தமிழகம் 100% எழுத்தறிவு இலக்கை எட்டியதாக மத்திய அரசு அறிவிப்பு

    1481005

மத்திய அரசு நாடு முழுவதும் 100 விழுக்காடு அடிப்படையில் எண் அறிவு எழுத்தறிவு பெறுவதை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் மாநில அளவில் பள்ளி வயது வந்தோர் மற்றும் பள்ளி சாரா கல்வி இயக்குநரகம் என்பது செயல்பட்டு வருகிறது. அதாவது, தமிழகம் முழுவதும் அடிப்படை கல்வி அறிவு எழுத்தறிவு இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடிப்படையில் எழுத்தறிவு கொடுப்பது தான் இந்த இயக்குநரகத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு அளித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 4.31 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. எதிர்பாராத விதமாக 4.45 லட்சம் பேர் அந்த தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

23,640 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் 98 விழுக்காடு எழுத்தறிவு இலக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், தற்போது 100 விழுக்காடு என்ற நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு 100 விழுக்காடு எழுத்தறிவை பெற்றிருப்பதாகவும் அந்த நிலையை நோக்கி நேற்று தேர்வு நடைபெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அவர்கள் அடிப்படையில் எண்ணறிவு எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் விரைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற தகவலையும் துறையின் இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment