அரசு சார்ந்த திட்டத்தில் வேலை தேடுகிறீர்களா.? - விழுப்புரத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

    

விழுப்புரம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர்-1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்

விண்ணப்பதாரர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, குடியிருப்பாளராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், விலங்கியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொது கொள்கை அல்லது தொடர்புடைய இணையான துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,000 ஊதியத்துடன் 19 மாதங்கள் கணக்கான பணிக்காலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் தங்கள் சுயவிவர குறிப்பை dccmvpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மாவட்ட வன அலுவலகம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரடியாக நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


இப்பணியிடத்திற்கான விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத் தில் அடிப்படைத் தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு, எம்.எஸ் வேர்ட், எக்ஸ்செல், பவர் பாயிண்ட் திறன் பெற்றிருத்தல் அவசியம். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை ஒருங்கிணைத்தல், தரவு சேகரிப்பு, அறிக்கை தயாரித்தல், களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற திறன்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், தெரிவித்துள்ளார்.


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment