களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்
Marriage Advance Apply Instructions - Download here
Education News, Employment News in tamil
களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்
Marriage Advance Apply Instructions - Download here
பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடத்தப்பட்டது
இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்கள் முதன்முறையாக டிஜிட்டல் முறையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பிடும் முறையில் கோளாறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷன்யம் பரத்வாஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள்கள் மதிப்பிடும் முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக வரும் செய்தி தவறானது. டிஜிட்டல் முறை மூலம் மதிப்பிடும் பணிகள் சீராகவும், இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சிறப்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மதிப்பிடும் முறையை செயல்படுத்தியதற்காக சிபிஎஸ்இ வாரியம் பெருமை கொள்கிறது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை. எனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி மதிப்பிடும் பணிகள் முடிவடையும். ஏற்கெனவே அறிவித்தபடி மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது
தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர் - தமிழ்நாடு அரசு
3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!
இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை.👇👇👇
DSE - Maternity Leave 3rd and above Child - Download here
தகவல் தொகுப்பு....
BY N.PALANISELVAM,
PGT, COMMERCE,
GHSS, HIGHWAVYS - 625515
UTHAMAPALAYAM - TK
THENI - DT
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!
👇👇👇
DSE - Summer Season Instructions.pdf
அரசு பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், கணினிகள் ஆகியவற்றின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 6,992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
திறன்மிகு வகுப்பறைக்காக ஒலி-ஒளி அமைப்புகள், இன்டராக்டிவ் பிளாட் பேனல்கள், டிஜிட்டல் கற்றல் மேலாண்மை அமைப்புகள் (எல்எம்எஸ்) பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் தடையற்ற இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.
கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.
மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது
பள்ளி மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்.30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ம் பருவ மதிப்பீடு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.
இத்தேர்வுகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஏப்.30-ம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
நண்பர்களே வணக்கம் 🙏
ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23-ம் தேதிக்குள் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.