அரசு வேலை என்பது பலரின் கனவாக இருக்கிறது. அரசுப் பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "சென்னை தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை அரசின் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து இனசுழற்சி அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
கிராம ஊராட்சி செயலாளர் பணியானது தமிழ்நாடு அரசின் ஊதிய விகிதத்தில் 'நிலை 2' பிரிவின் கீழ் உள்ளது. அதாவது இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் குறைந்தபட்சமாக ரூ. 15,900 முதல் அதிகபட்சமாக ரூ.58,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. காலிப்பணியிடங்கள் மற்றும் இடஒதுக்கீட்டு இனசுழற்சி விவரங்கள் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தேவைக்கு ஏற்ப இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு கல்வி தகுதி என்பது குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். எனினும் ஒரு கட்டாய நிபந்தனை உள்ளது. அதாவது வேலைக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயம் ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
வயதை பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 - 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் ஆகியோர் 18 - 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு 18 - 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் வரை வயது நீட்டிப்பு உண்டு. விண்ணப்பக் கட்டணம் ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கட்டணம் ரூ.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஜனவரி 19 முதல் 21 ஆம் தேதி வரை நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவித்துள்ளது.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment