ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு

 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு

பள்ளிக் கல்வி -2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

DSE and DEE - Teaching Counselling Circular and Schedule.pdf

👇👇👇

Download here

*தமிழ்நாடு ஆசிரியர்கள் பொது மாறுதல் & பணிநிரவல் கலந்தாய்வு 2026-27: முக்கிய விவரங்கள்!*

*விண்ணப்பிக்கும் முறை & தேதிகள்:*

 * **15.06.2026 முதல் 22.06.2026 மாலை 6.00 மணி வரை** EMIS இணையதளம் (Individual Login ID) வழியாக விண்ணப்பிக்கலாம்.

 * சுயவிவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், முதலில் பள்ளி Login-இல் உள்ள 'Teacher Profile'-க்கு சென்று சரிசெய்த பின்பே சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த முறை இல்லை.

🎯 *ஒப்புதல் அளித்தல் (Approval):*

 * **DSE (உயர்/மேல்நிலை):** பள்ளித் தலைமை ஆசிரியர் முதற்கட்ட ஒப்புதலும் (1st Approval), முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) இரண்டாம் கட்ட இறுதி ஒப்புதலும் (2nd Approval) வழங்குவர்.

 * **DEE (தொடக்க/நடுநிலை):** வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) முதற்கட்ட ஒப்புதலும், மாவட்டக் கல்வி அலுவலர் (DEO - தொடக்கக் கல்வி) இறுதி ஒப்புதலும் வழங்குவர்.

🌟 *முன்னுரிமைப் பிரிவுகள் (Priority):*


 1. 100% கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.

 2. 40% மற்றும் அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள்.

 3. மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்.

 4. கடுமையான உடல்நல பாதிப்பு (சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டையாலிசிஸ், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மூளைக்கட்டி போன்றவற்றிற்கு சிகிச்சை பெற்றவர்கள்).

 5. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் கணவன் / மனைவி.

 6. விதவை, மனைவியை இழந்தவர், 40 வயது கடந்த முதிர்கன்னியர், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்கள்.

 7. தற்போதைய பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள்.

8. கணவன்-மனைவி முன்னுரிமை (தொலைவு 30 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும்).

💡 *சிறப்பு விதி:* 01.06.2025 முதல் 31.05.2026க்குள் கணவர் அல்லது மனைவியை விபத்து/திடீர் மரணத்தால் இழந்த ஆசிரியர்களுக்கு, எவ்வித முன்னுரிமை விதிகளையும் பார்க்காமல் கலந்தாய்விற்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்தில் மாறுதல் வழங்கப்படும்.

 *முக்கிய தேதிகள் (DSE - உயர்/மேல்நிலைப் பள்ளிகள்):*

 * **23.06.2026 - 24.06.2026:** விண்ணப்பங்களுக்கு CEO ஒப்புதல் அளித்தல்.

 * **25.06.2026 - 27.06.2026:** தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Seniority) & காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு மற்றும் திருத்தங்கள்.

 * **30.06.2026:** இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.

 * **01.07.2026 & 02.07.2026:** மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்.

 * **04.07.2026 & 06.07.2026:** உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்.

*07.07.2026:** உபரி முதுகலை ஆசிரியர்கள் (PG Deployment) பணிநிரவல்.

 * **09.07.2026 முதல் 15.07.2026 வரை:** முதுகலை/கணினி/தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல்.

 * **16.07.2026:** உபரி பட்டதாரி ஆசிரியர்கள் (BT Deployment) பணிநிரவல்.

 * **18.07.2026 & 20.07.2026:** உடற்கல்வி, கலை, இசை, தையல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.

 * **21.07.2026 & 22.07.2026:** ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE & DC) மாறுதல்.

 * **23.07.2026 முதல் 30.07.2026 வரை:** பட்டதாரி ஆசிரியர்கள் (BT) மாறுதல்.

📅 *முக்கிய தேதிகள் (DEE - தொடக்க/நடுநிலைப் பள்ளிகள்):*

Education

 * **25.06.2026:** தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (காலை 10 மணி) (பக்கம் 11).

 * **29.06.2026:** இறுதி முன்னுரிமைப் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு (பக்கம் 11).

 * **02.07.2026:** இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (பக்கம் 11).

 * **03.07.2026 முதல் 07.07.2026 வரை:** இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (பக்கம் 11, 12).

 * **08.07.2026 & 09.07.2026:** தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (பக்கம் 12).

 * **10.07.2026 முதல் 14.07.2026 வரை:** பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (பக்கம் 12).

 * **15.07.2026 & 16.07.2026:** நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (பக்கம் 12).

🚫 *இதர முக்கிய விதிமுறைகள்:*

 * **விடுப்பு முறை:** கலந்தாய்வு நாளில் மாற்றுப்பணி (OD) கிடையாது. தற்செயல் விடுப்பு (CL) எடுத்துக்கொண்டே பங்கேற்க வேண்டும். தாமதமாகவோ அல்லது வராமலோ இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

 * **இரு கலந்தாய்வு விதி:** உள்மாவட்டக் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டக் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது.

 * **மனமொத்த மாறுதல் (Mutual Transfer):** இதற்கான அறிவிப்பு பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் தனியாக வெளியிடப்படும்.

714112

714113

714114

714115

714116



0 Comments:

Post a Comment