Job Fair: தனியார் நிறுவனங்களில் வேலை... நவம்பர் 20-ம் தேதி இந்த இடத்துக்குப் போங்க

    

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நவம்பர் 2026-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.11.2026 வெள்ளிக்கிழமையன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI Diploma, B.E/ B.Tech, Nursing, Pharmacy போன்ற கல்வித்தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment