தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் 1,588 பேருக்கு பயிற்சி - அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சென்னை MTC, மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டில் மொத்தம் 1,588 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி 2025

மண்டலம்பொறியியல் பட்டப்படிப்புபொறியியல் டிப்ளமோஇதர பட்டப்படிப்பு
விழுப்புரம்1004090
கும்பகோணம்72136300
சேலம்4745
மதுரை205137
திருநெல்வேலி662293
சென்னை MTC12323719
தமிழ்நாடு SETC303030
மொத்தம்458561569

கல்வித்தகுதி

  • மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பிஏ, பி.எஸ், பி.காம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்டவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு தொழிற்பயிற்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்.

தொழிற்பயிற்சி உதவித்தொகை

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பட்டப்படிப்பு தகுதிகளுக்கு ரூ.9,000 மற்றும் டிப்ளமோ தகுதிகளுக்கு ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும். சான்றிதழ் சரிப்பார்ப்பு திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறும். தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ தகுதிப்பெற்றவர்கள் https://nats.education.gov.in/ என்ற தொழிற்பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விருப்ப மண்டலத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள TA / DA ஆகியவை வழங்கப்படாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் வெளியான நிலையில், அக்டோபரில் 18-ம் தேதி பெறப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அக்டோபர் 29-ம் தேதி வெளியாகும். நவம்பர் இரண்டாம் வாரம் சான்றிதழ் சாரிபார்ப்பு நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி18.10.2025
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு29.10.2025
சான்றிதழ் சரிபார்ப்புதோராயமாக நவம்பர் மாதம் இரண்டாம் வாரம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 7 மண்டலங்களில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணிக்கான அனுபவத்தை தொழிற்பயிற்சியின் மூலம் பெறலாம். ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அல்லது 1-2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment