Accenture நிறுவனத்தில் Application Developer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

 

Accenture நிறுவனத்தில் Application Developer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

Application Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application Developer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Application Developer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Accenture தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் University Research Fellow வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் University Research Fellow வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது University Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

University Research Fellow பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 5,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து envt@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.31,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 ரூ.31,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது JRF / Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JRF / Project Associate பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


JRF ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ. 31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – ரூ.37,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – ரூ.37,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024-2025 அறிவிப்பு - DGE Letter

 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு TNCMTSE ) - 2024-2025 கல்வியாண்டு -தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்துதல் தொடர்பாக DGE செயல்முறைகள்


Click Here to Download - DGE - TNCMTSE 2024 - 25 - Notification - Director Letter - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EMIS - New Update - DEE School Infrastructure Details Upload ( Video )

 IMG_20241127_081421

DEE SCHOOL INFRASTRUCTURE DETAILS SUBMIT | SUBMIT CFSIDS FORM | TNEMIS NEW UPDATE | CIVIL UPLOAD - 

 TNEMIS


The CFSIDS Assessment of Infrastructure Needs...


அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். 


பள்ளி உட்கட்ட அமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்வதற்கான Option தற்பொழுது enable செய்யப்பட்டுள்ளது. 


அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் School login ➡️Dashboard ➡️ Approval ➡️SIDS என்ற தலைப்பில் ➡️ DEE SCHOOL INFRASTRUCTURE என்ற தலைப்பின் கீழ் விவரங்களை எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

👇👇👇👇👇

https://youtu.be/WIVdNY-t6Fw?si=Yi9CuqaO_5OKiadb



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NAS Exam 4.12.2024 - Selected Schools List Published

 
NAS Exam 4.12.2024 - School List

 04.12.2024 அன்று NAS PARAKH 2024 ( தேசிய அடைவுத்தேர்வு 2024 ) 3 , 6 மற்றும் 9 வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. இத்தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெறவுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கீழ்க்கண்ட ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


NAS school list in Thanjavur district - Download here

NAS school list in Trichy district - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Half Yearly Practical Exam Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024-2025 அறிவிப்பு

 
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு TNCMTSE ) - 2024-2025 கல்வியாண்டு -தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்துதல் தொடர்பாக DGE செயல்முறைகள் ...

DGE - TNCMTSE 2024 - 25 Notification | Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NAS / SEAS EXAM 3 STD LAST 4 YEAR QUESTION PAPER

 NAS / SEAS EXAM 3 STD LAST 4 YEAR QUESTION PAPER 

* 2013-14 Question Paper - Download here

* 2014-15 Question Paper - Download here

* 2015-16 Question Paper - Download here

* 2016-17 Question Paper - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பிளாக் டீ இப்படி குடிங்க... நீண்ட ஆயுளுடன் இருப்பீங்க..!

 பெரும்பாலான நபர்கள் விரும்பி பருகக் கூடிய ஒரு பானம்தான் பிளாக் டீ. நம்மில் நிறைய பேருக்கு நம்முடைய காலையை ஒரு கப் பிளாக் டீ உடன்  ஆரம்பித்தால் தான் அந்த நாளே நன்றாக இருக்கும். எனர்ஜி பானங்களில் முன்னிலை வகிப்பது பிளாக் டீ. சோர்வாக இருந்தால் உடனடியாக ஒரு பிளாக் டீ குடித்து பார்க்கலாம் என்று தான் நாம் யோசிப்போம். அதன்பிறகு தான் பிற சிகிச்சைகளுக்கே செல்வோம்.

பிளாக் டீ என்பது நம்முடைய சோர்வை போக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நன்மைகளை நமது ஆரோக்கியத்திற்கு தருகிறது. பிளாக் டீயில் நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. எனவே பிளாக் டீயை தினமும் சரியான அளவு குடித்து வந்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது அளிக்கும்.

பிளாக் டீ நம்முடைய இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தினமும் பிளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் மூலமாக கூட நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிளாக் டீ, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் என்றும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாக் டீயில் காஃபின் உள்ளது. மேலும் இதில் L-தியானைன் என்ற அமினோ அமிலமும் காணப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து நம்முடைய கவனிப்பு திறனை அதிகப்படுத்துகிறது. கவனிப்புத்திறனை அதிகப்படுத்துவதற்கு பிளாக் டீ உதவும் என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சேர்க்கப்படாத பிளாக் டீ, ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும். மேலும் இதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான திறன் நமக்கு கிடைக்கிறது.

News18

எனவே தினமும் பிளாக் டீ குடிப்பது நிச்சயமாக நமக்கு நன்மை தரும். ஆனால் முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ குடிக்க முயற்சி செய்யுங்கள். பிளாக் டீயில் காணப்படும் பாலிபீனால்கள் ஒரு சில வகையான புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்று நோய்களுக்கு எதிராக பிளாக் டீ செயல்படுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் பிளாக் டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் இதனால் நம்முடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம். பிளாக் டீயில் காணப்படும் காஃபின் நம்மை அதிக ஆக்டிவாக வைத்து தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பிளாக் டீயை மிதமான அளவு குடிப்பது நல்லது.

இத்தனை நன்மைகள் தரும் பிளாக் டீயை செய்வது மிகவும் எளிது. இதற்கு 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் 1/2 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இதில் ஒரு மூடி போட்டு 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். ஒரு டம்ளரில் பிரவுன் சுகர் சேர்த்து அதில் நாம் தயார் செய்துள்ள பிளாக் டீயை வடிகட்டி சேர்க்கவும். சுவையான பிளாக் டீ இப்போது தயாராக உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரக நோய் ஏன் நீரிழிவு நோயை மோசமாக்குகிறது..? மருத்துவர் தரும் விளக்கம்..!

 

நீரிழிவு நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. இதில் ஒரு நோய் இருந்தால் உங்களுக்கு இருந்தால் கூட மற்றொன்றை மோசமாக்கும். ஒருவேளை ஒருவருக்கு இந்நோய் இரண்டும் இருக்கும்போது இந்த நிலைமைகளை நிர்வகிப்பது இன்னும் கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு (CKD) நீரிழிவு நோய், குறிப்பாக டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நீரிழிவு தொடர்பான உயர் இரத்த சர்க்கரை படிப்படியாக சிறுநீரகத்தின் தமனிகளை மோசமாக்குகிறது. இதனால் உடல் உறுப்புகள் ரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றுவதை கடினமாக்குகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீரிழிவு நெஃப்ரோபதி - மெதுவாக முன்னேறும் நிலை - இறுதி-நிலையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்" என்று குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் மோஹித் கிர்பத் கூறுகிறார்.

சிறுநீரக நோய் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரையை கையாளும் உடலின் திறனை பாதிக்கிறது. இது நீரிழிவு நோயை மிகவும் கடினமாக்குகிறது என டாக்டர் கிர்பத் குறிப்பிடுகிறார். “சாதாரண சிறுநீரக செயல்பாடு ரத்த இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது; இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள நபர்களில், இன்சுலின் அனுமதி குறைகிறது. இது இரத்த இன்சுலின் செறிவை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அடிக்கடி ரத்தச் சர்க்கரை அளவு குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதன் விளைவாக நீரிழிவு நோயை நிர்வகிப்பதை கடினமாக்குகிறது, ”என்று டாக்டர் கிர்பத் கூறுகிறார்.

News18

மேலும், இதய நோய் உள்ளிட்ட நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தும் மற்றொரு ஆபத்து காரணியான உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோயால் அடிக்கடி கொண்டு வரப்படுகிறது. " சிறுநீரக நோயால் ஏற்படும் திரவ தேக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு நிலையான இரத்த சர்க்கரை அளவை சவாலாக மாற்றுகின்றன. ஏனென்றால் சிறுநீரகங்களால் நாம் சாப்பிடும் மருந்துப் பொருட்களை முழுமையாகச் செயலாக்கி அகற்ற முடியாததால், பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்” என்று டாக்டர் கிர்பத் எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி சிறுநீரக நோய் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் திரவத்தை தக்கவைப்பதால், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க கடினமாக உள்ளது. டாக்டர் கிர்பத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் சரிசெய்யப்பட வேண்டியிருக்கும். ஏனெனில் சிறுநீரகங்கள் மருந்துகளை செயலாக்க மற்றும் வெளியேற்றும் திறன் குறைவாக இருப்பதால், பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

“சிறுநீரக நோய்க்கும் நீரிழிவு நோய்க்கும் இடையிலான தொடர்பு ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. இதன் காரணமாக இந்த இரு நோய்களும் உள்ள நபர்கள் தங்கள் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேலும் மோசமடையாமல் தடுக்க கவனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்” என்று டாக்டர் கிர்பத் வலியுறுத்துகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இதயத்திற்கு நலன் தரும் பாதாம்… குளிர் காலத்தில் எப்படி சாப்பிடலாம்?

 தற்போது நாடு முழுவதும் குளிர்காலம் துவங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் கடும் குளிர் விழ ஆரம்பித்துள்ளது. இந்த குளிர்காலத்தில் நாம் பல்வேறு வகையான பருப்புகள் அல்லது உலர் பழங்களை சாப்பிடுகிறோம். ஏனெனில் அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.

இந்த முக்கியமான பருப்புகளில் ஒன்று பாதாம். பாதாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சு மாதல்கர் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.

குளிர்காலத்தில் அனைவரும் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாதாம் உடலில் ஆற்றலை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து பாதாம் சாப்பிட வேண்டும். இந்த பாதாமை ஊறவைத்தோ அல்லது ஊற வைக்காமலோ சாப்பிடலாம். பாதாமில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனுடன், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இதில் உள்ளன, இவை நம் உடலுக்கு நன்மை தரும்.

மேலும், இதய கோளாறு உள்ளவர்கள் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அதிக ஆற்றலை வழங்குவதுடன் இதயத்திற்கும் நல்லது. இதை தவிர்த்து, பாதாமை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக சாப்பிட முடியாத குழந்தைகளுககு பொடியாக இடித்து பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

பாதாம் பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. அதே சமயம் எலும்புகளும் வலுவடையும். பாவால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதனால் முடிந்தவரை இந்த குளிர்காலத்தில் பாதாம் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களை வயதான தோற்றத்தில் காண்பிக்கும் 3 பழக்கங்கள்… உடனே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்...

 நம்மில் சிலருக்கு வயது குறைவானதாக இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களால் அவர்களுக்கு தோற்றம் சற்று முதுமை அடைந்தவரை போன்று காணப்படும். அந்த தீய பழக்கங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் வயதுக்கு ஏற்ற தோற்றத்தை அவர்களால் பெற முடியும்.

இந்த பிரச்சனையானது இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை காண முடிகிறது. பின்வரும் பழக்கங்களை தவிர்த்துக் கொண்டால் நமது இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

உடற்பயிற்சியை தவிர்த்தல் : தேவைக்கு ஏற்றதை விட அதிக அளவு மக்கள் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு போதிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆனால் உடற்பயிற்சி பழக்கம் குறைவதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு, குறைந்த வயது உடையவராக இருந்தாலும் அவரது தோற்றம் வயது அதிகமானவரை போல் மற்றவர்களுக்கு தெரிகிறது.

சூரிய ஒளி குறைபாடு: வைட்டமின் ‘டி’ சத்தை பெறுவதற்கு போதிய அளவு சூரிய ஒளி நம் மீது படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ‘டி’ குறைபாடு காரணமாக முதுமை அடைந்த தோற்றம் உங்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படலாம்.

அதிகப்படியான ஸ்கிரீன் டைம்: தொழில்நுட்ப வளர்ச்சி, தேவை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களுக்காக லேப்டாப், மொபைல் போன்ற ஸ்கிரீன் களில் நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தேவையை மீறி அளவுக்கு அதிகமாக ஸ்கிரீனில், ஸ்கிரீனை பார்க்கும்போது, பயிற்சி போன்ற, பயிற்சி சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடல் முதுமை அடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பல காரணங்கள் இருந்தாலும் இந்த 3 பழக்கங்களை தவிர்த்தால் உடலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip