Chennai Tambaram OSC Recruitment 2026 | Case Worker & Security Guard Jobs

    சென்னை தாம்பரம் One Stop Centre (OSC)-ல் காலியாக உள்ள 8 பணியிடங்களை நிரப்ப சமூக நலத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெண்கள், சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோருக்கு இது ஒரு நல்ல வேலைவாய்ப்பு.

📌 வேலைவாய்ப்பு விவரங்கள் (Overview)

  • அமைப்பு: Chennai Tambaram One Stop Centre (OSC)
  • துறை: District Social Welfare Office
  • வேலை இடம்: Chennai, Tamil Nadu
  • மொத்த காலியிடங்கள்: 8
  • விண்ணப்ப முறை: Offline (Post மூலம்)

📊 பணியிட விவரம் (Post-wise Vacancy)

பதவிகாலியிடங்கள்
Senior Counselor1
Case Worker3
Security Guard2
Multipurpose Helper2
மொத்தம்8

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

 Senior Counselor

  • MSW / Counseling Psychology / Social Work-ல் Master’s Degree
  • குறைந்தது 2 ஆண்டு அனுபவம்

🔹 Case Worker

  • BSW (Bachelor of Social Work)
  • 1 ஆண்டு அனுபவம்

🔹 Security Guard

  • பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்
  • முன் அனுபவம் இருக்க வேண்டும்

🔹 Multipurpose Helper

  • சமையல் மற்றும் அலுவலக வேலை அனுபவம் இருக்க வேண்டும்

💰 சம்பள விவரம் (Salary Details)

பதவிமாத சம்பளம்
Senior Counselor₹22,000
Case Worker₹18,000
Security Guard₹12,000
Multipurpose Helper₹10,000

🎯 வயது வரம்பு (Age Limit)

  • வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
  • அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்படும்

🧪 தேர்வு முறை (Selection Procedure)

  • நேர்முகத் தேர்வு (Interview)
  • சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு

💵 விண்ணப்பக் கட்டணம் (Application Fee)

  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை ❌ (No Fee)

📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • விண்ணப்ப தொடக்கம்: 30.01.2026
  • விண்ணப்ப கடைசி நாள்: 20.02.2026

Application Form: Download Application Form

Official Notification (PDF): View the full notification document

Official Website: Visit the official job website

✉️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. விண்ணப்பப் படிவத்தை பெறவும்
  2. Print செய்து பூர்த்தி செய்யவும்
  3. தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்
  4. கீழ்கண்ட முகவரிக்கு Post மூலம் அனுப்பவும்

📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

District Social Welfare Officer,
District Social Welfare Office,
Collectorate Campus,
8th Floor, Singaravelar Maligai,
Rajaji Salai,
Chennai – 600001

📌 இந்த வேலை ஏன் முக்கியம்?

  • Social Welfare Department Job
  • பெண்கள் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்றது
  • Interview மட்டும் – Written Exam இல்லை
  • Chennai-ல் அரசு சார்ந்த வேலை
  • Case Worker / Counselor background உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் - அலுவலக செயல்பாடுகள் - கூடுதல் தெளிவுரைகள் - HRM Letter

அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பதிவேடுகள் விவரம்👆🏻

அலுவலக செயல்பாடுகள் கூடுதல் அறிவுரை/தெளிவுரை .

அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் (In physical / e-format) மற்றும் நீக்கப்பட வேண்டிய பதிவேடுகள் விவரம் தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம் வெளியீடு (26.12.2025)

Click Here to Download - HRM Department - Register Maintenance - Latest Letter - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்கிறது!

2% அகவிலைப்படி உயர்கிறது!

01.01.2026 முதல் அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.

கடந்த ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில், விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் 01.01.2026 முதல், அகவிலைப்படி 2% உயர்ந்து, 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.

இதற்கான முறையான அறிவிப்பு, மார்ச் மாதம் இறுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும்.

ஒன்றிய அரசு அறிவித்தவுடன், தமிழ்நாடு அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மத்திய பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள்

மிகச் சரியாக முற்பகல் 11.01க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

தொடர்ச்சியாக 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அதிவேக ரயில் வழித்தடங்கள்

மத்திய பட்ஜெட் 2026-27 இல், தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை – பெங்களூரு

சென்னை – ஹைதராபாத்

மருத்துவத் துறை

நாடெங்கும் 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.

தனியார் துறையோடு இணைந்து நாடெங்கும் மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.

ஆயுர்வேத மருத்துவத்துக்கு நாடெங்கும் 3 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

சேவைத் துறையில் இந்தியா உலக அரங்கில் முன்னணியில் திகழ புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

மருத்துவ துறை சார்ந்த தொழில்நுட்ப கல்வி, சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களை உருவாக்க திட்டம்

திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

நாட்டில் 5 பல்கலை நகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

ஆயுர்வேத மருந்தகங்கள் தரம் உயர்த்தப்படும்

சுற்றுலா துறையை மேம்படுத்த தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

சிறப்பம்சங்கள்

கரிம ஈர்ப்பு மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு

நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும். பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்

நகர்ப்புற மேம்பாடு

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு வளர்ச்சியை எட்ட அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

பணவீக்கவிகிதம்

கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் தொடர்ந்து நிலையான விகிதத்தில் இருந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7 அதிவேக ரயில் பாதைகள்

நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என அறிவிப்பு

  • மும்பை – புனே
  • புனே – ஹைதராபாத்
  • ஹைதராபாத் – பெங்களூரு
  • ஹைதராபாத் – சென்னை
  • சென்னை – பெங்களூரு
  • புது தில்லி – வாராணசி
  • வாராணசி – சிலிகுரி

வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும்  6 துறைகள்!

வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகள் முன்மொழியப்பட்டதாகக் கூறினார்.

7 எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அளவிடுதல்.

பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல்.

சாம்பியனான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல்

உள்கட்டமைப்பு உந்துதல்

நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்

நகரப் பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல் என வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 6 துறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செமிகண்டக்டர் 2.0 வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஐஎஸ்எம் 1.0 மற்றும் ஐஎஸ்எம் 2.0 மிஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஐபியுடன் செமி கண்டக்டர் உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயோ-பார்மா துறைக்கு ரூ.10,000 கோடி

பயோஃபார்மா துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

பயோ-ஃபார்மா துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அண்மையில் 350க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன என்றார்.

அனைவருக்கும் வளர்ச்சி

எம்எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.

அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.

நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.

3 முக்கிய கடமைகள்

3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.

அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை!

பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு இருந்ததே உச்ச வரம்பு நீடிக்கிறது.

புதிய வரி விதிப்பு முறையில்,

குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி விதிப்பு இல்லை.

ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி

ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி

ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி

ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி

ரூ.24 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வுக்கான முகப்புத்தாள் தைக்கும் பணி: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

     பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்​களுக்​கான முகப்​புத் தாள்​கள் தைக்​கும் பணி​கள் தொடர்​பான வழி​காட்​டு​தல்​களை தேர்வுத் துறை வெளி​யிட்​டுள்ளது.

தமிழகத்​தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்​களின் புகைப்​படம், பதிவெண் மற்​றும் பாடம் போன்ற விவரங்​கள் அடங்​கிய முகப்​புத்​தாளை (டாப் ஷீட்) முதன்மை விடைத்​தாளு​டன் சேர்த்​து, தேர்வுத் துறை அறி​வுறுத்​தலின்​படி தைக்​கும் பணி அந்​தந்த மாவட்​டங்​களில் நடை​பெறு​வது வழக்​கம்.

அந்த வகை​யில் நடப்​பாண்டு பொதுத் தேர்வு முகப்​புத்​தாள் தைக்​கும் பணி​களுக்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக தேர்வுத் துறை இயக்​குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: பொதுத் தேர்வுகளில் விடைத்​தாள் மதிப்​பீடு முறை​யில் ரகசி​யம் காக்​கும் வகை​யில் 2014-ம் ஆண்​டு​முதல் பார்​கோடுடன் கூடிய முகப்​புத் தாள்​களை விடைத்​தாள்​களு​டன் இணைத்து தைக்​கும் முறை செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

2024-25-ம் கல்​வி​யாண்டு முதல் மாவட்​டந்​தோறும் முகாம் அமைத்து அதில் முகப்​புத் தாள்​களை விடைத்​தாள்​களு​டன் சேர்த்து தைத்து தேர்வு மைய பள்​ளி​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

முகாம் கண்​காணிப்பு அலு​வலர்​களாக முதன்​மைக் கல்வி அலு​வலர் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலரும், ஒருங்​கிணைப்பு அலு​வலர்​களாக மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்​குநரும், முகாம் அலு​வல​ராக முகாம் நடை​பெறும் பள்​ளி​யின் தலைமை ஆசிரியரும் செயல்​படு​வர்.

முகப்​புத் தாள்தைக்​கும் பணியை முகாம் நடை​பெறும் நாட்​களில் முதன்​மை, மாவட்​டக் கல்வி அலு​வலர் ஒரு​நாள் விட்டு ஒரு ​நாள் ஆய்வு செய்ய வேண்​டும். விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​படும் முகப்​புத் தாள்​கள் அந்த பாடத்​துக்​குரியதா என்​பதை ஆய்வு செய்ய வேண்​டும்.

அந்த முகா​முக்​குள் வெளிநபர் யாரை​யும் அனு​ம​திக்​கக்​கூ​டாது. மையங்​களில் இருந்து முகப்​புத் தாள்​களு​டன் கூடிய விடைத்​தாள் கட்​டு​களை பெற்​றுச் சென்று தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் அதை பாது​காப்​பாக வைக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு வழி​காட்​டு​தல்​கள் அதில் இடம் பெற்​றுள்​ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET Pass SR Entry letter

186963

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற விவரத்தை தங்களது அலுவலகத்தில் Service Record -ல் பதிவு செய்வதற்கு வழங்க வேண்டிய கடித மாதிரி...

TET Pass SR Entry letter .pdf

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

31.01.2026 அன்றைய நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உத்தரவு.

     அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களில் 31.01.2026 அன்றைய நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்...

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

186584

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கல்வி உதவித் தொகை வழங்க முதல்வரின் திறனாய்வுத் தேர்வு: தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற் கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. முதல் தாள் (கணிதம்) தேர்வு காலை 10-12 மணி வரையும், 2-ம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) தேர்வு மதியம் 2-4 மணி வரையும் நடைபெறும்.

ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், அவர்களது பதிவெண்ணுக்கு உரியது தானா என்பதை ஹால்டிக்கெட் டுடன் ஒப்பிட்டு உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளை குறிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட தேர்வு மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

     180884

பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பார்வைச் சவால் கொண்ட மாணவர்கள் சொல்வதை எழுதுபவராக Scriber பணிக்கு ஆசிரியர் பட்டயச் சான்றிதழ், ஆசிரியர் பட்டச் சான்றிதழ், தொழிற்கல்வி, கலை அறிவியல் பட்டம் படிக்கும் 2ம் ஆண்டு மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்திக் கொள்ளளாம்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுவோராக நியமனம் செய்யலாம் 

- அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை

 DGE - Appointment of Scribe Letter

👇👇👇👇