தங்கள் பள்ளி மாணவர் ஒருவரது தற்போது பயிலும் வகுப்பு தவறாக இருப்பின் அதனை சரி செய்வதற்கு CLASS CHANGE REQUEST கொடுக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Education News, Employment News in tamil
தங்கள் பள்ளி மாணவர் ஒருவரது தற்போது பயிலும் வகுப்பு தவறாக இருப்பின் அதனை சரி செய்வதற்கு CLASS CHANGE REQUEST கொடுக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது.அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.
2222+360+610=3192
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
உலர்ந்த அத்தி பழங்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துக்களை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. இரவு முழுவதும் உலர்ந்த அத்தி பழங்களை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கிறது. அவை என்ன என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
நார்ச்சத்து நிறைந்தது ஊறவைத்த அத்திப்பழங்கள் உணவு நார்ச்சத்தின் அற்புதமான மூலமாக அமைவதால் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்பட்டு ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படுகிறது : அத்தி பழங்களில் பொட்டாசியம் என்ற மினரல் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. உங்களது அன்றாட டயட்டில் ஊறவைத்த அத்தி பழங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து, இதய செயல்பாடு அதிகரிக்கிறது.
நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது : உலர்ந்த அத்தி பழங்களில் இருக்கும் இயற்கை இனிப்பு சுவையையும் தாண்டி, இது குறைந்த கிளைசிமிக் எண் கொண்டிருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான உணவாக அமைகிறது. ஊறவைத்த அத்தி பழங்களில் உள்ள நீரில் கரையும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது : குறைந்த கலோரிகள் அதே நேரத்தில் அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது : கால்சியத்தின் சிறந்த மூலமான இந்த ஊறவைத்த அத்திப்பழங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கிறது. அத்தி பழங்களை தினமும் சாப்பிட்டு வர எலும்பு இழப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு உலர்ந்த அத்திப்பழம் அற்புதமான தீர்வாக இருக்கிறது.
🔻 🔻 🔻
இன்றைய நாட்களில் பெரும்பாலான நபர்கள் தங்களுடைய ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இயர் போன்களை பயன்படுத்துகின்றனர். இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது பிறருடன் போன் பேசுவது என்று பல்வேறு காரணங்களுக்காக நாம் இயர் ஃபோன்களை பயன்படுத்துகிறோம். எக்கச்சக்கமான அம்சங்களுடன் ஏராளமான இயர் போன் வகைகள் சந்தைகளில் கிடைக்கிறது. ஆனால் இயர் போன்களை அதிகப்படியாக பயன்படுத்துவதால் நமக்கு பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இது ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கும் அளவிற்கு தீங்கு ஏற்படுத்தலாம். இயர் போன்களை பயன்படுத்துவதால் ஒருவரின் செவித்திறனில் ஏற்படக்கூடிய தாக்கம் என்னென்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.?
காது கேட்பதில் சிக்கல் : நீண்ட நேரத்திற்கு மற்றும் தொடர்ச்சியாக நீங்கள் அதிக வால்யூமில் இயர் போன்களை பயன்படுத்தினால் அது உங்களுடைய உட்புற காதிலுள்ள மென்மையான செல்களை சேதப்படுத்தும். இந்த மென்மையான செல்கள் ஒலி அலைகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உரத்த ஒலி ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கலாம். செவி குழாயில் சரியாக ஃபிட்டாகும் இயர் போன்கள் மிகவும் ஆபத்தானவை. இவை நேரடியாக ஒளியை இயர் ட்ரமிற்கு எடுத்துச் செல்கிறது. இதனால் காது கேளாமை ஏற்படலாம்.
நாய்ஸ் கேன்சலிங் சாதனங்களால் ஏற்படும் தீங்குகள் : உங்களுடைய ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்கு சுற்றுப்புற சத்தத்தை குறைக்க உதவும் திறன் கொண்ட இந்த நாய்ஸ் கேன்சலிங் இயர் போன்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது ஒரு நபரின் செவித்திறன் பாதிப்படைகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள வழக்கமான சத்தங்கள் கேட்காமல் போவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.சுகாதார சிக்கல்கள் வழக்கமான முறையில் நீங்கள் இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது உங்கள் காதுகளில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா தக்கவைக்கப்படுகிறது. இதனால் காது தொற்றுகள் உண்டாகி அதன் விளைவாக தற்காலிக காது கேளாமை ஏற்படலாம். மேலும் தீவிரமான நிலைகளில் மோசமான தொற்று மற்றும் வலி உண்டாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இயர் போன்களை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காது மெழுகு படிதல் : காது மெழுகு என்பது பொதுவாக காது குழாயை சுத்தப்படுத்தி அதனை பாதுகாக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக நீங்கள் இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது காது மெழுகு குழாயினுள் தள்ளப்பட்டு ஒலியை தடை செய்கிறது.காதிரைச்சல் (Tinnitus) : ஒரு சில சூழ்நிலைகளில் இயர் போன்களை அதிக வால்யூமில் பயன்படுத்துவதால் காதிரைச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உண்டாகலாம். இது காதில் ஒரு விதமான விசில் அல்லது ரிங்கிங் சத்தத்தை ஏற்படுத்துகிறது. இது நிரந்தர காது கேளாமை பிரச்சனையை உண்டாக்கலாம்.
எனவே இனி இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும். நீண்ட நேரத்திற்கு அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம். மேலும் அதிக வால்யூமில் ஒருபோதும் இயர் போன்களை பயன்படுத்தாதீர்கள்.
🔻 🔻 🔻
ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதானமான உணவாக அரிசி இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி உணவை சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்ற அளவிற்கு அரிசி நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஆனால் உண்மையிலேயே அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.
மேலும் ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் அதில் நிறைந்துள்ளன. அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.
ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று கூறி விட முடியாது.
உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி வல்லுநர்கள் கூறுகிறார்கள். “ஒரு மாதம் வரை அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு. மேலும் கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்” என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு அரிசி உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது கண்டிப்பாக அது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும். ஆனால் அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் வேறு ஏதேனும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். “அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவும்” என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் “நீங்கள் அரிசி உணவை கைவிட்ட அந்த மாதத்தில் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவானது குறைந்திருக்கும் எனவும் அல்லது மீண்டும் அரிசி உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்க துவங்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிறிய அளவிலான அரிசி உணவை உட்கொள்வது எந்த விதத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார். எனினும் இது நபருக்கு நபர் வேறுபடலாம். ஆனால் உண்மையிலேயே அரிசி உணவை மொத்தமாக உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். அரிசி உணவை விரும்புபவர்கள் தங்களது உணவு கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக அரிசி உணவை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவை அளவோடு இருப்பது நல்லது.
மேலும் நம் உணவு பட்டியலில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாக அரிசி உணவை உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல. அரிசி உணவுடன் புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி உணவை மிகவும் சத்து மிகுந்த உணவாக நம்மால் மாற்ற முடியும். அரிசியில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் தான் உடலின் சக்திக்கு அடிப்படையானவை. எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நம்மை பலவீனம் அடையச் செய்யும்.அது மட்டுமல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழப்பதற்கும் உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தசைகளை குறைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔻 🔻 🔻
இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2022-ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் தான் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்த நிலையில், நம் அன்றாட வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தக்கூடிய கெமிக்கல்களும் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே எந்தப் பொருட்களை வாங்குவதற்கு முன்பும் அதில் எந்த வகையான கெமிக்கல்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நிலக்கரி தார் (கரி எண்ணெய்) : நிலக்கரியை பதப்படுத்தும் போது கிடைக்கும் உப பொருளே நிலக்கரி தார். இது கார்சினோஜென் என அழைக்கப்படுகிறது. அழகுக்கலை மற்றும் சரும பராமரிப்பு பொருட்களான ஹேர் டை, ஷாம்பூ ஆகியவற்றில் இவை பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல் அடிக்கடி பயன்படுத்துவதால் நுரையீரல், சிறுநீரக மறும் சிறுநீர்ப்பை, செரிமான பாதை தொடர்பான புற்றுநோய் வரும் ஆபத்துள்ளது. EPA, IARC மற்றும் EPA போன்ற அமைப்புகள் இந்த ரசாயனம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆகவே சரும பராமரிப்பு பொருட்கள் வாங்குவதற்கு முன் எவ்வளவு கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பாரபின் : அழகுகலை பொருட்கள் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாரபின் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இவை சோப், ஷாம்பூ, ஷேவிங் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பாரபின் கெமிக்கல் ஹார்மோனை பாதித்து கருவுறுதலை சிக்கலாக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதனால் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தும் அதிகமுள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் பொருட்களின் லேபிளில் ‘பாரபின் சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களாக பார்த்து வாங்குங்கள்.
ஃபார்மால்டீஹைடு : நிறமற்ற வாயுவான ஃபார்மால்டீஹைடு கட்டுமான பொருட்கள், ஆட்டோமொபைல் பாகங்கள், ஆடைகள், பூச்சிகொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தபடுகிறது. இந்த ஃபார்மால்டீஹைடு மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என IARC அமைப்பு கூறியுள்ளது. எந்தவொரு மரச்சாமான் வாங்கினாலும் அதில் ஃபார்மால்டீஹைடு இருக்கிறதா என சோதித்துப் பாருங்கள்.
பித்தலேட்டுகள் : நீண்ட நாள் உழைக்கும் வகையில் செயற்கை நறுமணப் பொருட்களில் இந்த பித்தலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வாசனை திரவியம், ஹேர் ஸ்ப்ரே, நக பாலிஷ், ஏர் ஃபிரஷ்னர் ஆகியவற்றில் பித்தலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது அலர்ஜியை ஏற்படுத்துவதோடு ஹார்மோனை பாதித்து மார்பக புற்றுநோயை வரவழைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற்ன.அக்ரிலைமைடு : உணவுகளை அதிக வெப்பநிலையில் வறுக்கும் போதோ அல்லது பேக்கிங் செயும் போதோ இந்த கெமிக்கல் உருவாகின்றன. இது விலங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் மனிதர்களையும் இது பாதிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புகைப்பழக்கத்திற்கு அடுத்து உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற உணவகளை தவிர்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எந்தவொரு பொருளையும் நன்கு ஆராய்ந்து தகவலறிந்து வாங்குங்கள்.
🔻 🔻 🔻
காலை உணவை அனைத்து வயதினரும் தவறாமல் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க இது அவசியம். மேலும் அதில் காலை உணவில் பால், நட்ஸ், பழங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். பாதம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? இதுகுறித்து விளக்கும் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிக்ஸா பாவ்ஸர், காலை உணவில் ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும் என கூறுகிறார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராமில் பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில் “ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை உங்கள் நாளை தொடங்க சிறந்த வழி” என்ற தலைப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்துள்ளார்.
பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.பாதாம், திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவது அவற்றின் ஊட்டச்சத்துக்களை மிகச் சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு நம் உடலுக்கு உதவுகிறது.
ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை காலையில் சாப்பிடுவதால் மாதவிடாய் கால பிரச்சனைகள், வலி நீங்குகிறது.
தினமும் காலையில் இதனை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.ஊறவைத்த திராட்சை, பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால் நினைவாற்றலுக்கும் நல்லது.
பாதாம் மற்றும் திராட்சையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது. முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுங்கள்.
மேலும் இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இது இதயத்துக்கு நல்லது. அமிலத்தன்மையை தடுக்கவும் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம்.
இவை தவிர, ஊறவைத்த பாதாம் ஆன்டி ஆக்ஸிடண்ட்டின் ஓர் நல்ல மூலம் ஆகும். மேலும், ஊறவைத்த பாதாமில் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.
பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதனை அனைத்து வயதினரும் தினமும் சாப்பிட வேண்டும் என டாக்டர் டிக்ஸா பாவ்ஸர் விளக்கியுள்ளார்.
🔻 🔻 🔻
உலகில் பல்வேறு வகையான பழங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தோற்றத்திலும், நிறத்திலும் வேறுபட்டவை. ஆனால் உடலுக்கு நன்மை பயக்க கூடியவை. அன்றாட உணவில் பழங்களை உட்கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
இவ்வாறு என்னற்ற பழ வகைகள் இருந்தாலும், மாம்பழம் பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. காரணம் மாம்பழத்தின் சுவை. தமிழ் இலக்கியங்களிலும் கூட முக்கனிகளில் முதல் கனியாக மாம்பழம் உள்ளது.
ராஜா இருந்தால் ராணியும் இருந்தாக வேண்டும் அல்லவா. அப்போது பழங்களின் ராஜா மாம்பழம் என்றால் பழங்களின் ராணி எது. பழங்களின் ராணி, மங்குஸ்தான். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழம். இந்த பழம் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
பழங்களின் ராஜாவான மாம்பழம் பிரகாசமாக இருக்க, பழங்களின் ராணியோ சற்று மங்களான தோற்றத்தையே கொண்டுள்ளது. ஆனால் இந்த பழத்தில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. ஹெல்த்லைன் அறிக்கையின்படி, மங்குஸ்தான் பழம் சுவையானது மட்டுமன்றி ஆரோக்கியமானதும் ஆகும்.குறைந்த கலோரிகளை கொண்டுள்ள இந்த மங்குஸ்தான் பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாம்பழத்தில் புரதம், வைட்டமின் சி, பி1, பி2, பி9, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் 3.5 கிராம் நார்ச்சத்து மற்றும் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் டிஎன்ஏ உருவாக்கம், தசை சுருக்கம், காயம் குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவுகிறது. இதேபோல மங்குஸ்தானில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சில ஆய்வுகள் இந்த பழம் உடல் எடையை குறைக்க உதவுவதாகவும் கூறுகின்றன. மங்குஸ்தான் பழங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔻 🔻 🔻
12 ஆம் வகுப்பு மாணவர்களால் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, படிப்பை முடித்த பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், அறிவியல் படிப்புகள் எனபல பாடப்பிரிவுகள் உள்ளது. அதுபோன்று விவசாயத்துறை சார்ந்த படிப்புகளும் பல வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்தி வருவதாக கல்வியாளர் காங்கேயன் கூறுகிறார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், 12 ஆம் வகுப்புக்குப் பிறகு விவசாயம் படிக்க சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, மாணவர்களுக்கு பலவிதமான பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பம் போன்ற முழு அளவிலான பட்டப்படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ்கள் போன்ற பல குறுகிய கால விவசாயப் படிப்புகள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு உள்ளன. அது மட்டுமல்லாமல் தோட்டக்கலை துறை பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண்மை மற்றும் மீன்வளம் போன்ற பல சிறப்புப் படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கீழ் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் வேளாண்மைப் படிப்புகளை வழங்கி வருகின்றன. 28 தனியார் கல்லூரிகளிலும் பி.எஸ்ஸி அக்ரி மற்றும் பி.எஸ்ஸி தோட்டக்கலை படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளில் பி.டெக் இன்ஜினீயரிங், ஃபுட் புராசசிங், பாரஸ்ட் என 14 படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களில் தேர்வு செய்து வருகிறது.
அதனடிப்படையில், மத்திய அரசின் கல்லூரிகளில் சேர விரும்பினால், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ICAR நடத்தும் பொது நுழைவுத்தேர்வு AIEEA எழுதவேண்டும். இதற்கான அறிவிப்பு www.icar.org.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதுவே மாநில அரசாங்கம் மூலம் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வேளாண்மைப் பல்கலை கழகம் நடத்தும் மாநில பொது கலந்தாய்வு முறை வாயிலாக தேர்வு. இணையதள முகவரி www.tnau.ac.in இல் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை போன்ற சூழல்கள் ஏற்படும் நிலை உள்ளதால் மாணவர்கள் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல வேலை வாய்ப்புகள் நல்ல சம்பளம் கிடைக்கும் என கல்வியாளர் காங்கேயன் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மூலமாக டி.சி.எஸ் அயன் (TCS ION) மற்றும் அப்போலோ (Apollo MedSkills) நிறுவனம் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 6 வார காலம் இணைய வழி மருத்துவமனைநிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. 2023, 2022 மற்றும் 2021ல் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத நர்சிங் பட்டதாரிகளும் இதற்கு தகுதியானவர்கள்.
இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.29,500 ஆகும். இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில்
இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமணைகளிலும் அதனுடன்
தொடர்புடைய முன்னனி மருத்துவமணைகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
மாணாக்கர்களின் திறமைக்கேற்றவாறு வெளிநாடுகளில் உள்ள மருத்துவமணைகளிலும் சென்று பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.இந்த பயிற்சி குறித்து www.tahdco.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group