5,000 பள்ளிகளில் விரைவில் ஏஐ கோடிங், பைத்தான் பயிற்சி: பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

 hindutamil-prod%2F2026-06-13%2Fx5uyxt4f%2F4

விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

துறைச் செயலர் சந்திரமோகன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ஜெயந்தி, அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலர் இரா.சுதன், துறை இயக்குநர்கள் எஸ்.கண்ணப்பன் (பள்ளிக்கல்வி), பி.ஏ.நரேஷ் (தொடக்கக் கல்வி), சசிகலா (அரசுத் தேர்வுகள்), சுகன்யா (தனியார் பள்ளிகள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன், உறுப்பினர் எம்.பழனிசாமி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் வளங்கள்

கூட்டத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

தேர்ச்சியில் சாதனை

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.3 சதவீதம் பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சாதனைதான்.

ஆனால், இந்த தேர்ச்சி போதாது. தேர்ச்சியில் விடுபட்டவர்கள், சக மாணவர்களின் வேகத்துக்கு வராதவர்கள், அதாவது என்னைப் போல மெதுவாக கற்பவர்களும் தேர்ச்சி வட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு வெறும் கூட்டல், கழித்தல், பாடங்கள் மனப்பாடம் என்று இருந்த தலைமுறையை மாற்றி, 5 ஆயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பின்னர், தமிழகம் முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும். முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போது அவர்களது மனநலன்மேம்படும்.

போதைப் பழக்கம் போன்ற தவறான பாதைகளுக்கு செல்ல மாட்டார்கள். அதேபோல, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை முதல் கழிப்பறை வரை அனைத்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

 hindutamil-prod%2F2026-06-13%2F7w8gxj00%2F18

வேலைவாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் டிஎன்​பிஎஸ்​சி, எஸ்​எஸ்​சி, ரயில்வே தேர்​வு​களுக்கு சென்​னை​யில் இலவசப் பயிற்சி வகுப்​பு​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இது தொடர்​பாக வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் இயக்​குநர் சி.பழனி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வேலை​வாய்ப்பு, பயிற்​சித்துறை​யின் கீழ் சென்னை கிண்​டி​யில் இயங்​கிவரும் மாநில தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தில் உளவியல் பகுப்​பாய்வு சோதனை​களு​டன் வழி​காட்​டு​தல், பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு தொழில்​நெறி வழி​காட்​டு​தல் மற்​றும் ஆலோ​சனை வழங்​குதல், போட்​டித் தேர்​வு​களுக்கு நேரடி பயிற்சி வகுப்​பு​கள், மாதிரித் தேர்​வு​கள் நடத்​துதல், கல்வி தொலைக்​காட்சி வாயி​லாக போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளித்​தல் என பல்​வேறு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போது டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்வு மற்​றும் குரூப்​-1, குரூப்​-2, குரூப்-4 தேர்​வு​கள், ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு மற்​றும் குரூப்​-டி தேர்​வு, எஸ்​எஸ்சி சிஜிஎல் தேர்வு ஆகிய​வற்​றுக்கு ஜூன் 1 முதல் பயிற்சி வகுப்​பு​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​களுக்​கான வகுப்​பு​கள் திங்​கள், புதன், வெள்ளி ஆகிய நாட்​களிலும், ரயில்​வே, எஸ்​எஸ்சி தேர்​வு​களுக்​கான வகுப்​பு​கள் செவ்​வாய், வியாழன் ஆகிய நாட்​களிலும் காலை 10 ​முதல் மதி​யம் 1 மணிவரை நேரடி​யாக​வும், அதே நாட்​களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை ஆன்​லைன் வழி​யாக​வும் நடை​பெறுகின்​றன.

போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராகிவரும் மாணவர்​கள் இந்த பயிற்சி வகுப்​பு​களில் நேரடி​யாக கலந்​து​கொண்டு பயன்​பெறலாம்.

இதில் சேர விரும்​புவோர் ஆதார் அட்டை நகல், பாஸ்​போர்ட் அளவு போட்​டோவுடன் கிண்டி திருவிக தொழிற்​பேட்டை பேருந்து நிலை​யம் (ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) அருகே உள்ள டான்சி கட்​டிடத்​தின் முதல் தளத்​தில் (ஏ-28) இயங்​கும் மாநில தொழில்​நெறி வழி​காட்டு மையத்தை (தொடர்பு எண்: 9361566648) நேரில்​ அணுகலாம்​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்ட விவரங்களை எவ்வாறு EMIS portal-லில் பதிவு செய்வது?

 EMIS - UPDATE SCHEMES DISTRIBUTION DETAILS

➡️நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட

▪️பாடக்குறிப்பேடு

▪️சீருடை

▪️காலணி

▪️புத்தகப்பை

▪️அட்லஸ்

போன்ற விலையில்லா நலத்திட்ட விவரங்களை பள்ளியின் EMIS portal-லில் பதிவு செய்தல்.

👇👇👇👇

https://youtu.be/xNxuGaVdmDU?si=0i4CJa8sPQC47DWk

♻️குறிப்பு :

இதற்கு முன் Schemes விவரங்களை TNSED SCHOOLS Mobile App-யில் பதிவு செய்திருப்போம்.ஆனால் இந்த வருடம் முதல் EMIS PORTAL-யில் பதிவு செய்ய வேண்டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜூன் 21ல் நடக்கும் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

 நீட் தேர்வில் குளறுபடி நடந்ததை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பதில் 3 மணி 15 நிமிடங்கள் என அறிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை

நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் நேரம் வீணாகக் கூடாது என்பதற்காக நடவடிக்கை; ஜூன் 21ல் நடக்கும் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNPSC - ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு அறிவிக்கை - நாள்.11.06.2026

 725937

TNPSC - ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கை எண்.4/2026 நாள்.20.05.2026-ன் பிற்சேர்க்கை எண்.4A/2026, நாள்.11.06.2026-க்கான செய்தி வெளியீடு.

Notification - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு

 725840

3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு.👇👇👇

நீங்கள் Google Drive வாயிலாக இதனைத் திறந்து வாசிக்கலாம்.

https://drive.google.com/file/d/1tQdyBg9VZnPrWkYZ5qH38cGk5B7IV_75/view?usp=drive_link

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பாலிடெக்னிக் மாணவர்கள் பழைய அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு

இதுதொடர்​பாக, உயர்​கல்​வித் துறை செயலர் அருண் ராய் வெளி​யிட்​டுள்ள அரசாணை: பாலிடெக்​னிக் பொறி​யியல் டிப்​ளமா படிப்பை முடித்து தேர்​வெழுத வழங்​கப்​பட்ட வாய்ப்​பு​களை​யும் முடித்​து, தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்​களை (அரியர்​ஸ்) வைத்​துள்ள மாணவர்​கள், தேர்​வில் கலந்​து ​கொள்ள 2015, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2025-ம் ஆண்​டு​களில் சிறப்பு வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் சிறப்பு வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டும், செமஸ்​டர் தேர்​வு​களில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்​துள்ள மாணவர்​கள், வரும் செமஸ்​டர் தேர்​வு​களில் தங்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கு​மாறு கோரிக்​கைகள் வைத்து வரு​வ​தாக​வும், அம்​மாணவர்​களின் நலன் கரு​தி, 2026 அக்​டோபர், 2027 ஏப்​ரல் செமஸ்​டர் தேர்​வு​களின் போது மட்​டும், நீண்ட கால​மாக அரியர் வைத்​துள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்​களுக்கு சிறப்பு வாய்ப்பு மூலம் தேர்​வெழுத​வும், உரிய தேர்வு கட்​ட​ணத்தை நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடு​மாறும் தொழில்​நுட்​பத் தேர்​வு​கள் வாரி​யத்​தின் தலை​வர் அரசை கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இதை ஏற்​று, பாலிடெக்​னிக் டிப்​ளமா படிப்பை முடித்து பாடங்​களில் தேர்ச்சி பெறாமல் உள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்​களுக்கு வரும் அக்​டோபர் மற்​றும் 2027 ஏப்​ரல் செமஸ்​டர் தேர்​வு​களின்​போது மட்​டும் தேர்​வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கி அரசு ஆணை​யிடு​கிறது. அம்​மாணவர்​களின் சிறப்பு வாய்ப்​புக்​காக பதிவு கட்​ட​ண​மாக ரூ.750-ம் ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ் கட்​ட​ண​மாக ரூ.40ம், விண்​ணப்ப கட்​ட​ண​மாக ரூ.20ம், ஒரு பாடத்​துக்கு தேர்வு கட்​ட​ண​மாக ரூ.65-ம் நிர்​ண​யித்து அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான Spouse Certificate

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான Spouse Certificate 

Spouse Certificate - Download here

பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக DSE செயல்முறைகள்!!

பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக DSE செயல்முறைகள்!!

27.05.2026 அன்று பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2026-27 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்திட தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் / ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

1. அனைத்து உடற்கல்வி பாடவேளையில் அதற்கான எடுக்கப்பட வேண்டும். இயக்குநர்கள் /ஆசிரியர்களும் உடற்கல்வி பாடத்திட்டத்தை பயன்படுத்தி வகுப்புகள்

 2. பள்ளி வேலைநேரம் முடிந்த பின் விளையாட்டில் விருப்பமுள்ள மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விளையாட்டிற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

3. அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாத மைதானங்கள் உள்ள பள்ளிகளின் விவரங்களை முதன்மை உடற்கல்வி ஆய்வளர்கள் அலுவலகத்திற்கு உடற்கல்வி உடனடியாக தெரிவித்திட அனைத்து மாவட்ட ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும் (to be filled in google sheet).

4. தங்களது மாவட்டங்களில் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்த பள்ளிகளின் பெயர் மற்றும் அவை சிறந்து விளங்கும் விளையாட்டின் பெயர் ஆகியவற்றை உடனடியாக முதன்மை உடற்கல்வி ஆய்வளர்களுக்கு தகவல் அளித்திடவும், மேற்காண் விவரங்களை அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும் தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் (to be filled in google sheet).

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

எஸ்எஸ்எல்சி துணை தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 hindutamil-prod%2F2026-06-11%2F4b9wn4uq%2F1

அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கல்) ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போது தேர்வர்களின் நலனைக் கருதி இந்த கால அவகாசம் ஜூன் 11 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு `(பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மட்டும்)` தலா ₹3,000 ரொக்கப்பரிசு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்!

 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு `(பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மட்டும்)` தலா ₹3,000 ரொக்கப்பரிசு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்!

720202

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்

hindutamil-prod%2F2026-06-09%2Fb22trw9r%2F1124242121

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பொது இடமாறுதலுக்கு ஜூன் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது. எனவே, மாறுதல்கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பள்ளிக் கல்வித் துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித் துறையில் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-27 UDISE STUDENT PROGRESSION REGARDING

2026-27 UDISE STUDENT PROGRESSION REGARDING

2025-26 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு PROGRESSION ACTIVITY மூலம் UDISE PROMOTION வழங்குதல் வேண்டும். இப்பணியை கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றி விரைந்து முடிக்குமாறு இதன் மூலம் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

🎯 click website

https://udiseplus.gov.in

🎯Login For All Modules

🎯Select Tamilnadu & Go

🎯Student Module Login

🎯School UDISE id & Password

🎯Select 2026-27

🎯Student Movement and Progression

🎯Select Progression Activity

🎯Select Class & Section

🎯Enter 2025-26 Student Details and Update

🎯Give Finalize

மேற்கண்ட வழிமுறைகள் மூலம் ஒவ்வொரு வகுப்பிற்கு Progression செய்தல் வேண்டும். அதே பள்ளியில் 2026 -27 படிக்கும் மாணவர்களுக்கு Studying in Same School  என பதிவு செய்து பிரிவு பதிவு செய்ய வேண்டும். 

2026-27 நமது பள்ளியில் படிக்காமல் வேறு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு Left School with TC/without TC என பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து வகுப்புகளுக்கும் Progression முடித்த பின்னர் Finalize Progression தேர்வு செய்து  Submit கொடுக்க வேண்டும். 

 Progression Activity பதிவு செய்வது குறித்த மாடல் வீடியோ லிங்க்

https://youtu.be/Lhqvbzb48GA

*குறிப்பு:*

2026-2027 UDISE+ students progression செய்யும்போது கீழ்கண்ட விபரத்தினை பதிவு செய்யும் போது கூடுதல் கவனம் தேவை

1) LKG முதல்  8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற நடைமுறை இருப்பதால் எந்தவொரு மாணவரும் பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் படிக்கவில்லை, வயது இல்லை போன்ற காரணங்களால் Repeater/ not Promoted  என்ற பதிவு இருக்கக்கூடாது. மீறினால் சார்ந்த தலைமை ஆசிரியர்/ முதல்வர் பொறுப்பாவார்.

2) கடந்தாண்டிற்கான students attendance/ mark percentage பதிவு செய்யும் போது தோராயமாக போடக்கூடாது, பதிவேட்டில் உள்ளவாறு பதிவு செய்ய வேண்டும்.

3) drop out / migration பதிவு செய்யும் போது மாணவர்களின் தற்போதைய நிலவரத்தை பெற்றோரிடம் உறுதி செய்த பிறகுதான் பதிவு செய்ய வேண்டும்.

4) கடைசி தேதி: 15.06.2026