ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; 37 காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
ஐஐடி மெட்ராஸில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில் குரூப் A, B, C பிரிவில் துணை பதிவாளர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரி, நிர்வாக பொறியாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், உதவி நிர்வாக பொறியாளர், ஜூனிய இன்ஜினியர், ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளில் மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பொறியியல் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
துணை பதிவாளர் 1
மூத்த தொழில்நுட்ப அதிகாரி 8
நிர்வாக பொறியாளர் 1
HVAC அதிகாரி 1
தொழில்நுட்ப அதிகாரி 1
உதவி பதிவாளர் 3
உதவி நிர்வாக பொறியாளர் 1
ஜூனியர் பொறியாளர் 9
ஜூனியர் உதவியாளர் 12
மொத்தம் 37
வயது வரம்பு
இப்பணியிடங்களில் துணை பதிவாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
நிர்வாக பொறியாளர் பதவிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
HVAC அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு 45 வயது வரை இருக்கலாம்.
ஜூனியர் பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் பதவிகளுக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
துணை பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு, அரசு ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் உதவி பதிவாளராக பணியாற்றி இருக்க வேண்டும்.
மூத்த தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் பொறியாளர் உடன் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
HVAC அதிகாரி பதவிக்கு மெக்கானிக்கல் பொறியியலில் பட்டப்படிப்புடன் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு பிசியோதெரபியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
உதவி பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்வு அவசியம். மேனேஜ்மெண்ட், நிதி மற்றும் கணக்கு ஆகியவற்றில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி நிர்வாக பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் பொறியாளர் பதவிக்கு சிவில், எலெக்ட்ரிக்கல், குளிர்பதனம் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் அலல்து 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் உதவியாளர் பதவிக்கு கலை, அறிவியல் பாடங்களில் வணிகத்துடன் சேர்ந்து 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
ஐஐடி மெட்ராஸில் உள்ள இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் நிலை 3 முதல் தொடங்கி நிலை 12 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.தேர்வு செய்யப்படும் முறை
ஐஐடி மெட்ராஸ் உள்ள இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதிக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு, தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு அல்லது நேர்காணல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும். தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்
விண்ணப்பிக்கும் முறை
ஐஐடி மெட்ராஸில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜூனியர் பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 27.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.10.2025
தேர்தல் மற்றும் நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
ஐஐடி மெட்ராஸில் உள்ள பணி செய்ய ஆர்வமாக எதிர்பார்த்துகொண்டு காத்துகொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பத்தின்போது தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியமாக உள்ளது.
.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment