மாதம் 18,000 சம்பளம்!! 112 செவிலியர் காலிப்பணியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..|Govt Job Alert:

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டைக்கு ஒப்பளிக்கப்பட்ட செவிலியர் (Staff Nurse) பணியிடத்தினை மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலம் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பணியின் விவரங்கள்: பதவியின் பெயர்: Staff Nurse ( செவிலியர்கள்) காலிப்பணியிடங்கள்: 112. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 22.07.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.கல்வித்தகுதி:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் DGNM அல்லது நர்சிங் இளங்கலை பட்டப்படிப்பு (B.Sc. Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான நிபந்தைகள்இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இப்பணியிடங்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான ஒப்பதல் கடிதம் அளிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பதார்களில் இருந்து நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை : செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவை தவிர விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் அல்லது மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம். (District Health Society), 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம் காஞ்சிபுரம் மாவட்டம்-631 501, தொலைபேசி எண் 044-27222019.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment