3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

   

hindutamil-prod%2F2026-11-02%2Fg4419vc5%2F7

தமிழகத்​தில் 3,665 காவலர்​களை நியமிப்​ப​தற்​கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளி​யானது.

தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்​டாம் நிலை காவலர்​கள், இரண்​டாம் நிலை சிறைக் காவலர்​கள், தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,665 பணி​யிடங்​களுக்கு அறி​விப்பு வெளி​யிட்​டது.

இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த ஆண்டு நவ.9-ம் தேதி​யும், உடற்​தகுதி தேர்வு கடந்த ஜன.22 முதல் பிப்​.2-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது. இறுதி கட்​-ஆஃப் மதிப்​பெண்​கள் வெளி​யிடப்பட இருந்த நிலை​யில், நிர்​ண​யிக்​கப்​பட்ட உயரத்​தில் இருந்து 1 செ.மீ. குறை​வாக அனு​ம​திக்​கக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இதனால் இந்த தேர்வு நடவடிக்கை நிலு​வை​யில் இருந்​தது. இதே​போல, 1,299 எஸ்​.ஐ. பணி​யிடங்​களுக்கான அறி​விப்பு கடந்த ஆண்டு ஏப்​.4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டு, எழுத்து தேர்வு டிச.21-ம் தேதி நடை​பெற்​றது.

தமிழ்​வழி கல்வி இடஒதுக்​கீடு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தால் இந்த தேர்​வு முடிவும் வெளியாகவில்லை.ஒரு​புறம் காவல் துறை​யில் 15 ஆயிரம் காலி பணி​யிடங்​கள், மறு​புறம் தேர்வு நடை​முறை​கள் முடிந்​தும் பணி​யில் சேர முடி​யாமல் ஆயிரக்​கணக்​கான தேர்​வர்​கள் காத்​திருக்​கும் நிலை நீடித்​தது.

எனவே, நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்​து, தகு​தி​யான தேர்​வர்​களை உடனடி​யாக பணி​யில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது.

இது தொடர்​பாக கடந்த அக்​.5-ம் தேதி ‘‘தேர்​வு​கள் முடிந்​தும் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் காத்​திருக்​கும் நிலை, காவலர்​கள், எஸ்ஐ பணி நியமனத்​தில் சிக்​கல் நீடிப்​பு’ என்ற தலைப்​பில் சிறப்பு செய்தி வெளி​யானது.

இந்​நிலை​யில், முதல் கட்​ட​மாக காவலர்​களுக்​கான தேர்வு முடிவு நேற்று வெளி​யானது. இதே​போல, எஸ்​.ஐ. தேர்​வு முடிவையும்​ வெளியிட வேண்​டும்​ என்​ற கோரிக்​கை வலுத்​துள்​ளது.


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment