மனிதர்களின் தனிப்பட்ட திறன்களான தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்குச் சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் திறன்கள் இல்லாமலேயே, மனிதர்களின் இயல்பான திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் 10 சிறந்த வேலை வாய்ப்புகள் குறித்து லிங்க்ட்இன் (LinkedIn) அமைப்பின் '2026 ஜாப்ஸ் ஆன் தி ரைஸ்' (2026 Jobs on the Rise) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மூலோபாய ஆலோசகர் (Strategic Advisor & Independent Consultant): AI தொழில்நுட்பம் தரவுகளைத் தொகுத்துத் தந்தாலும், ஒரு நிறுவனத்தின் அனுபவம் சார்ந்த முடிவுகள், நுட்பமான தீர்வுகளை வழங்குவதற்கு மனிதர்களின் அனுபவப்பூர்வமான வழிகாட்டுதல் அவசியமாகிறது.
வீட்டு விற்பனை நிபுணர் (New Home Sales Specialist): வீடு வாங்குவது மனிதர்களின் உணர்வுபூர்வமான மற்றும் நிதி சார்ந்த முடிவாகும். வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, வீடுகளை நேரில் காண்பித்து, பேசி ஒப்பந்தம் முடிப்பதற்கு மனிதர்களின் நேரிடைத் தொடர்பு தேவைப்படுகிறது.
சுகாதார காப்பீட்டுத் தொகைப் பரிசீலனை நிபுணர் (Healthcare Reimbursement Specialist): மருத்துவக் காப்பீடு, பில்லிங் மற்றும் விதிகளைப் புரிந்து கொண்டு நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் மனிதர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
கட்டுமானத் திட்டத் தலைவர் (Construction Project Lead): கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தொழிலாளர்களை வழிநடத்துதல், நேர மேலாண்மை மற்றும் களத்தில் வரும் தடங்கல்களை உடனுக்குடன் சரி செய்ய நேரடித் தலைமைப்பண்பு அவசியம்.சுற்றுலா ஆலோசகர் (Travel Advisor and Tour Planner): வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்பப் பயணத் திட்டங்களை வகுத்துத் தருவது மற்றும் எதிர்பாராத சிக்கல்களைக் கையாள்வதில் இவர்களின் பங்கு அதிகம்.
மனநல செவிலியர் (Psychiatric Nurse Practitioner): மனநலப் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் மருந்து மேலாண்மை போன்ற பணிகளுக்குப் பரிவு, இரக்கம் மற்றும் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு மிக முக்கியம்.
பின்னணி விசாரணை அதிகாரி (Background Investigator): நபர்களின் விவரங்கள், ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் தகுதிகளைத் தீர விசாரித்து உறுதிப்படுத்துவதற்குத் துல்லியமான கவனிப்பும் மனிதர்களின் கூர்மையான பார்வையும் மிக முக்கியம்.
பொது விவகாரங்கள் நிபுணர் (Public Affairs Specialist): அரசு, ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான தொடர்பைப் பேணுவதற்கும், கொள்கை ரீதியிலான முடிவுகளைக் கையாள்வதற்கும் அரசியல் விழிப்புணர்வும் தொடர்பியல் திறனும் தேவை.
வணிக வளர்ச்சி அதிகாரி (Business Development Executive - BDE): புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறிதல், கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகளைப் பேணுதல் போன்ற பணிகள் மனிதர்களின் தனிப்பட்ட பேச்சுவார்த்தைத் திறனை நம்பியே உள்ளன.
விளம்பர விற்பனை நிபுணர் (Media Buyer and Advertising Sales Specialist): சந்தைப் போக்குகளைப் புரிந்து கொண்டு, சரியான தளங்களில் பிராண்டுகளை விளம்பரப்படுத்த வாடிக்கையாளர்களுடன் பேசி உறவை வளர்ப்பதில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
Home »
Employment News
» மனித ஆற்றலுக்குத் தான் முதலிடம்… AI காலத்தில் கொடிகட்டிப் பறக்கும் 10 கெரியர் ஆப்ஷன்கள்!
0 Comments:
Post a Comment