தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) ஏன்? எதற்கு? எப்படி?

    NMMS

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) ஏன்? எதற்கு? எப்படி?


ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


இந்த என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) தேர்வானது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


தகுதி


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன்,  ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும். பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.


தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி?


பாடதிட்டம்:


முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும். 


90 மதிப்பெண்ணிற்கு மனத்திறன் தேர்வு, 90 மதிப்பெண்ணிற்கு படிப்பறிவு திறன் தேர்வு என 2 வகையான தேர்வுகள் நடந்தப்படும்.

எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் விபரங்களைக்கு:


https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdf


http://www.dge.tn.gov.in


விண்ணப்பிக்கும் முறை:


1. NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 


தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


2. தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புப் பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து, பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.3. புகைப்படம் ஒட்டிப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள், தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் குறிப்பிட்ட தேதிக்குள் ஒப்படைத்தல் வேண்டும்.


4. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்தான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


5. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்த விவரம் பெறப்பட்டவுடன், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.

6. தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கட்டமாகவும் , மொத்தத் தேர்வுக் கட்டணத்தையும் ரொக்கமாக, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள் குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும்.


7. காலதாமதமாகப் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயமாக நிராகரிக்கப்படும். புறச்சரகப் பதிவெண் கொண்டு தேர்வெழுதத் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


2027 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு நவம்பர்/டிசம்பர் 2026ல் நடைபெறலாம்.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாணவர்கள் படிப்பையும், ஓய்வையும் சமமாகப் பிரிக்க வேண்டும்

    


 இன்றைய சூழலில், மாணவர்களுக்கு காலையில் பள்ளிக்குச் செல்வதில் தொடங்கும் அவசரம் இரவு தூங்கும் வரை தொடர்கிறது. பள்ளி முடிந்ததும் டியூஷன், பிறகு இசை, நீச்சல், ஓவியம் என அடுத்தடுத்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு, மற்ற குழந்தைகளை விட தங்களது குழந்தைகள் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பெற்றோரின் அக்கறையே சில சமயங்களில் அடிப்படைக் காரணம் ஆகலாம். ஆனால், நாள் முழுவதும் இடைவிடாமல் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுத்தப்படுவது குழந்தைகளின் இயல்பான மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை.

சிறிது நேரம் ஓய்வு


எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை குழந்தைகளுக்குச் சோர்வையும் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. போதுமான ஓய்வு கிடைக்காத போது தலைவலி, தூக்கமின்மை, கவனக்குறைவு, சீக்கிரம் எரிச்சலடைவது போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் குறைந்து, எல்லாமே செய்து முடிக்க வேண்டிய ஒரு கட்டாயப் பணியாக அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கும் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். மற்றவர்களின் தலையீடு இல்லாமல் தனியாக விளையாடும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் தான் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் வளர்கிறது.

படிப்பையும், ஓய்வையும் சமமாகப் பிரிக்க வேண்டும்


பெற்றோர்கள் எல்லா நேரத்தையும் வகுப்புகளால் நிரப்பும் போது, தங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும், தனியாக முடிவெடுக்கும் திறனும் அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

இதைத் தவிர, தொடர் வகுப்புகளால் பல மாணவர்களுக்கு பெற்றோரிடமோ நண்பர்களிடமோ பேச நேரம் கிடைப்பதில்லை. சக மாணவர்களோடு இயல்பாக விளையாடும் போது தான் மற்றவர்களோடு பழகும் விதமும், விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையும் வளரும். இறுதியாக, குழந்தைகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது தான். ஆனால் அது அவர்களின் விருப்பத்தின் பேரிலும், அவர்களுக்கு சிரமம் தராத அளவிலும் இருக்க வேண்டும்.

வாரத்தில் சில நாட்களாவது எந்த வகுப்பும் இல்லாமல் அவர்கள் விரும்பியபடி கழிக்க அனுமதிக்கலாம். குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு, படிப்பையும் ஓய்வையும் சமமாகப் பிரித்துத் தருவதே அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

AI அறிவு மாணவர்களுக்கு தேவையா?

    


 இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. அன்றாட வேலைகள் முதல் கல்வி வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது.

ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்


வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிப்பதுடன் நின்றுவிடாமல், நவீன தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டும் போதாது, ஏ.ஐ., எவ்வாறு இயங்குகிறது, அதை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு ஒவ்வொரு மாணவனுக்கும் அவசியமாகிறது.

தற்காலத்தில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஏ.ஐ., பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் புரியும் வகையில் தனித்துவமான உதாரணங்களுடன் பாடம் கற்பிக்க இது உதவுகிறது. கணிதம் போன்ற கடினமான பாடங்களை கூட அவரவர் கற்கும் வேகத்திற்கு ஏற்ப எளிமையாக்க முடிகிறது.

வாய்மொழி வழி உரையாடல், உடனடி மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக கிராமப்புற மாணவர்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் தடையின்றி கல்வி கற்க இந்த ஏ.ஐ., பாலமாக அமைகிறது. இது மாணவர்களின் சிந்திக்கும் திறனையும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

கண்மூடித்தனமாக நம்புவது தவறு


எந்தவொரு புதிய தொழில்நுட்பத்திலும் நன்மைகள் இருப்பதைப் போல சில சவால்களும் இருக்கத் தான் செய்கின்றன. ஏ.ஐ., தரும் பதில்களைக் கண்மூடித்தனமாக நம்புவது தவறான வழிகாட்டலுக்கு வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் ஏ.ஐ., செயலிகளையே நம்பியிருந்தால், சொந்தமாகச் சிந்திக்கும் ஆற்றலும் சுயமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனும் குறையும் அபாயம் உள்ளது. அதே போல, இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் மாணவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

உண்மைத்தன்மையை ஆராய வேண்டும்


பள்ளிகளில் ஏ.ஐ., கல்வியை வெறும் தியரியாக மட்டும் கற்றுத் தராமல், செய்முறைப் பயிற்சிகளாக மாற்ற வேண்டும். எளிய புராஜெக்ட்கள் மூலமாகவும், சாட்பாட்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பார்ப்பதன் மூலமாகவும் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கச் செய்யலாம். அறிவியல், சமூகவியல் போன்ற பிற பாடங்களோடும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை இணைத்துப் படிக்கும் போது, மாணவர்களால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். மேலும், ஏ.ஐ., கொடுக்கும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றில் உள்ள உண்மைத்தன்மையை ஆராயும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது நல்லது.

திறமையாகக் கையாளுபவர்களுக்கே முன்னுரிமை


எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தோடு சேர்ந்தே இருக்கும். ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு. ஆனால், தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு அதைத் திறமையாகக் கையாளுபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மாணவர்கள் இப்போதிலிருந்தே ஏ.ஐ., அறிவை சரியாக கற்றுக்கொண்டு, தொழில்நுட்பத்தை தங்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த கருவியாகப் பயன்படுத்தலாம்.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

8th Pay Commission - அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2026 முதல் அரியர்- எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

     

8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி, சம்பள உயர்வுக்கான அரியர் தொகையின் அளவு மற்றும் அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவை, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிடப்போகும் இறுதி அறிவிப்பைப் பொறுத்தே அமையும்.
 
8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த பரிந்துரைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே இது குறித்த தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

சம்பள உயர்வுடன் அரியர் தொகை
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் சம்பளம் உயரும் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இதில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமும் உள்ளது. அதுதான் சம்பள உயர்வுக்கான அரியர் தொகை. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எவ்வளவு தாமதமாக அமல்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு அரியர் தொகையும் அதிகமாக இருக்கும்.

8வது ஊதியக் குழு அரியர் தொகை
 
ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குறிப்புத் தேதியான 2026 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு (retrospective effect) அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இந்தத் தேதியிலிருந்தே புதிய ஊதிய அமைப்பைச் செயல்படுத்த முடிவு செய்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகைகள் (8th Pay Commission Arrears) கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலுவைத் தொகைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
அரசு வேலை

அரியர் தொகை எப்படி வழங்கப்படும்?

8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி, சம்பள உயர்வுக்கான அரியர் தொகையின் அளவு மற்றும் அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவை, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிடப்போகும் இறுதி அறிவிப்பைப் பொறுத்தே அமையும். இந்த அறிக்கையின்படி, பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 12 முதல் 18 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டால், ஊழியர்களுக்கு அவர்களின் திருத்தப்பட்ட ஊதியத்தின் பல மாதங்களுக்கு இணையான நிலுவைத் தொகை கிடைக்கக்கூடும்.
 
ஊதிய நிலை (pay level), ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor) மற்றும் படிகளைப் பொறுத்து, இந்தத் தொகை ₹1 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். பரிந்துரைகள் எந்தத் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த நிலுவைத் தொகை அமையும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுவாக, அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அரியர் தொகையின் அளவு (ஊதியம் மற்றும் ஓய்வூதியம்) பின்வரும் இரண்டு முக்கிய காரணிகளைப் பொறுத்து இருக்கும்:

ஆகையால், நிலுவைத் தொகை பெறுவதற்கான தகுதி, அது நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் கணக்கீடு குறித்த துல்லியமான தகவல்களைப் பெற, ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மத்திய அரசின் இறுதி அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

இதுவரை இருந்த நடைமுறை என்ன?
 
முந்தைய ஊதியக் குழுக்களின் அனுபவத்தைப் பார்த்தால், ஊழியர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு வெவ்வேறு கால அளவுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 19 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. அப்போது நிலுவைத் தொகைகள் 1997–98 மற்றும் 1998–99 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டன.
 
6வது ஊதியக் குழுவின் விஷயத்தில், ஊழியர்கள் 32 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. அதனுடன் தொடர்புடைய நிலுவைத் தொகைகள் 2016–17 நிதியாண்டில் வழங்கப்பட்டன. 
8வது ஊதியக் குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 

இருப்பினும், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் சரியான தேதி, அமலாக்க காலவரிசை மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கும் முறை குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரியர் எப்படி கணக்கிடப்படுகின்றது?
ஊதிய உயர்வு அரியர் தொகைக்கான சூத்திரம் இதோ:

அரியர் தொகை = மாதாந்திர சம்பள வித்தியாசம் (8வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களின் அடிப்படை ஊதியங்களுக்கு இடையிலான வித்தியாசம்) x தாமதமான மாதங்களின் எண்ணிக்கை.

அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அரியர் தொகையின் அளவை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் வெவல் 6 ஊழியர்களுக்கான அரியர் தொகை கணக்கீட்டை காணலாம்.

7வது ஊதியக் குழுவின்படி, நிலை 6 (Level 6) ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ.35,400
திருத்தப்பட்ட ஊதியம் (2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர்): ரூ. 90,978
ஊதிய உயர்வு: மாதம் ரூ. 55,578
அரியர் தொகை: ரூ. 11,11,560 (20 மாதங்களுக்கு)




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

8th Pay Commission - D.A அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அரசு ஊழியர்களுக்கு அப்டேட்

   

 8th Pay Commission DA Merger: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது தொடர்பான கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த முறையாவது ஊழியர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா? முந்தைய ஊதியக் குழுக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன முடிவுகளை எடுத்தன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, அகவிலைப்படி (Dearness Allowance - DA) என்பது அவர்களின் ஊதியத்துடன் சேர்க்கப்படும் ஒரு கூடுதல் தொகை மட்டுமல்ல. இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு மத்தியில் செலவுகளைச் சமாளிக்க மிகவும் அவசியமான ஒரு அலவன்சாகும். ஆகையால்தான், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

5வது ஊதியக் குழுவின் நிலைப்பாடு என்ன?
5வது ஊதியக் குழு, அகவிலைப்படி தொடர்பாக சில முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது. அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 100% ஈடுசெய்யும் (neutralization) முறையை அது பரிந்துரைத்தது. மேலும், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) அடிப்படை அளவிலிருந்து 50% உயர்ந்தால், அகவிலைப்படியை 'அகவிலை ஊதியமாக' (Dearness Pay) மாற்ற வேண்டும் என்றும் அது முன்மொழிந்தது.

மத்திய அரசு ஊழியர்கள்
இந்த 'அகவிலை ஊதியத்தை', ஓய்வூதியப் பலன்கள் உட்பட அனைத்து தொடர்புடைய கணக்கீடுகளுக்கும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு, பல்வேறு ஊழியர் பிரிவுகளுக்குத் தனித்தனி குறியீடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, 'அகில இந்திய தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீட்டின்' (AICPI-IW) 12 மாத சராசரியைப் பயன்படுத்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.

6வது ஊதியக் குழு, 5வது ஊதியக் குழு
6வது ஊதியக் குழு, 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டுக் காட்டியது. அதே சமயம், 7வது ஊதியக் குழு, அகவிலைப்படியைக் கணக்கிடும் தற்போதைய முறையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கருதியது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், இதையே தொடரலாம் என்று அது பரிந்துரைத்தது.

8வது ஊதியக் குழுவிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 60%-க்கு இணையான அகவிலைப்படியைப் பெறுகின்றனர். 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இருப்பினும், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு
ஊழியர் சங்கங்கள் இது தொடர்பான தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FNPO), அகவிலைப்படி (DA) அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதத்தைத் தாண்டும்போது, ​​அதை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. 'பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ்' (Bharat Pensioners Samaj) அமைப்பும், அகவிலை நிவாரணத்தை (DR) மூன்று மாத சராசரியின் அடிப்படையில் திருத்தியமைக்க வேண்டும் என்றும், அதை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்துறை பணியாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு

தொழில்துறை பணியாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI-IW) கணக்கிடும் முறை குறித்து பல பணியாளர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. பணவீக்கத்தை மதிப்பிடுவதற்கு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்குப் பதிலாக, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம்
இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), தற்போதைய குறியீட்டு முறை அரசு ஊழியர்களின் உண்மையான செலவினங்களையும் நுகர்வு முறைகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்று வாதிடுகிறது. இதற்கிடையில், பிற பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள், அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட அகவிலைப்படியும் (DA) அகவிலை நிவாரணமும் (DR) போதுமானதாக இல்லை என்று கருதுகின்றன.

அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது
தற்போது அனைவரது பார்வையும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் மீது திரும்பியுள்ளது. பணவீக்கத்திலிருந்து தங்கள் உண்மையான வருமானம் மற்றும் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கும் வகையில், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது மற்றும் அதைக் கணக்கிடும் முறைக்கான பரிந்துரைகளை 8வது ஊதியக் குழு வழங்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துதல் - அரசாணை வெளியீடு

    


 

பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துதல் - அரசாணை வெளியீடு


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க