நம்மில் சிலருக்கு வயது குறைவானதாக இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களால் அவர்களுக்கு தோற்றம் சற்று முதுமை அடைந்தவரை போன்று காணப்படும். அந்த தீய பழக்கங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் வயதுக்கு ஏற்ற தோற்றத்தை அவர்களால் பெற முடியும்.
இந்த பிரச்சனையானது இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை காண முடிகிறது. பின்வரும் பழக்கங்களை தவிர்த்துக் கொண்டால் நமது இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உடற்பயிற்சியை தவிர்த்தல் : தேவைக்கு ஏற்றதை விட அதிக அளவு மக்கள் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு போதிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால் உடற்பயிற்சி பழக்கம் குறைவதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு, குறைந்த வயது உடையவராக இருந்தாலும் அவரது தோற்றம் வயது அதிகமானவரை போல் மற்றவர்களுக்கு தெரிகிறது.
சூரிய ஒளி குறைபாடு: வைட்டமின் ‘டி’ சத்தை பெறுவதற்கு போதிய அளவு சூரிய ஒளி நம் மீது படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ‘டி’ குறைபாடு காரணமாக முதுமை அடைந்த தோற்றம் உங்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படலாம்.
அதிகப்படியான ஸ்கிரீன் டைம்: தொழில்நுட்ப வளர்ச்சி, தேவை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களுக்காக லேப்டாப், மொபைல் போன்ற ஸ்கிரீன் களில் நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தேவையை மீறி அளவுக்கு அதிகமாக ஸ்கிரீனில், ஸ்கிரீனை பார்க்கும்போது, பயிற்சி போன்ற, பயிற்சி சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடல் முதுமை அடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பல காரணங்கள் இருந்தாலும் இந்த 3 பழக்கங்களை தவிர்த்தால் உடலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
No comments:
Post a Comment