Search

புற்றுநோய் வராமல் இருக்க எந்தவொரு பொருள் வாங்குவதற்கு முன்பும் இந்த 5 கெமிக்கல் இருக்கிறதா என செக் செய்யுங்கள்!

 இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2022-ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் தான் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்த நிலையில், நம் அன்றாட வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தக்கூடிய கெமிக்கல்களும் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே எந்தப் பொருட்களை வாங்குவதற்கு முன்பும் அதில் எந்த வகையான கெமிக்கல்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நிலக்கரி தார் (கரி எண்ணெய்) : நிலக்கரியை பதப்படுத்தும் போது கிடைக்கும் உப பொருளே நிலக்கரி தார். இது கார்சினோஜென் என அழைக்கப்படுகிறது. அழகுக்கலை மற்றும் சரும பராமரிப்பு பொருட்களான ஹேர் டை, ஷாம்பூ ஆகியவற்றில் இவை பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல் அடிக்கடி பயன்படுத்துவதால் நுரையீரல், சிறுநீரக மறும் சிறுநீர்ப்பை, செரிமான பாதை தொடர்பான புற்றுநோய் வரும் ஆபத்துள்ளது. EPA, IARC மற்றும் EPA போன்ற அமைப்புகள் இந்த ரசாயனம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆகவே சரும பராமரிப்பு பொருட்கள் வாங்குவதற்கு முன் எவ்வளவு கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பாரபின் : அழகுகலை பொருட்கள் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாரபின் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இவை சோப், ஷாம்பூ, ஷேவிங் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பாரபின் கெமிக்கல் ஹார்மோனை பாதித்து கருவுறுதலை சிக்கலாக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதனால் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தும் அதிகமுள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் பொருட்களின் லேபிளில் ‘பாரபின் சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களாக பார்த்து வாங்குங்கள்.

ஃபார்மால்டீஹைடு : நிறமற்ற வாயுவான ஃபார்மால்டீஹைடு கட்டுமான பொருட்கள், ஆட்டோமொபைல் பாகங்கள், ஆடைகள், பூச்சிகொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தபடுகிறது. இந்த ஃபார்மால்டீஹைடு மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என IARC அமைப்பு கூறியுள்ளது. எந்தவொரு மரச்சாமான் வாங்கினாலும் அதில் ஃபார்மால்டீஹைடு இருக்கிறதா என சோதித்துப் பாருங்கள்.

பித்தலேட்டுகள் : நீண்ட நாள் உழைக்கும் வகையில் செயற்கை நறுமணப் பொருட்களில் இந்த பித்தலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வாசனை திரவியம், ஹேர் ஸ்ப்ரே, நக பாலிஷ், ஏர் ஃபிரஷ்னர் ஆகியவற்றில் பித்தலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது அலர்ஜியை ஏற்படுத்துவதோடு ஹார்மோனை பாதித்து மார்பக புற்றுநோயை வரவழைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற்ன.அக்ரிலைமைடு : உணவுகளை அதிக வெப்பநிலையில் வறுக்கும் போதோ அல்லது பேக்கிங் செயும் போதோ இந்த கெமிக்கல் உருவாகின்றன. இது விலங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் மனிதர்களையும் இது பாதிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புகைப்பழக்கத்திற்கு அடுத்து உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற உணவகளை தவிர்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எந்தவொரு பொருளையும் நன்கு ஆராய்ந்து தகவலறிந்து வாங்குங்கள்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment