Search

College Guidance: வேளாண் துறையில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 12 ஆம் வகுப்பு மாணவர்களால் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, படிப்பை முடித்த பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், அறிவியல் படிப்புகள் எனபல பாடப்பிரிவுகள் உள்ளது. அதுபோன்று விவசாயத்துறை சார்ந்த படிப்புகளும் பல வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்தி வருவதாக கல்வியாளர் காங்கேயன் கூறுகிறார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில்,   12 ஆம் வகுப்புக்குப் பிறகு விவசாயம் படிக்க சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​மாணவர்களுக்கு பலவிதமான பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பம் போன்ற முழு அளவிலான பட்டப்படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ்கள் போன்ற பல குறுகிய கால விவசாயப் படிப்புகள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு உள்ளன. அது மட்டுமல்லாமல் தோட்டக்கலை துறை பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண்மை மற்றும் மீன்வளம் போன்ற பல சிறப்புப் படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கீழ் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் வேளாண்மைப் படிப்புகளை வழங்கி வருகின்றன. 28 தனியார் கல்லூரிகளிலும் பி.எஸ்ஸி அக்ரி மற்றும் பி.எஸ்ஸி தோட்டக்கலை படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளில் பி.டெக் இன்ஜினீயரிங், ஃபுட் புராசசிங், பாரஸ்ட் என 14 படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களில் தேர்வு செய்து வருகிறது.

அதனடிப்படையில், மத்திய அரசின் கல்லூரிகளில் சேர விரும்பினால், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ICAR நடத்தும் பொது நுழைவுத்தேர்வு AIEEA எழுதவேண்டும். இதற்கான அறிவிப்பு www.icar.org.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதுவே மாநில அரசாங்கம் மூலம் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வேளாண்மைப் பல்கலை கழகம் நடத்தும் மாநில பொது கலந்தாய்வு முறை வாயிலாக தேர்வு. இணையதள முகவரி www.tnau.ac.in இல் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

எனவே எதிர்வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை போன்ற சூழல்கள் ஏற்படும் நிலை உள்ளதால் மாணவர்கள் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல வேலை வாய்ப்புகள் நல்ல சம்பளம் கிடைக்கும் என கல்வியாளர் காங்கேயன் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment