சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூடமாட்டோம்' - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

  1465163

தமிழகத்​தில் மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

வேலூர் விஐடி பல்​கலைக்​கழகம் சார்​பில் வேலூர், ராணிப்​பேட்டை, திருப்​பத்​தூர் மற்​றும் திரு​வண்​ணா​மலை ஆகிய 4 மாவட்​டங்​களில் 2023-24, 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுகளில் பொதுத் தேர்​வு​களில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்​ளி​களின் தலைமை ஆசி​ரியர்​களுக்​குப் பாராட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

விஐடி அண்ணா அரங்​கில் நடை​பெற்ற விழாவுக்கு தலைமை தாங்​கிய வேந்​தர் கோ.விசுவநாதன் பேசும்​போது, “தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களின் எண்​ணிக்கை அதி​கம் இருந்​தா​லும் அதன் தரத்தை உயர்த்​து​வதற்கு வேண்​டிய நட​வடிக்​கையை அரசு எடுக்க வேண்​டும். கடந்த 10 ஆண்​டுகளில் இந்​தியா முழு​வதும் 94,000 அரசுப் பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன.

அதேநேரம், 51,000 தனியார் பள்​ளி​கள் புதிதாக திறக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 246 பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன. காரணம் மாணவர்​கள் இல்​லாதது​தான். 1,204 பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை இல்லை. அரசுப் பள்​ளி​களும் தனியார் பள்​ளி​களுக்கு சமமாக செயல்​பட என்ன செய்ய வேண்​டும் என்​பதை அமைச்​சர் ஆராய்ந்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “தவெக அரசு பொறுப்​பேற்ற 6 மாதங்​களில் ஒரு அரசுப் பள்​ளியைக்​கூட மூட​வில்லை. மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

யாரோ ஒரு ஏழை வீட்​டுக் குழந்​தையும் படிக்க வேண்​டும் என்​ப​தற்​காக ஒற்றை ஆசி​ரியருடன் ஒரு பள்​ளிக்​கூடம் காத்​திருக்​கிறது. ஒரு மாணவனுக்​காக அந்த அரசுப் பள்​ளி​களை நாங்​கள் மூட மாட்​டோம்; மூட​வும் விட மாட்​டோம்.

நடப்​பாண்​டில் பள்​ளிக்​கல்​விக்​காக ரூ.44,557 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. பள்ளி நிறைவு திட்​டத்​தின் கீழ் 3,734 அரசுப் பள்​ளி​களை மேம்​படுத்த ரூ.2,132 கோடி மதிப்​பில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 10,000 அரசுப் பள்​ளி​களில் தூய்மை குடிநீர், கழிப்​பறை பராமரிப்பு மற்​றும் பாது​காப்பை உறுதிப்​படுத்த சூப்​பர் கிளீன்,சூப்​பர் கேம்​பஸ் திட்​டத்​துக்​காக ரூ.139 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

விழா​வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 341 அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களைச் சேர்ந்த தலைமை ஆசி​ரியர்​களுக்கு ரூ.52 லட்​சம் மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன. இதில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்​தரம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனம் தேர்வு.

ஹீரோ நிறுவனம் தேர்வு

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுமாணவர்களுக்கு 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கு 5,130 ரூபாய்க்கும் சைக்கிள் வழங்கும் ஹீரோ நிறுவனம்

1465985

1465986

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு (Children with Disabilities - CwD) CSR கல்வி உதவித்தொகை தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

1457333

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு (Children with Disabilities - CwD) CSR கல்வி உதவித்தொகை தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DEE - CSR Scholarship Proceedings - Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NMMS தேர்வுக்கு 25.11.2026 வரை விண்ணப்பிக்கலாம்!

  1457400

2026-2027-ம் ஆண்டு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என 23.10.2026 அன்று அறிவிக்கப்பட்டது.

இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் 13.11.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது, ​​மாணவர்களின் நலன் கருதியும் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இக்கால அவகாசம் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

1461542

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

1. நடுநிலைப் பள்ளி 

        தலைமை ஆசிரியர்       -1042

2. பட்டதாரி ஆசிரியர்        - 1877

3. தொடக்கப்பள்ளி 

        தலைமையாசிரியர்.    - 1924

4. இடைநிலை ஆசிரியர் - 4475

*தொடக்கக் கல்வித்துறையில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் -9318*

_பட்டதாரி ஆசிரியர் பாட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்_

- BT ( Tamil)   -149

- BT ( English)-401

- BT (maths)   -442

- BT (science) -746

- BT (History)  -139

*இவை அனைத்தும்  தொடக்கக் கல்வித் துறை காலிப்பணியிடம் மட்டும்.*

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு!

1463663

தமிழக அரசின் அரசாணை விபரம்: சட்டசபையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, ‘அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் 30,000த்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25,000த்தில் இருந்து, 30,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 1 மு தல் இந்த ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் 8,741 மற்றும் அரசு பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரியும், 319 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பயன் பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

1399567

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் - முதல்வர் விஜய்

1399894

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

JEE & NEET வகுப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் - உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!

1407277

பார்வை 1 & 2 ல் உள்ள அரசாணை மற்றும் செயல்முறைகளின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில், 13.06.2026 முதல் வாரந்தோறும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெற்றிப் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சார்ந்த பாடவாரியான பயிற்சிகள், பயிற்சித் தாள்கள், மாதிரித் தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் தேர்வு உத்திகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை முறையாகப் பயிற்சி செய்து, அவற்றில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை மாணவர்கள் சார்ந்த பள்ளி அளவிலேயே உறுதி செய்திடல் அவசியமாகிறது. எனவே, வெற்றிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை தினமும் மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்கள் பயிற்சித் தாள் வினாக்கள் மற்றும் அதனைச் சார்ந்து எழும் ஐயங்களைத் தீர்க்கவும், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்யவும், மணற்கேணி செயலி போன்ற இணையவழி கற்றல் வளங்களைப் பயன்படுத்தவும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை தலைமையாசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தங்களது தயாரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை அனைத்துத் தலைமையாசிரியர்களும் தவறாது செயல்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்

 hindutamil-prod%2F2026-11-02%2Fvu78d5h3%2F4

தமிழகத்​தில் பணி​யில் உள்ள ஆசி​ரியர்​களுக்​கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடை​பெறவுள்ளது. இதை​யொட்டி தேர்​வெழுதவுள்ள ஆசி​ரியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​குவதற்கான வழிகாட்டு நெறி​முறைகள் வெளியாகி​யுள்​ளன.

அதன் விவரம்: இந்த பயிற்சி திட்​டம் முழு​வதும் நேரடி வகுப்​பு​கள் முறை​யில் மட்​டுமே நடத்​தப்​படும். இந்த வகுப்​பு​கள் ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் ஆசி​ரியர் பயிற்சி நிறு​வனங்​கள் அல்​லது முதன்​மைக் கல்வி அலு​வல​கம் ஆகிய​வற்​றில் ஏதேனும் ஒரு இடத்தில் பயிற்சி நடத்​தப்​படும்.

இதில் பங்​கேற்க விரும்​பும் ஆசி​ரியர்​கள் முன்​கூட்​டியே பதிவுசெய்து கொள்ள வேண்​டும். ஒரு மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆசி​ரியர்​கள் பிற மாவட்​டங்​களில் குறிப்​பிட்ட பயிற்சி வகுப்​பு​களுக்​கான இட​வசதி இருப்​பின், அங்கு நடை​பெறும் பயிற்சி வகுப்​பு​களி​லும் பங்கேற்கலாம். வழக்​க​மான பள்​ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்​படாதவாறு பங்கேற்க வேண்​டும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

hindutamil-prod%2F2026-11-02%2Fg4419vc5%2F7

தமிழகத்​தில் 3,665 காவலர்​களை நியமிப்​ப​தற்​கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளி​யானது.

தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்​டாம் நிலை காவலர்​கள், இரண்​டாம் நிலை சிறைக் காவலர்​கள், தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,665 பணி​யிடங்​களுக்கு அறி​விப்பு வெளி​யிட்​டது.

இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த ஆண்டு நவ.9-ம் தேதி​யும், உடற்​தகுதி தேர்வு கடந்த ஜன.22 முதல் பிப்​.2-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது. இறுதி கட்​-ஆஃப் மதிப்​பெண்​கள் வெளி​யிடப்பட இருந்த நிலை​யில், நிர்​ண​யிக்​கப்​பட்ட உயரத்​தில் இருந்து 1 செ.மீ. குறை​வாக அனு​ம​திக்​கக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இதனால் இந்த தேர்வு நடவடிக்கை நிலு​வை​யில் இருந்​தது. இதே​போல, 1,299 எஸ்​.ஐ. பணி​யிடங்​களுக்கான அறி​விப்பு கடந்த ஆண்டு ஏப்​.4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டு, எழுத்து தேர்வு டிச.21-ம் தேதி நடை​பெற்​றது.

தமிழ்​வழி கல்வி இடஒதுக்​கீடு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தால் இந்த தேர்​வு முடிவும் வெளியாகவில்லை.ஒரு​புறம் காவல் துறை​யில் 15 ஆயிரம் காலி பணி​யிடங்​கள், மறு​புறம் தேர்வு நடை​முறை​கள் முடிந்​தும் பணி​யில் சேர முடி​யாமல் ஆயிரக்​கணக்​கான தேர்​வர்​கள் காத்​திருக்​கும் நிலை நீடித்​தது.

எனவே, நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்​து, தகு​தி​யான தேர்​வர்​களை உடனடி​யாக பணி​யில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது.

இது தொடர்​பாக கடந்த அக்​.5-ம் தேதி ‘‘தேர்​வு​கள் முடிந்​தும் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் காத்​திருக்​கும் நிலை, காவலர்​கள், எஸ்ஐ பணி நியமனத்​தில் சிக்​கல் நீடிப்​பு’ என்ற தலைப்​பில் சிறப்பு செய்தி வெளி​யானது.

இந்​நிலை​யில், முதல் கட்​ட​மாக காவலர்​களுக்​கான தேர்வு முடிவு நேற்று வெளி​யானது. இதே​போல, எஸ்​.ஐ. தேர்​வு முடிவையும்​ வெளியிட வேண்​டும்​ என்​ற கோரிக்​கை வலுத்​துள்​ளது.