இந்திய முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு என்சிசி மற்றும் சிடிஎஸ் தேர்வுகள் முக்கிய வாய்ப்புகளாக உள்ளன. குறிப்பாக கல்லூரி படிப்பின்போது தேசிய மாணவர் படையில் இணைந்து சி சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு என்சிசி சிறப்பு நுழைவு மூலம் அதிகாரியாகும் வாய்ப்பு கிடைக்கிறது.
என்சிசி சி சான்றிதழ் பெற்ற தகுதியான மாணவர்கள் இந்த சிறப்பு நுழைவு முறையில் எழுத்து தேர்வு எழுத வேண்டியதில்லை. அவர்கள் நேரடியாக எஸ்எஸ்பி நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அடுத்தகட்ட தேர்வுகளுக்கு பிறகு அதிகாரிகள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் எழுத்து தேர்வு இல்லாமல் பாதுகாப்பு படைகளில் அதிகாரியாக சேர விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
கல்லூரியில் என்சிசி பயிலாத மாணவர்களும் முப்படைகளில் அதிகாரியாக சேர வாய்ப்புள்ளது. கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள் இறுதியாண்டிலோ அல்லது பட்டப்படிப்பை முடித்த பிறகோ ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தேர்வான சிடிஎஸ் தேர்வை எழுதலாம். இந்த தேர்வு மூலம் தங்களது கல்வி தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப முப்படைகளில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு தேர்வு பெற முயற்சிக்கலாம்.சிடிஎஸ் தேர்வில் முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். அதில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை பெறுபவர்கள் அடுத்தகட்டமாக எஸ்எஸ்பி நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.அதில் தேர்ச்சி, மருத்துவ தகுதி மற்றும் இறுதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் அதிகாரிகள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எனவே முப்படைகளில் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்ட மாணவர்கள் கல்லூரி பருவத்திலேயே என்சிசி சி சான்றிதழ் பெறுவதற்கோ அல்லது சிடிஎஸ் தேர்வுக்கு தயாராவதற்கோ திட்டமிடுவது அவர்களின் இலக்கை அடைய உதவும்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment