டிகிரி தேவையில்லை... மத்திய அரசு நிறுவனத்தில் 171 அப்ரன்டீஸ் பணியிடங்கள் - விண்ணப்பிக்க நவம்பர் 24 கடைசி நாள்

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் அரசு அப்ரன்டீஸ் இணையதளத்தில் பதிவு செய்து, பின்னர் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 24-ம் தேதி ஆகும்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை தேடும் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் சார்பில் 171 அப்ரன்டீஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கான காலியிடங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டம், மலஞ்ச்கண்ட் காப்பர் திட்டத்தில் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 19 தொழிற்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இதில் மேட் மைன்ஸ், பிளாஸ்டர் மைன்ஸ் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. மற்ற தொழிற்பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் வயது நவம்பர் 1, 2026 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். டிப்ளமோ, பி.இ. உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி தகுதி பெற்றவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு முறை கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 70 சதவீதமும், ஐடிஐ மதிப்பெண்களுக்கு 30 சதவீதமும் முக்கியத்துவம் அளித்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பு மட்டும் தேவைப்படும் பணிகளுக்கு அந்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும்.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் அரசு அப்ரன்டீஸ் இணையதளத்தில் பதிவு செய்து, பின்னர் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 24-ம் தேதி ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment