Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
சென்னை மாவட்டத்தில் அரசு துறையில் பணி வாய்ப்பை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்-ல் உள்ள திட்ட ஒருங்கிணையாளர், மேற்பார்வையாளர், ஆற்றுப்படுத்துநர் மற்றும் வழக்குப் பணியாளர் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
திட்ட ஒருங்கிணைப்பாளர் 1
மேற்பார்வையாளர் 8
ஆற்றுப்படுத்துநர் 1
வழக்குப் பணியாளர் 10
மொத்தம் 20
வயது வரம்பு
சென்னை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
திட்ட ஒங்கிணைப்பாளர் பதவிக்கு சமூகப் பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனிதபொது உரிமைகள் நிர்வாகம், உளவியல், மனநல மருத்துவம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது மேலாண்மை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திட்ட உருவாக்கம், செயல்படுத்தல் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலம் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்பார்வையாளர் பதவிக்கு சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு சமூகப் பணி, சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு அல்லது தொடர்பியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வழக்குப் பணியாளர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் அவசியமாகும். அவசர உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பள விவரம்
திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.28,000, மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.21,000, ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு ரூ.23,000, வழக்குப் பணியாளர் ரூ.18,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் தற்காலிகமானது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரும் நாளான்று காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
சென்னை மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பணிக்கான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் ஒட்டி அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
சென்னை - தெற்கு எண் : 1, புதுத்தெரு, வணிக வளாகம் GCC,
முதல் மாடி, ஆலந்தூர், RTO office அருகில். சென்னை - 600 016.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2025
குழந்தைகள் உதவி மையத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். காலக்கெடுப்பிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )