CPCL Recruitment 2026: சம்பளம் ரூ.1.05 லட்சம்... டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க

  சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான Chennai Petroleum Corporation Limited (CPCL) சார்பில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (JEA)-IV பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

JEA-IV பணியில் மெக்கானிக்கல் பிரிவில் 10 இடங்கள், உற்பத்தி பிரிவில் 40 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 5 இடங்கள், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 5 இடங்கள் என மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது B.Sc. Chemistry பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2026 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

தேர்வு முறையில் கணினி வழித் தேர்வு (CBT), Skill/Proficiency மற்றும் Physical Test (SPPT) இடம்பெறும்.இப்பணிக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பங்கள் 14.8.2026 முதல் 11.9.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் CPCL-ன் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment