TN Govt Jobs : தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கிராம ஊராட்சிகளில் பகுதிநேரப் பணியாளர்களாகச் செயல்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் 3,941 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றிப் பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியிடங்களின் எண்ணிக்கை 40,419 ஆகும். இதில் தற்போது ஊராட்சி கணக்கு எண் 7-ன் கீழ் 16,822 பேரும், ஊராட்சி கணக்கு எண் 1-ன் கீழ் 19,656 பேரும் என மொத்தம் 36,478 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 3, 941 காலிப்பணியிடங்களை உரிய விதிமுறைகளின்படி உடனடியாக நிரப்பத் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் உள்ள அல்லது தேவை இருக்கக்கூடிய குறிப்பிட்ட குடியிருப்பில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட குடியிருப்பில் தகுதியான நபர்கள் எவரும் கிடைக்கவில்லை என்றால், அதே ஊராட்சி ஒன்றியத்தில் அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களைப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், விசைப்பம்புகள் மற்றும் மோட்டார் பம்புகளை இயக்குவதில் (Pump operating) 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன்அனுபவமும், தேவையான தொழில்நுட்ப அறிவும் பெற்றிருப்பது கட்டாயமாகும். குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதே சமயம் அதிகபட்ச வயது 58 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment