எதாச்சும் ஒரு டிகிரி இருந்தா போதும்... ஆரம்பச் சம்பளமே ₹70,000...சென்னையிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் போஸ்டிங்!

    இந்திய ரயில்வேயில் 1,265 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்  வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 7-வது ஊதியக் குழுவின் நிலை 6-இன் (Level 6) கீழ் இப்பணிக்கான அடிப்படை மாதச் சம்பளம் ரூ.35,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிகள் உள்ளிட்ட பிற சலுகைகளுடன் தொடக்க நிலையில் மாதத்திற்கு ரூ.70,000-க்கும் மேல் மொத்த ஊதியமாகப் பெற முடியும்.

மொத்தமுள்ள 1,265 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 542, ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதோர்) பிரிவினருக்கு 296, பட்டியலின பிரிவினருக்கு 176, பழங்குடியின பிரிவினருக்கு 104, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு 147, முன்னாள் ராணுவத்தினருக்கு 133 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக அதிகபட்சமாக மும்பையில் 177, ஜம்மு-ஸ்ரீநகரில் 122, சென்னையில் 119, திருவனந்தபுரத்தில் 114, பிரயாக்ராஜில் 112, பெங்களூருவில் 102 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மருத்துவத் தகுதி: விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாகக் கண்ணாடி அணியாத A2 மருத்துவத் தரம் (A2 Medical Standard without glasses) பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட பார்வைத்திறன் தகுதி இல்லாதவர்கள் தேர்ச்சி பெற்றாலும் நிராகரிக்கப்படுவர்.

வயது வரம்பு: இதற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் (36 வயது வரை), பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் (38 வயது வரை) தளர்வு உண்டு.


விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான முதல்நிலைத் தேர்வை (CBT 1) எழுதிய பின் கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும். பிற பொதுப் பிரிவினருக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு எழுதிய பின் வங்கிச் சேவைக் கட்டணம் போக ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் உளவியல் திறனறித் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவர். இதில் எழுத்துத் தேர்வுக்கு 70 சதவீத மதிப்பெண்களும், திறனறித் தேர்வுக்கு 30 சதவீத மதிப்பெண்களும் வெயிட்டேஜ் ஆக எடுத்துக்கொள்ளப்படும். தேர்ச்சி பெறுவோர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 25, 2026 (நள்ளிரவு 12 மணி வரை). விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: நவம்பர் 27, 2026. விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window): நவம்பர் 28, 2026 முதல் தொடங்கும். கடைசி நேர நெருக்கடிகளைத் தவிர்க்க முன்னதாகவே விண்ணப்பிப்பது நல்லது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in அல்லது rrb.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment