தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

1399567

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் - முதல்வர் விஜய்

1399894

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

JEE & NEET வகுப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் - உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!

1407277

பார்வை 1 & 2 ல் உள்ள அரசாணை மற்றும் செயல்முறைகளின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில், 13.06.2026 முதல் வாரந்தோறும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெற்றிப் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சார்ந்த பாடவாரியான பயிற்சிகள், பயிற்சித் தாள்கள், மாதிரித் தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் தேர்வு உத்திகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை முறையாகப் பயிற்சி செய்து, அவற்றில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை மாணவர்கள் சார்ந்த பள்ளி அளவிலேயே உறுதி செய்திடல் அவசியமாகிறது. எனவே, வெற்றிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை தினமும் மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்கள் பயிற்சித் தாள் வினாக்கள் மற்றும் அதனைச் சார்ந்து எழும் ஐயங்களைத் தீர்க்கவும், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்யவும், மணற்கேணி செயலி போன்ற இணையவழி கற்றல் வளங்களைப் பயன்படுத்தவும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை தலைமையாசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தங்களது தயாரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை அனைத்துத் தலைமையாசிரியர்களும் தவறாது செயல்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்

 hindutamil-prod%2F2026-11-02%2Fvu78d5h3%2F4

தமிழகத்​தில் பணி​யில் உள்ள ஆசி​ரியர்​களுக்​கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடை​பெறவுள்ளது. இதை​யொட்டி தேர்​வெழுதவுள்ள ஆசி​ரியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​குவதற்கான வழிகாட்டு நெறி​முறைகள் வெளியாகி​யுள்​ளன.

அதன் விவரம்: இந்த பயிற்சி திட்​டம் முழு​வதும் நேரடி வகுப்​பு​கள் முறை​யில் மட்​டுமே நடத்​தப்​படும். இந்த வகுப்​பு​கள் ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் ஆசி​ரியர் பயிற்சி நிறு​வனங்​கள் அல்​லது முதன்​மைக் கல்வி அலு​வல​கம் ஆகிய​வற்​றில் ஏதேனும் ஒரு இடத்தில் பயிற்சி நடத்​தப்​படும்.

இதில் பங்​கேற்க விரும்​பும் ஆசி​ரியர்​கள் முன்​கூட்​டியே பதிவுசெய்து கொள்ள வேண்​டும். ஒரு மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆசி​ரியர்​கள் பிற மாவட்​டங்​களில் குறிப்​பிட்ட பயிற்சி வகுப்​பு​களுக்​கான இட​வசதி இருப்​பின், அங்கு நடை​பெறும் பயிற்சி வகுப்​பு​களி​லும் பங்கேற்கலாம். வழக்​க​மான பள்​ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்​படாதவாறு பங்கேற்க வேண்​டும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

hindutamil-prod%2F2026-11-02%2Fg4419vc5%2F7

தமிழகத்​தில் 3,665 காவலர்​களை நியமிப்​ப​தற்​கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளி​யானது.

தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்​டாம் நிலை காவலர்​கள், இரண்​டாம் நிலை சிறைக் காவலர்​கள், தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,665 பணி​யிடங்​களுக்கு அறி​விப்பு வெளி​யிட்​டது.

இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த ஆண்டு நவ.9-ம் தேதி​யும், உடற்​தகுதி தேர்வு கடந்த ஜன.22 முதல் பிப்​.2-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது. இறுதி கட்​-ஆஃப் மதிப்​பெண்​கள் வெளி​யிடப்பட இருந்த நிலை​யில், நிர்​ண​யிக்​கப்​பட்ட உயரத்​தில் இருந்து 1 செ.மீ. குறை​வாக அனு​ம​திக்​கக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இதனால் இந்த தேர்வு நடவடிக்கை நிலு​வை​யில் இருந்​தது. இதே​போல, 1,299 எஸ்​.ஐ. பணி​யிடங்​களுக்கான அறி​விப்பு கடந்த ஆண்டு ஏப்​.4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டு, எழுத்து தேர்வு டிச.21-ம் தேதி நடை​பெற்​றது.

தமிழ்​வழி கல்வி இடஒதுக்​கீடு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தால் இந்த தேர்​வு முடிவும் வெளியாகவில்லை.ஒரு​புறம் காவல் துறை​யில் 15 ஆயிரம் காலி பணி​யிடங்​கள், மறு​புறம் தேர்வு நடை​முறை​கள் முடிந்​தும் பணி​யில் சேர முடி​யாமல் ஆயிரக்​கணக்​கான தேர்​வர்​கள் காத்​திருக்​கும் நிலை நீடித்​தது.

எனவே, நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்​து, தகு​தி​யான தேர்​வர்​களை உடனடி​யாக பணி​யில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது.

இது தொடர்​பாக கடந்த அக்​.5-ம் தேதி ‘‘தேர்​வு​கள் முடிந்​தும் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் காத்​திருக்​கும் நிலை, காவலர்​கள், எஸ்ஐ பணி நியமனத்​தில் சிக்​கல் நீடிப்​பு’ என்ற தலைப்​பில் சிறப்பு செய்தி வெளி​யானது.

இந்​நிலை​யில், முதல் கட்​ட​மாக காவலர்​களுக்​கான தேர்வு முடிவு நேற்று வெளி​யானது. இதே​போல, எஸ்​.ஐ. தேர்​வு முடிவையும்​ வெளியிட வேண்​டும்​ என்​ற கோரிக்​கை வலுத்​துள்​ளது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

  1408252

 பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P (MD)No.30461 of 2026, :23.10.2026 2 4 / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என இடைக்காலத் தடை ஆணை பெறப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இதனடிப்படையில் அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:இடைக்காலத் தடை ஆணை நகல்

question paper Fee-Proceedings

👇👇👇👇

Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் மரபு ஆடை: அமைச்சர் ராஜ்மோகன்

Tamil_News_lrg_4365406

தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், வாரம் ஒரு நாள் பாரம்பரிய வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வரும் வகையில், 'மரபு ஆடை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 'தமிழ்நாடு நாள்' விழா, சென்னையில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பலரின் கனவு

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். எல்லை காவலர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தமிழறிஞர்களின் நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, தமிழறிஞர்களுக்கு, 'தமிழ் செம்மல்' விருதுகளை வழங்கினர்.விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:ஆண்டுதோறும் ஜூலை, 18ம் தேதியை, 'தமிழ்நாடு தினமாக' கொண்டாடுகிறோம். அதேபோல, தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர், 1ம் தேதியையும், 'தமிழ்நாடு நாளாக' கொண்டாட வேண்டும் என்பது பலரின் கனவு. அது, இன்று நனவாகி உள்ளது. தற்போது குழந்தைகளுக்கு பரிசளிக்க, நாம், 'ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்' போன்ற பொம்மைகளை வழங்குகிறோம்.அதற்கு மாற்றாக, நம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும், தஞ்சை தலையாட்டி பொம்மையை வழங்க வேண்டும். அது எந்த பக்கம் தள்ளினாலும், தானாக எழுந்து நிற்கும். அதுபோல, வாழ்க்கையில் நம்மை யார் தள்ளி விட்டாலும், மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்க வேண்டும். பொம்மை, உணவு, உடை, பேசும் மொழி என, அனைத்திலும், தமிழர்களுக்கு தனி பண்பாடு உள்ளது.தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். நெடுஞ்சாலை, ஆவின், நீர்வளத்துறை என, அனைத்து துறைகளிலும், அமைச்சர்கள் லஞ்சத்தை வெறுக்கின்றனர். இதுவும் ஒரு வகையான அறம் தான். இவற்றுடன் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். நெசவாளர்களின் உழைப்பால் உருவாகும் பருத்தி ஆடைகளுக்கும், நம் பாரம்பரியத்திற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

வேட்டி சேலை

இதற்காக தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும், வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய, வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வரும் வகையில், 'மரபு ஆடை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்த வரலாறு நமக்கு உண்டு. அந்த வகையில், உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில், தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரே அதன் தலைவராக செயல்படுவார்.உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இளம் பேச்சாளர்களை அதிகம் உருவாக்கும் வகையில், 'தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு' என்ற பெயரில், பள்ளிகளில் தமிழ் சார்ந்த, பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.'ரூ.5 கோடிக்கு பேரம் பேசினர்' அமைச்சர் ராஜ்மோகன் மேலும் பேசியதாவது: 'தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவியை, எனக்கு கொடுக்கச் சொல்லுங்கள்; அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஐந்து கோடி ரூபாய் தருகிறேன்' என, ஒருவர் என்னிடம் பேசினார். இது, பாடநுால் கழக தலைவரான லயோலா மணிக்கு மட்டுமே தெரியும். ஆனால், நான் அதை ஏற்கவில்லை. மாறாக, மணியிடம் சிரித்துக் கொண்டே, '500 கோடி ரூபாய் கொடுத்தாலும், பொருத்தமில்லாத பதவியை, முதல்வர் யாருக்கும் வழங்க மாட்டார்' என்றேன். அந்த பதவியை, ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல், புஷ்பவனம் குப்புசாமிக்கு வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழகத்திற்கு தனிக்கொடிவிழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தற்போது பள்ளிகளில், தமிழ் மொழியில் பேசினால் தவறு என்கின்றனர். இந்த மனநிலை, தனியார் பள்ளிகளில் அதிகம் உள்ளது. ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே, பெரிய ஆளாக முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை அமைச்சர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். இந்த ஆட்சியில் அதை செய்ய வேண்டும். இதை முதலில் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதேபோல், நவ.,1 மற்றும் ஜூலை, 18ம் தேதிகளில், முதல்வர் கையால் தமிழகத்திற்கான ஒரு கொடியை வடிவமைத்து ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், அந்த கொடி ஏற்றப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு சமமாக, தமிழின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை, உருவாக்க வேண்டிய இடத்தில், நாம் தற்போது உள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஆகஸ்ட், 15 மற்றும் ஜன., 26ம் தேதிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. அதேபோல, நவ.,1 மற்றும் ஜூலை, 18ம் தேதியிலும், அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள்!

hindutamil-prod%2F2026-11-01%2Fz5qr4bi9%2F145821122

 எவ்​வித பரபரப்​பும் இன்றி, வெகு அமைதி​யாக, நேர்த்​தி​யாக குரூப்-2 முதல்​நிலைத் தேர்வை தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்வாணை​யம் சிறப்​பாக நடத்தி முடித்​துள்​ளது. வினாத்​தாளில் அச்​சுப்​பிழை, எழுத்​துப்​பிழை, கருத்​துப் பிழை அநேக​மாக அறவே இல்லை. இதற்​காக ஆணை​யம் தனி கவனம் செலுத்தி செயல்​பட்​டிருப்​பது நன்கு தெரி​கிறது. பாராட்​டுகள்.

பொது அறி​வுப் பிரிவு, பொதுத் தமிழ்ப் பிரிவு என்று இரண்​டிலும் வினாக்​கள் எளிதாகவே இருந்​தன. பெரிய அளவில் சிக்​கலோ, சவாலோ கொண்​டிராத நேரடி கேள்​வி​கள் நிரம்பி இருந்​தன. பொதுப் பாடப் பிரி​வில் ஒரு குறிப்​பிட்ட சிந்​தாந்​தம் சார்ந்த தமிழக அரசி​யல் வினாக்​கள் அதி​கம் இருந்​தன. அறி​வியல், நில​வியல், சுற்​றுச்​சூழல், கணினி தொழில்​நுட்​பம், சர்​வ​தேச நடப்​பு​கள்... இன்னும் பிற அறி​வுசார் தளங்​களில் இருந்து இந்த வினாத்​தாள் விலகி இருப்​ப​தாக ஓர் உணர்வு ஏற்​படத்​தான் செய்​கிறது.

அரசுப் பணிக்​கான போட்​டித் தேர்​வு​களில் பொது​வாக எதிர்​பார்க்​கப்​படும் ‘நடுநிலைமை’ வழு​வி​விட்​டதோ? ‘பரந்​துபட்ட அறி​வுத்​திறன்’ சரியாக சோதிக்​கப்​பட​வில்லையோ? என்ற எண்​ணம் எழுகிறது. நிச்​சயம் தவிர்க்​கப்​பட்டு இருக்​கலாம். பொதுப் பாடப் பிரி​வில், புற்​றுநோய் தீர்க்​கும் ‘ஹைட்​ரோஜெல்’ மருந்து, IUBMB என்​ஸைம், ‘டிஜிட்​டல் ஸ்கை ப்​ளாட்​பார்ம்’, ‘ஒமேகா பிளாக்’, தேசிய நுகர்​வோர் குறைதீர்வு ஆணை​யம், லோக்​பால் - லோக்​ஆயுக்தா, பொதுக் கணக்கு குழு, பஞ்​சாயத்​துகளின் அதி​காரம், இந்​தி​யாவின் பல்​வேறு பகுதி​களில் வசிக்​கும் பழங்​குடி​யினர்... அறி​வுத் தேடலில் முழு​மையாக ஈடு​பட்ட தேர்​வர்​களை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்​தும்.

மத்​திய, மாநில அரசுத் திட்​டங்​கள் குறிப்​பிட்ட அளவில் இடம்​பெற்​றுள்​ளன. விளை​யாட்​டுத் துறை​யில், 2025 FIDE சதுரங்​கப் போட்டி பற்​றிய ஒரு கேள்வி தவிர்த்து வேறு இல்லை என்​பது ஏமாற்​றம் தரு​கிறது.

பொருளாதா​ரம், பொது சுகாதா​ரம், வர்த்​தகம், அரசு நிர்​வாகம் உள்​ளிட்ட பல துறைகள் அநேக​மாக அறவே இடம்​பெறவில்லை. சட்​டம், நீதி - தகுந்த முக்​கியத்​து​வம் பெற்று இருக்​கிறது.

சில வினாக்​கள் வடிவ​மைக்​கப்​பட்ட விதம், அவை வலியுறுத்​தும் ‘கருத்​துரு’ வியப்பளிக்​கின்​றன. ஒரு கேள்வி இப்​படிக் கூறுகிறது: ‘மாநில அளவில் ஓர் அமைச்​சர், முதலமைச்​சரின் நம்​பிக்​கையைப் பெற்​றிருக்​கும் வரை பத​வி​யில் நீடிக்​கிறார். ஒரு அமைச்​சருடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டால், முதல்​வர் அவரைப் பதவி வில​கும்​படி கேட்​கலாம்; அல்​லது, அவரைப் பதவி நீக்​கம் செய்​யுமாறு ஆளுநருக்கு அறி​வுறுத்​தலாம்.’ தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்டு கேட்​கப்​பட்​ட​தாய் ஒரு தோற்​றம் ஏற்​படுவதைத் தவிர்த்து இருக்​கலாம்.

மற்​றொரு கேள்வி - ‘நமது அரசி​யலமைப்பு பிரிவு​களில் எது இந்​திய அரசின் மதச்​சார்​பற்ற தன்​மையை வெளிப்​படுத்​த​வில்லை?’ இக்​கேள்வி, நமது சாசனத்​தின் பாகம் III - ‘அடிப்​படை உரிமை​கள்’ பகுதி​யில் உள்ள பிரிவு 28 (2)ஐ விமர்​சிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. மிக உறுதி​யாய் தவிர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும்.

இன்​னும் சில சர்ச்​சைக்​குரிய கேள்​வி​கள் இடம்​பெற்​றுள்​ளன. இது​குறித்து விரிவாக எழுதினால் இந்தக் கட்​டுரை திசைமாறிப் போய்​விடலாம். மீண்​டும், ‘தவிர்க்​கப்​பட்டு இருக்​கலாம்’ என்​பதே போது​மானது.

தேர்​வின் இரண்​டாம் தாள், தமிழ்​வழிக் கல்வி பயின்ற தேர்​வர்​களுக்கு மிக எளிது. ஆனாலும், தமிழ் மொழி சார்ந்த சில வினாக்​கள், இன்​னும் நல்ல தரத்​தில் அமைந்​திருக்​கலாம். பொதுத் தமிழ் பிரி​வில் உள்ள கேள்​வி​கள் பல தமிழி​ன் மாண்பை உயர்த்​து​வ​தாக இல்லை. கேள்​வி​கள் தரம் உயர்த்​தப்​பட வேண்​டும். மேலும், ‘பொது ஆங்​கிலம்’ வினாக்​களை​விட, பொதுத் தமிழ் வினாக்​கள் கடினமாக இருந்​த​தாக ஒரு சாரார் கூறு​வதையும், ‘நேரம் போதாமை’ குறையையும் தேர்​வாணை​யம் கவனத்​தில் கொண்டு செயல்​பட்​டால் நலம்!

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

1399567

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் - முதல்வர் விஜய்

1399894

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

School Calendar - November 2026

3496

2026 நவம்பர் மாதம் "ஆசிரியர் டைரி"

01.11.2026 - ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தினம்

கிராம சபைக் கூட்டம்

02.11.2026 - திங்கள் கிழமை

கல்லறை திருநாள்

வரையறுக்கப்பட்ட விடுமுறை(RH) 

06.11.2026 - வெள்ளிக்கிழமை

திறன்+ மதிப்பெண் உள்ளீடு

EMISல் கடைசி நாள்

07.11.2026 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்

09.11.2026 - திங்கள் கிழமை

அரசு விடுமுறை 

(ஈடு செய்யும் விடுமுறை)

11.11.2026 - புதன்கிழமை

தேசிய கல்வி நாள்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள்

14.11.2026 - சனிக்கிழமை

குழந்தைகள் தினம்

பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்

15.11.2026 ஞாயிற்றுக்கிழமை

புதிய பாரத எழுத்தறிவு(NLIP) தேர்வு

19.11.2026 - வியாழக்கிழமை

STET Onlineல் விண்ணப்பிக்க கடைசி தேதி

21.11.2026 -  சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்

24.11.2026 - செவ்வாய்க்கிழமை

கார்த்திகை தீபம்

வரையறுக்கப்பட்ட விடுமுறை(RH) 

28.11.2026 - சனிக்கிழமை கிழமை

ஈடு செய்யும் பணி நாள்

(தீபாவளி மறு தினம்)