருமதி. A. பாத்தி ஆரோக்கியமேரி என்பவரை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (CPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற்றி, பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (GPF) கீழ் கொண்டுவருவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது

* 1998–1999ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் இளநிலை உதவியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், தந்தையின் பிறப்பிடச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 01.03.2004ல்தான் பணியில் சேர்ந்தார். இதனால் இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்க்கப்பட்டார்.

* சென்னை உயர் நீதிமன்றம் W.P.No.30073/2022 மற்றும் WA No 2510/2025, உச்ச நீதிமன்றம் Diary No 74533 / 2025 தீர்ப்பு பெறப்பட்டு அரசாணை வெளியீடு

* நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978 மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி விதிகளின் கீழ் உரிய விதிகள் தளர்வு செய்யப்பட்டு, இவரை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றி அரசு ஆணையிட்டுள்ளது. 

* சி.பி.எஸ் (CPS) கணக்கில் உள்ள தொகையை புதிய ஜி.பி.எப் (GPF) கணக்கிற்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாணை கவனத்திற்கு கொண்டு வந்த திரு பிரெடெரிக்  எங்கல்ஸ் CPS ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நன்றி

அரசாணை இணைப்பு

https://drive.google.com/file/d/1G1cz1J92TkyYH4N_zCwh2xbkEttXJBXI/view?usp=drivesdk




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment