தமிழகத்தில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு`
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி ஓய்வு வயது 60 ஆக உள்ளது. 60 வயதை நிறைவு செய்பவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். வழக்கமாக ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங் களில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்ப டுகிறது.
அந்த வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி 8,144 பேர் ஓய்வு பெற்றனர். இந்த மே மாதம் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பங்களிப்பு ஓய் வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள்.
தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. ஓய்வூதியர்களை பொறுத்த வரை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் 1.98 லட்சம் பேரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 6.24 லட்சம் பேரும் இருக்கிறனர்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment