நிரந்தரப் பணியிடம் ஆசிரியர்கள் தேவை!!!

குறிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இதுத பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை சட்டம் 2018 & விதிகள் 2023-ன்படி மேலே குறிப்பிட்ட பணியிடங்கள் நிர்ப்பப்படும்.

கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நக்ல்கள் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பத்துடன் ரூ.67/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சரியான சுய விளம்பப்ட்ட உறையுடன் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட 
விண்ணப்பங்கள் கீழ்காண் விலாசத்திற்கு வந்து சேர வேண்டிய
கடைசி நாள் : 30.07.2026 (6 PM வரை)

பள்ளி செயலர், 
சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்கர் நகர் - 627357, 
திருநெல்வேலி மாவட்டம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேர்வு சீர்திருத்தங்களுக்கு குழு அமைப்பு:

  தேர்வு சீர்திருத்தங்களுக்கு குழு அமைப்பு:

தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பணிக்குழு அமைத்தது மத்திய அரசு

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைப்பு.நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.

வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.

தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும்-பிரதமர் மோடி வீடியோ மூலம் அறிவிப்பு.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நாளை ( 28.7.2006 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

908162

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசுத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புத்தக வாசிப்பை மேம்படுத்த வேண்டும் - கல்வியாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

புத்தக வாசிப்பை மேம்படுத்த வேண்டும்  - கல்வியாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை 

பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப் படுத்தும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என கல்வியாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

      இது குறித்து வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி. முத்துக்குமரன்  விடுத்துள்ள  அறிக்கையில் ,

   1. சமீப காலமாக மாணவர்கள் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் செயல்படுவது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.
2. வகுப்பு வாரியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்தப் பட வேண்டும். பெற்றோர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
3. தொடக்கப் பள்ளிகளில்  ஒரு மாதத்திற்கு அடிப்படை கல்வி  மட்டுமே போதிக்கப் பட வேண்டும்.
4. மாணவர்களை நல்வழிப் படுத்தும் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட  வேண்டும்.
5. நீண்ட நாட்களாக தவிர்க்கப் பட்டு வரும் உடற்பயிற்சி வகுப்புகள் விளையாட்டு மைதானங்களில் நடைபெற வேண்டும்.
6. கையெழுத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கையெழுத்துப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
7. செல் போன், விலை உயர்ந்த பொருட்கள் பள்ளிக்கு கொண்டு வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
8. பள்ளி அருகில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து தண்டணை வழங்க வேண்டும்.
9. சீரான சிகை அலங்காரம், சீருடை முதலானவற்றை கட்டாயப்படுத்த வேண்டும்.
10. பெற்றோர்களிடம் உறுதிமொழிப் படிவம் பெற்று பள்ளிகளில் கோப்பில் வைக்க வேண்டும்.
11. மாணவர்கள் இருசக்கர மோட்டார் வாகனம் இயக்க தடை விதிக்க வேண்டும்.
12. மாணவர்களின் தினசரி இருவேளையும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
13. இலவச பாடநூல்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும்.
14. மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்க மாதந்தோறும்  சிறு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
15. ஆய்வு அலுவலர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
16  வாசிப்பை மேம்படுத்த தினசரி பிரார்த்தனை கூட்டத்தின் போது சுழற்சி முறையில் அனைத்து மாணவர்களும் அன்றாட செய்திகளை  குறிப்பெடுத்து வாசிக்க வேண்டும். 
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி. முத்துக்குமரன் 
ஒருங்கிணைப்பாளர் 
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம்

  hindutamil-prod%2F2026-02-01%2Frqwamlt3%2FSchool-Education20220211

பு​திய பாடத்​திட்​டத்​தின்​படி பேசுதல், கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் 70 சதவீத பங்​கேற்பை உறு​தி​செய்ய வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை​யில் மாநில கல்விக் கொள்​கை​யின்​படி புதிய பாடத்​திட்​டம் தற்​போது உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஏற்​கெனவே 1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு புதிய பாடத்​திட்​டங்​களின்​படி பாடநூல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தொடர்ந்து 4 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு 2027-28-ம் கல்​வி​யாண்​டிலும், 9 முதல் 12-ம் வகுப்​பு​களுக்கு 2028-29-ம் கல்​வி​யாண்​டிலும் புதிய பாடநூல்​கள் வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் புதிய பாடத்​திட்​டத்​தின்​படி வகுப்​பறை செயல்​பாடு​கள், ஆசிரியர்​கள் கையாளும் முறை, கல்வி அலு​வலர்​கள் ஆய்​வின்​போது கண்​காணிக்க வேண்​டிய அம்​சங்​கள் தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி பாடநூல்​களில் உள்ள செயல்​பாடு, பயிற்​சி,விளை​யாட்​டு, செயல்​திட்​டம் ஆகிய​வற்​றில் கற்​றல் விளைவு​களை அறிந்து ஆசிரியர்​கள் வகுப்​பறை செயல்​பாடு​களை செயல்​படுத்த வேண்​டும்.

கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் பங்​கேற்பு 70 சதவீதம் இருக்​கவேண்​டும். இதையெல்​லாம் கல்வி அலு​வலர்​கள் கண்​காணிக்க வேண்​டும்.

அதே​போல், புதிய பாடத்​திட்​டத்​தின்​படி திறன்​களை மைய​மாகக் கொண்ட மதிப்​பீட்டு முறை தற்​போது கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. மனப்​பாட முறையை பின்​பற்​றாமல் சிந்​தித்து விடை அளிக்​கும் வகை​யில் வினாக்​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளன.

கற்​றல் பயணம், நானே செய்​வேன், திறனறி மதிப்​பீடு ஆகிய 3 வகை​யான மதிப்​பீடு​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஆசிரியர்​கள் தங்​கள் அனுபவங்​களை கையேட்​டில் அவசி​யம் பகிர வேண்​டும் என்பன உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பள்ளி மாணவர்களின் மன நலன் காத்த உளவியல் ஆலோசனை திட்டம் மீண்டும் உயிர் பெறுமா?

  hindutamil-prod%2F2026-07-24%2Fvbpwidnz%2F40

கோவை டவுன்ஹால் அருகே அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் உளவியல் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் பராமரிப்பின்றி, தூசு படர்ந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனக் குழப்பம், பாலியல் பிரச்சினைகள், தேர்வு அச்சம், செல்போன் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையத்தை கடந்த 2013-2014 கல்வியாண்டு முதல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இத்திட்டம் முதற்கட்டமாக ரூ.3 கோடி செலவில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு வேன் ஒதுக்கப்பட்டு, அதில் பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர், உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு நடமாடும் ஆலோசனை மையமும் சுற்றியுள்ள 3 அல்லது 4 மாவட்டங்களை கவனிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் பணியாக அந்தந்த மண்டலத்திலுள்ள உளவியல் ஆலோசகர்கள் மாவட்டந்தோறும் பிரச்சினைக்குரிய பள்ளிகள், மதிப்பெண்ணில் பின்தங்கிய பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரித்து பட்டியலிட்டனர்.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உளவியல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறையில் தனியாகவோ அல்லது வேனிலோ அமர வைத்தோ ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக விரிவுபடுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது.

தொடர்ந்து 2 மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் என விரிவுபடுத்தப் பட்டது. இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்துக்கு பிறகு, நடமாடும் ஆலோசனை மையம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த திட்டத்துக்காக சேர்க்கப்பட்ட உளவியல் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வரவில்லை.

இதன் காரணமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகங்களில் நடமாடும் ஆலோசனை மைய வாகனங்கள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் கோவையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் இந்த வாகனம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

அதேபோல் கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலரின் வாகனம் பழுதான நிலையில் பல ஆண்டுகாலமாக இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் வெளியில் நிறுத்தி வைக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

நல்ல நிலையில் இருந்த வாகனங்கள் பல ஆண்டுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவை வீணாகிவிட்டன. இவற்றை அரசின் பிற திட்டங்களுக்கு மாற்றிவிட்டால் கூட நல்ல பலன் தரும்.

குழந்தைகளுக்கு என்றென்றைக்கும் அத்தியாவசியத் தேவையாக இருந்து வரும் உளவியல் ஆலோசனை திட்டத்துக்கு, தமிழக அரசு உயிர்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதேபோல் பல மாவட்டங்களில் காட்சிப்பொருளாக கரையான் அரித்துக்கொண்டிருக்கும் இந்த வாகனங்களை பராமரித்து திட்டத்தை மீண்டும் செய்லபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கல்வியாளர்கள் கூறும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைக்குகவுன்சிலிங் அமைப்பு என்பது இல்லை. 2013-14 கல்வியாண்டில் கொண்டு வரப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் பேருதவியாக இருந்தது.

இதனால் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்பட்டது. எனவே, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். மேலும் விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்றனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2027 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதிற்கு புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.!!

  2026-2027 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதிற்கு புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.!!

895763

895764

மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம். சமுதாயத்திற்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புறத் தயாரித்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருதுத் தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களைத் தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் தனது கருத்துருவை விளக்கமாக www.inspireawards-dst.gov.in இணையதளத்தில் பள்ளி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் மாணவர்கள், கண்காட்சிகளில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% புதுடெல்லி புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொள்வார்கள், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்று பார்வை(1) மற்றும் (2)ல் காணும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பார்வையில் காணும் கடித நகல்கள் இத்துடன் இச்செயல்களுக்கான இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்துச்

2026-2027ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 15.07.2026 முதல் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஏற்கனவே பார்வை(3)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்ததைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். அதாவது மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். நடுநிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்காக www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் 15.07.2026 முதல் 15.09.2026 வரை விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவாறு. 2026-2027ஆம் ஆண்டிற்கான Inspire Manak Award-க்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவிபெறும் / தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

895765

- 1) பார்வையில் காணும் கடிதங்களின் நகல்கள்

2) குறிப்புகள்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு.

  சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை உத்தரவு 2026 ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண் (grace mark) வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு கூடுதல் அவகாசம் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வேறு சில தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனு அனுமதிக்கப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணை வழக்கம் போல் 2026 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும். கருணை மதிப்பெண் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TAPS - Interim Payout வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் (Flow chart) - Treasury Letter

  01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.