TRB போல் புதிய தேர்வு வாரியம் " HERB "

    maxresdefault

 HERB - Tamil Nadu Higher Education Recruitment Board 2026

காலி பணியிடங்களை நிரப்ப, ‘ஹெர்ப்’ என்ற புதிய தேர்வு வாரியம் அமைப்பது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள குரூப் – 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் – 4 பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகள் வழியே நிரப்பப்படுகின்றன. 


ஆசிரியர், பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படுகின்றன. இந்த சூழலில், உயர்கல்வித்துறை சார்ந்த, உதவி பேராசிரியர், விரிவுரையாளர் மற்றும் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வுகளை, உயர்கல்வித்துறையே நடத்திட ஆலோசனை நடக்கிறது. 


இதற்காக, ‘ஹெர்ப்’ எனும் உயர்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுதோறும், ‘டெட்’ முதுநிலை ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை நடத்தி வருவதால், அதன் பணி சுமையை குறைக்கும் வகையிலும், நிர்வாக காரணத்திற்காகவும், புதிய வாரியம் அமைக்க, ஆலோசித்து வருவதாக, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment